Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, September 18, 2009

தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு துவங்கியது-அலைமோதும் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 17ம் தேதி தான் என்றாலும் சென்னை தற்போதே கலைகட்ட துவங்கிவிட்டது. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தின் தென் பகுதிக்கு செல்லும் ரயில்கள் அனைத்திலும் டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதை அடுத்து இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்படுகிறது.

கூட்டத்தை கட்டுப்படுத்து அரசு கோயம்பேட்டில் வழக்கமாக இயங்கும் 4 கவுன்டர்களுடன் கூடுதலாக 2 கவுன்டர்களை திறந்துள்ளது. இதை தவிர்த்து தாம்பரத்திலும் 1 கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கவுன்டர்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இங்கு 430 விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா [^], புதுச்சேரி [^] போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளம் அடக்கம்.

இதில் மக்களிடையே தற்போது ஏசி பஸ்களுக்கு தான் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து நீண்ட வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் ஏசி பஸ் தான் வேண்டும் என அடம்பிடித்து வருகின்றனர். ஆனால், ஏசி பஸ்கள் 50 தான் இருப்பதால் அவற்றுக்கான டிக்கெட் விரைவில் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது.

--
நன்றி,
http://thatstamil.oneindia.in/news/2009/09/16/tn-reservation-begins-for-deepavali-special-buses.html

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

Tuesday, September 15, 2009

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோலாகலம்

தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்கா வெள்ளைப் புலி ஈன்ற இரண்டு வெள்ளைப் புலி குட்டிகளுக்கு "ஆகான்ஷா', "நம்ப்ரதா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 வண்டலூர் உயிரியல் பூங்காவில், டில்லி தேசிய பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகையை சேர்ந்த பீஷ்மர் என்ற ஆண் வெள்ளை புலியும், அனு என்ற பெண் வெள்ளை புலியும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பெண் வெள்ளைப் புலி அனு, கடந்த மார்ச் மாதம் மூன்று குட்டிகளை ஈன்றது. முதல் முறையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகையை சேர்ந்த வெள்ளைப் புலி, குட்டிகளை ஈன்றதால் ஊழியர்களும், அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒரு குட்டி குடல் வளர்ச்சியடையாத காரணத்தால் இறந்தது. தாய் புலியும், இரண்டு குட்டிகளையும் ஊழியர்கள் கவனமாக பராமரித்து வருகின்றனர். சில மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாக கொண்டிருந்த குட்டிகள், மாட்டிறைச்சியையும் உண்ணத் துவங்கின. தற்போது, இறைச்சியை உண்ண வெள்ளைப்புலி குட்டிகள் நன்கு பழகிவிட்டன. இதனால், காலையில் ஒரு கோழியும், மாலையில் மாட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது. தற்போது, தாய் புலியுடன், குட்டிகளும் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

தாயுடன் குட்டிகள் ஓடி விளையாடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெள்ளைப் புலி குட்டிகளின் அட்டகாசங்களை ரசிப்பதற்காகவே தினசரி ஏராளமானோர் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். தற்போது, வெள்ளைப்புலி குட்டிகளுக்கு ஆகான்ஷா மற்றும் நம்ப்ரதா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூங்கா அதிகாரிகள் பெயர் கூறி அழைத்தால் வெள்ளைப்புலி குட்டிகள் ஓடி வருகின்றன.



--
நன்றி,
தினமலர்.

Monday, September 14, 2009

இன்ஜினியரிங் கல்லூரிகளில் 32 ஆயிரம் இடங்கள் காலி

திருச்சி: ""பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பு குறைவால், தமிழக பொறியியல் கல்லூரிகளில் 32 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன,'' என்று தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கணேசன் திருச்சியில் கூறினார்.

இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: திருச்சியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) நிறுவனம் நடப்பாண்டு துவக்கப்பட்டு பகுதிநேர வகுப்புகள் முதல் கட்டமாக துவங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து முழு நேர வகுப்பு துவங்கப்படவுள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப பூங்கா (என்.ஐ.டி.,)வில் தற்காலிகமாக ஐ.ஐ.எம்., வகுப்புகளும், அதில் பயிலும் மாணவர்களின் விடுதிகளும் செயல்படவுள்ளன.



தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பயில மேல்நிலை கல்வியில் வெற்றி பெற்றால் மட்டும் போதுமானது. ஆனால், தமிழகத்தில் ஜாதி வாரியாக பல்வேறு முறைகள் அமலில் உள்ளன.



