Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, December 31, 2010

| மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு Dinamalar

இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். அதனால், சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.

| மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு Dinamalar

International Scores

International Scores: "Get the latest scores of all the international cricket matches from Cricinfo. Add the Cricinfo International Scores widget now!"

Wednesday, December 22, 2010

Forecastfox Weather

Forecastfox Weather

| பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி Dinamalar

| பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி Dinamalar

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் வரை மட்டும் இயங்கும்

வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, தெற்கு ரயில்வேயில் உள்ள கம்ப்யூட்டர் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

More

Monday, December 20, 2010

| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar

| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar


சென்னை : அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் நான்கு இலக்க எண்களிலும், சாதாரண பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று இலக்க எண்களிலும், புறநகர் மின்சார ரயில்கள் ஊர்களின் பெயரின் முதல் ஆங்கில எழுத்துக்களுடன், ஒரு இலக்கம் அல்லது இரண்டு இலக்க எண்களுடனும் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்களில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதையொட்டி தேவைக்கேற்ப வழக்கமான ரயில்களுடன், புதிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால், ரயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்களின் சர்வீஸ் பல ஆயிரமாக உயர்ந்ததால் இந்த நடவடிக்கை. நான்கு இலக்க எண்களை ஐந்து இலக்க எண்களாக மாற்றியமைத்தால் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் இயக்கத்திலும் வசதிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்த ரயில்வே அமைச்சகம், முன்பே முடிவு செய்திருந்தது.

இதையொட்டி எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் மற்றும் சாதாரண பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் எண்கள் இன்று முதல் ஐந்து இலக்கங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar

Thursday, December 16, 2010

Monday, December 13, 2010

நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்து துவக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பாதையில் மண்சரிவு காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, மீண்டும் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், பள்ளியாடி அருகே ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 40 மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதையில் மண் மூடியது. இதனால், இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், கடந்த நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கேரளாவில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில்கள் திருவனந்தபுரத்திலும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாசெல்லும் ரயில்கள் நாகர்கோவிலிலும் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த மண் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. எனினும், தொடர்ந்து மண் சரிந்து விழும் நிலையில் இருந்ததால், அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தின் இரண்டு பகுதிகளிலும் உயரமாக இருந்த மண் அப்புறப்பட்டுத்தப்பட்டது. பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர். 13ம் தேதி காலை ஒன்பது மணியளவில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த அனந்தபுரி ரயில் இந்த பாதையில் அனுப்பப்பட்டது. பள்ளியாடியில் ரயில் குறைந்த வேகத்துடன் சென்றது. தொடர்ந்து நாகர்கோவில்- திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயில்களும் இயங்க துவங்கியது.

Thanks -> தினமலர்

Friday, December 3, 2010

மார்ச்- 28 ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ; அட்டவணை முழு விவரம்

தேர்வு கால அட்டவணை விவரம் :

மார்ச்- 2 ம் தேதி : தமிழ்மொழிப்பாடம் ( முதல் தாள் )

மார்ச்- 3 ம் தேதி : தமிழ்‌மொழி்ப்பாடம் ( 2 ம் தாள்)

மார்ச்- 7 ம் தேதி : ஆங்கிலம்- (முதல்தாள்)

மார்ச் - 8ம் தேதி : ஆங்கிலம் (இரண்டாம் தாள்)

மார்ச்- 11 ம் தேதி: இயற்பியல் , பொருளாதாரம்,

மார்ச்- 14 ம் தேதி : வேதியியல், அக்கவுண்ட்ஸ், சார்ட்டர்டு அக்கவுண்ட்

மார்ச்- 17 ம்தேதி : கணக்கு விலங்கியல், மைக்‌ரோ பயாலஜி,

மார்ச்- 18ம் தேதி : வணிகம், ஹோம் சயின்ஸ் , புவியியல்,

மார்ச்- 21 ம் தேதி : பயோலஜி, தாவரவியல், வரலாறு,

மார்ச்- 23 ம் தேதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், தட்டச்சசு.

மார்ச்: 25 ம் தேதி : தொழிற்கல்வி.

பத்தாம் வகுப்பு எஸ். எஸ்.எல்சி., தேர்வு :

மார்ச்- 28 ம்தேதி : ‌தமிழ் ( முதல்தாள் )

மார்ச்- 29 ம்தேதி : ‌தமிழ் ( முதல்தாள் )

மார்ச்- 31 ம்தேதி : ஆங்கிலம் ( முதல்தாள்)

ஏப்ரல்- 1 ம்தேதி : ஆங்கிலம் ( 2ம் தாள் )

ஏப்ரல்- 5 ம் தேதி: கணக்கு

ஏப்ரல்- 8ம் தேதி: அறிவியல்

ஏப்ரல்- 11 ம் தேதி: சமூக அறிவியல்

Thursday, November 25, 2010

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் ஓட்டளிக்க அரசு ஆணை

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் நடைபெறும் ‌தேர்தல்களில் வாக்களிக்க வ‌கை செய்யும் ம‌சோதா கடந்த மழைகால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆணை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தினமலர்

Sunday, November 21, 2010

பாலிதீன் ஒழிப்பு: குமரி மாவட்டம்

""தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் மிக நல்ல விஷயம் ஒன்று நடந்திருக்கிறது. அது குமரி மாவட்டம். அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, பிற மாவட்டங்களும் இதனை அமல்படுத்த வேண்டும்''- சென்னையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியது இது.

