Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, March 2, 2009

இன்று பிளஸ் 2 எழுதும் 6.5 லட்சம்! மாணவ, மாணவியர்: தேர்வைக் கண்காணிக்க 4,000 பேர் நியமனம்: தினமலர்

இன்று பிளஸ் 2 எழுதும் 6.5 லட்சம்! மாணவ, மாணவியர்: தேர்வைக் கண்காணிக்க 4,000 பேர் நியமனம்: தினமலர்: "இன்று பிளஸ் 2 எழுதும் 6.5 லட்சம்! மாணவ, மாணவியர்: தேர்வைக் கண்காணிக்க 4,000 பேர் நியமனம்

மார்ச் 02,2009,00:00 IST

சென்னை: இன்று துவங்கிய பிளஸ் 2 தேர்வில் 6.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வில் மாணவ, மாணவியர்களுக்கு வசதியாக, பதட்டம் குறைய 15 நிமிடங்கள் அதிகமாக தரப்பட்டுள்ளது. அதே சமயம் காப்பியடிப்பதைக் கண்காணித்து தடுக்க 'பறக்கும் படைகள்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவங்குகின்றன. தற்போது, தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறுவது இன்றியமையாததாக உள்ளது. பிளஸ் 2 தேர்வில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் பொன் போன்றதாக கருதப்படுகிறது.




மூன்று லட்சத்து 42 ஆயிரத்து 732 பேர் மாணவிகள்: இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று துவங்குகின. பள்ளிக் கல்வித் துறையின் தேர்வு அட்டவணைப்படி தமிழ் முதல் தாளுடன் தேர்வுகள் இன்று துவங்குகின. இன்று துவங்கி வரும் 23ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களாகவே நடந்து வந்தது. இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.இன்று முதல் எழுத்துத் தேர்வுகள் துவங்கின. தொடர்ந்து 23ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5,040 பள்ளிகளில் இருந்து ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 632 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.இதில், மூன்று லட்சத்து 4 ஆயிரத்து 900 பேர் மாணவர்கள். மூன்று லட்சத்து 42 ஆயிரத்து 732 பேர் மாணவிகள். கடந்தாண்டை விட 54 ஆயிரத்து 326 பேர், அதாவது, 9.17 சதவீதம் பேர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.




இத்தேர்வுகளுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1,738 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.புதுச்சேரியில் 29 மையங்களில் தேர்வு நடக்கிறது. அங்குள்ள 87 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 965 மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு நடக்கும் அனைத்து நாட்களும் மாணவர்கள் அனைவரும் 10 மணிக்குள் தங்கள் தேர்வு மையத்திற்கு வந்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 5 நிமிடம்: மாணவர்களுக்கு, வினாத்தாளை படிக்கவும், தேர்வு முடிந்த பின் விடைத்தாளை படிக்கவும் கடந்தாண்டு 10 நிமிடங்கள் கூடுதலாக தரப்பட்டது. இந்தாண்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கூடுதலாக 15 நிமிடங்கள் என தரப்பட்டுள்ளது.




இதை, மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. மேலும், தேர்வு அறைக்குள் 10:15 மணி வரை நுழைய அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு ஏற்கனவே வினாத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட எஸ்.பி., கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரின் கண்காணிப்பின் கீழ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.




சென்னையில் நேற்று நடந்த பள்ளிக் கல்வித்துறை இணையதள துவக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''தேர்வு நடக்கும்போது சிறு தவறுகள் கூட நடக்காத வகையில் முழுமையாக கண்காணிக்க 'பறக்கும் படைகள்' அமைக்கப்பட்டு, அதில் தமிழகம் முழுவதும் 4,000 பேருக்கும் மேல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள், தேர்வு மையங்களில் திடீரென நுழைந்து சோதனை நடத்துவர். மேலும், தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் இருக்கும் இடமும் பலத்த பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது,'' என குறிப்பிட்டுள்ளார்.




தவிரவும், இத்தடவை தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் வழக்கமாக அதிக மதிப்பெண் எடுக்கும் போட்டி உணர்வில் அதற்கான முழுத்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அதே சமயம் இப்படிப்பு முடிந்ததும் என்ன மேற்படிப்பு என்பதை, உலகசூழ்நிலை உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய வித்தியாசமான நிலையில் உள்ளனர். குறிப்பாக வேலைவாய்ப்பு தரும் கல்வி குறித்து பலமுறை சிந்தித்து முடிவு செய்யும் சூழ்நிலையும் மாணவ, மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும் இத்தடவை கூடுதல் சுமையாக அமைந்திருக்கிறது."