 தமிழகத்தில் கடந்த ஆண்டு 18 ஆயிரமும், நடப்பாண்டு 32 ஆயிரமும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடங்கள் காலியாகவுள்ளன. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) துறையில் இடங்கள் காலியாக உள்ளன. பொருளாதார மந்த நிலை மற்றும் வேலை வாய்ப்பு குறைவு காரணங்களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வாய்ப்புள்ளது. இதற்காக புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் துவக்க அனுமதி தர தடை செய்யவில்லை. சமச்சீர் கல்வியை வரவேற்கிறோம்.



இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே நான்கு வகை கல்வி முறை உள்ளது. சமச்சீர் கல்வி முறை வந்தால் தொடக்கக் கல்வி தரமும் உயரும், உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும். அதனால், சமச்சீர் கல்வி முறையை வரவேற்கிறோம்.



பொது கல்விதிட்டம் தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் அனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி மற்றும் திட்ட கமிஷன் துணைத்தலைவர் நாகநாதன் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து ஆய்வறிக்கை மூலம் சில பரிந்துரை அளிக்கவுள்ளனர்.  அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் ஏற்கப்படவுள்ளன. இவ்வாறு கணேசன் கூறினார்.



--
நன்றி,
தினமலர் நாளிதழ் (www.dinamalar.com)

எந்தப் பகுதிக்கு பணம் அனுப்பினாலும் உடனடியாக சேரும்:அஞ்சல் துறை சேவையில் மற்றொரு புதுமை

சென்னை: ""அஞ்சல் துறையில் உடனடி பண பரிமாற்றம் செய்வதற்காக "யூரோ-ஜீரோ' திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளோம். அத்திட்டத்தின் படி, உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம்,'' என்று அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை துவக்கிவைத்த மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.



அஞ்சல்துறையின் சரக்கு விமான சேவை துவக்க விழா சென்னை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில், அஞ்சல் சேவை கழகத்தின் செயலாக்க உறுப்பினர் மஞ்சுளா பிரசர் வரவேற்றார்.அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, சிறப்பு உறையை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:இந்தியாவில் மரபும், சேவையும் மாறாமல் இருப்பது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை. ரயில்வே துறையாவது இந்தியாவில் சில இடங்களுக்கு சென்றடையவில்லை. ஆனால், ஆறு லட்சம் கிராமங்களை 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இணைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அஞ்சல் துறை புதிய பொலிவு பெற்றுள்ளது. இந்த துறை தபால்களை மட்டும் கொண்டு சேர்க்கும் துறை அல்ல. பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தை, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள நம்பிக்கையை கொண்டு போய் சேர்க்கும் துறை.



அஞ்சல் துறை நவீனப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சிதைந்து போகும் சூழல் ஏற்படும். இது சேவை துறை. இதில், லாபம் எதிர் பார்க்க கூடாது. வருவாயை கூட்டும் முயற்சி மேற்கொள் ளப்படாமல் இல்லை. வருவாயுடன் பொதுமக்கள் சேவை நோக்கத்தோடு இத்துறை செயல்பட வேண்டியுள்ளது.

விலை ரூ.30 கோடி: அஞ்சல் பிரிப்பகங்களை நவீனப்படுத்தும் முயற்சியில், 65 கோடி ரூபாய் நிதி ஓதுக்கப் பட்டுள் ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சல் பிரிப்பகங்களை அடுத்த மாதம் கொண்டு வரவுள்ளோம். அதற்கான ஒரு இயந்திரத்தின் விலை 30 கோடி ரூபாய்.இந்தியாவில் உள்ள ஆயிரம் தபால் நிலையங்களை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறோம். அடுத்த ஆறு மாத காலத்தில் மேலும், ஆயிரம் அஞ்சலகங்கள் நவீனமாக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்தியாவில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்திற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதத்தில் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.

