Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, November 27, 2008

என் தாய்நாடு இந்தியா

என் தாய்நாடு இந்தியா. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் தாய்த்திருநாட்டை நான் உளமார நேசிக்கிறேன். வளமும் வேறுபாடும் நிறைந்த அதன் மரபினை எண்ணி நான் இறும்பூது அடைகிறேன். அன்னதன் புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.

 

அன்புடன் என்னை ஈன்ற அன்னை, ஆருயிர்த் தந்தை, ஆசிரியப்பெருந்தகை, ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன். அன்னாரது புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.

 

என் நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும் என் வந்தனம் என்றும் உரியது. என் நாட்டவர் வாழ்வில் நலமும் வளமுமே போற்றதுஇன்பமென நான் உளம்பூரிப்போடு உறுதி கூறுகிறேன்

Wednesday, November 26, 2008

??????? ?????????? ?????? ????

சென்னை: "குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் தரைக்காற்று வீசுவதோடு, மழை பெய்யவும் வாய்ப்புள்ளது' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு வடக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை நிலவரப்படி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அந்த இடத்திலேயே நிலை கொண்டிருப்பதால், எந்தப் பக்கம் நோக்கி நகரும் என்பது இன்று தெரியும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் விளைவாக தென் தமிழகம், வடக்கு கடலோர மாவட் டங்களில் கன மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் 30 செ.மீ., தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம், மண்டபத்தில் 25 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ., அளவு வரை மழை பெய்யும். மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண் டாம் என்று எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 25 செ.மீ., வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கடலோர மாவட்டங்களிலும் கனமழை மற்றும் பலத்த மழை பெய்யும்.


சென்னையில் தரைக்காற்று வேகமாக வீசக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தாழ்வு மண்டலம் கரையை கடக்கக் கூடும். தமிழகத்தின் உட்பகுதியான வேலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று மாலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காணப்பட்டது.


நாகப்பட்டினம், பாம்பன் இடையே, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் பலத்த கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source : http://www.dinamalar.com