அஞ்சல்துறையில் உடனடி பண பறிமாற்றம் செய்வதற்காக "யுரோ-ஜீரோ' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளளோம். அத்திட்டத்தின் படி உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான் ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம். இத்திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறோம். அதற்கான பூர்வாங்கப்பணிகள் முடிந்துவிட்டன.வடகிழக்கு மாநிலங்களில் துரித தபால் சேவைக்கான ஒரு விமான சேவை கொண்டு வரப் பட்டது. இன்று, அந்த சேவை தென்இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் போல இரண்டு விமானங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இயக்கப்படவுள்ளன. இந்தியா முழுவதும் இந்த சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சர் சச்சின் பைலட் பேசுகையில் கூறியதாவது :அஞ்சல் துறையில் சரக்கு விமானத்தின் முதல் சேவை கோல்கட்டா -வட கிழக்கு மாநிலங்கள் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஏர் இந்தியா சர்வீஸ் மூலம் மேலும் இரண்டு அஞ்சல் சரக்கு விமான சேவை துவக்கப்பட்டது. இதன் மூலம் மூன்று அஞ்சல் சரக்கு விமான சேவை பயன்படுத்தப்பட்டது.

கடந்த 1949ம் ஆண்டு இரவு நேர தபால் சேவை, தகவல் துறையின் முன்னாள் அமைச்சர் ரபீக் அகமது கித்வாயால் துவக்கப்பட்டது. அந்த திட்டம், சில காரணங்களுக்காக கடந்த 1970ம் ஆண்டு கைவிடப்பட் டது. அதன் பிறகு கடந்த 2008ம் ஆண்டு, "புராஜக்ட் ஏரோ' திட்டம் சிறந்த சேவையாற்றி வருகிறது. தற்போது, துவக்கப் பட்ட இந்த அஞ்சல் சரக்கு விமான சேவை மூலம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தபால் நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும்.இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.



அஞ்சல் துறையின் செயலர் ராதிகா துரைசாமி தலைமை தாங்கி பேசியதாவது: அஞ்சல் துறை சேவைக்காக மூன்று போயிங் ரக விமானங்கள் இயக் கப்படுகின்றன. ஒரு விமானத் தின் கொள்ளளவு 14 டன் ஆகும்.அதில், எட்டு அடுக்குகள் உள்ளன. இந்த விமானங்கள் மூலம் பல்வேறு தபால் சேவை அளிக்கப்படுகின்றன. நள்ளிரவு ஒரு மணிக்கு நாக்பூருக்கு இந்த விமானங்கள் வந்து சேருகின்றன. தபால் பரிமாற்றத் திற்கு பிறகு 2 மணிக்கு விமானங்கள் புறப்படுகின்றன.இவ்வாறு ராதிகா துரைசாமி கூறி�ர்.விழாவில், தலைமை தபால் துறை தலைவர் சக்ரபர்த்தி நன்றி தெரிவித்தார்.



--
நன்றி,
தினமலர் நாளிதழ் (www.dinamalar.com)

இன்று என் அக்காவின் பிறந்தநாள் !

இன்று என் அக்காவின் பிறந்தநாள் !

--
நன்றி,
அருள்.

Monday, September 7, 2009

சென்னையும் சிவப்பு நிற கட்டடங்களும்

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, "தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார் என்பவர்.பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த இவரது மாளிகை, "வெள்ளை மாளிகை' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின்னால் உள்ளது.இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன.இது அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப் பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.



எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு அவருக்கு சொந்தமாக இருந்தது.அதனால், "செட்டியார் பேட்டை' என அழைக்கப் பட்டது.நாளடைவில், "செட்டிபேட்டை' என மருவி, இன்று, "செட்பெட்' என மாறிவிட்டது.அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், அமைதியை விரும்பியதால், செட்டியாரின் நிலத்தை வாங்கி, அவரையே வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண் டனர்.அப்பகுதியில் இன்றும் அனேக வீடுகள் ஆங்கிலேய பெயர்களாக காசா மேஜர், ஜாரட்ஸ் கார்டன் (தற்போது சமூக சேவா பள்ளி) ஹாரிங்டன், பாந்தியன் என்று பெயர்.



கணிதமேதை - ராமானுஜம்: காலம் சென்ற கணித மேதை கடைசி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார்.இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் அதிகமாகி விட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக் கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். தமிழ்நாடு மிகப்பெரிய கணிதமேதையை இழந்தது. அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.



சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற முதல் வைசியர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது.தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் தனி ரயில் வண்டி வைத்திருந்தார்.



திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.ராவ் சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் பட்டங்களை, தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோவில்களின் திருப் பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார்.வடசென்னையில் பல பள்ளிகளும், சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் நடைபெறுகின்றன.சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது. (சென்னையின் வயது 370).


Thanks : www.dinamalar.com