தினமலர்

Saturday, November 20, 2010

படகு வலித்தலில் முதல் தங்கம்

குவாங்சு: துடுப்பு படகு வலித்தல் தனிநபர் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் லால் தகார் தங்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில், படகு வலித்தல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனை படைத்தார்.

நாகர்கோவில் நகராட்சியுடன் பெருவிளை கிராம ஊராட்சி இணைப்பு

நாகர்கோவில் நகராட்சியுடன், ஆசாரிபள்ளம் பேரூராட்சி, பெருவிளை, வடக்கு சூரன்குடி, காந்திபுரம், கரியமாணிக்கபுரம் கிராம ஊராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியுடன் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன

தினமலர்

Monday, July 26, 2010

ஜெயபால் எம்.எல்.ஏ. உடல் இன்று அடக்கம்

நேற்று காலமான குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால் உடல் அடக்கம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் பெருவிளையில் நடைபெறுகிறது. ஜெயபால் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை கிராமம். 1955 மே 19-ம் தேதி பிறந்தார். பி.எஸ்சி. பட்டதாரி. மனைவி புஷ்பம். மகன்கள் சிவபிரபு, சிவபிரசாத். மகள் சிவப்பிரியா. மகன் சிவபிரபு நாகர்கோவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இளமை காலம் முதலே காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். 1986 முதல் 91 வரை பெருவிளை பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினார். 1996 முதல் 2001 வரை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றினார். 2006 சட்டசபை தேர்தலில் குளச்சல் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது உடல் இன்று மாலை நான்கு மணிக்கு பெருவிளையில் நடைபெறுகிறது

Friday, June 4, 2010

பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: நாமக்கல் வட்டார வளமையம் சார்பில் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது 6 முதல் 14 வயது வரையுள்ள மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

நன்றி : தினமலர்
முழுச்செய்தி

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் : இன்னும் மூன்று நாளில் அறிவிக்க அரசு திட்டம்

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரீத் பரேக் கமிட்டி, "பெட்ரோல், டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கைவிட வேண்டும். சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்த வேண்டும். அதேபோல், கெரசின் விலையையும் உயர்த்த வேண்டும். எரிபொருள் மானியத்தை கணிசமாக குறைக்க வேண்டும்' என, பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழு வரும் 7ம் தேதி கூடுகிறது.

நன்றி : தினமலர் முழுச்செய்தி

Thursday, May 20, 2010

இந்தியாவின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள்: அப்துல் கலாம்

விருதுநகர் : விருதுநகர் அருகே தோனுகால் கிராமத்தில் புரா திட்டத்தை துவக்கி வைத்து ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்திய நாட்டின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள் என்றார்.

தோனுகாலில் நடந்த விழாவிற்கு வந்த இரவு 9.12 மணிக்கு வந்த அப்துல் கலாமிற்கு கிராமத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேடைக்கு வந்த அப்துல்கலாம் லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பள்ளி மாணவர்கள் குடி நீருக்கான சுத்திகரிப்பு இயந்திரம், சிறுநீரக நோயளிகளுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் நடமாடும் வேன் ஆகியவற்றை துவக்கி வைத்தார். மேலும் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி சார்பில் தோனுகால் கிராமத்தில் நகரத்துக்கு இணையான மருத்து வசதியான டெலி மெடிஷன் சென்டர், 'இ' லியர்னிங் சென்டர், வேலைவாயப்பு ஐகிராண்டி ஆகிய வசதிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அப்பதுல்கலாமை வரவேற்று அவரது தவியாளர் பொன்ராஜ் பேசினார். புரா திட்டம் குறித்து மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியின் துணை தலைவர் டாக்டர் குரு சங்கர், மகாசேமம் திட்டம் குறித்து துணைத்தலைவர் பன்னீர் செல்வம், நடமாடும் டயாலிசிஸ் வேன், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இயந்திரம் குறித்து மாவட்ட லயன்ஸ் ஆளுனர் டாக்டர் வேலுச்சாமி பேசினார். விருதுநகர் கலெக்டர் சிஜி தாமஸ் உட்பட பலர் பேசினார்கள்.

மகாசேமம் திட்டத்தில் மகளிர் குழுவிற்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு இலவச காலனி வழங்கி பாரத ரத்னா அப்துல்கலாம் பேசியதாவது: இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள் தான் இவர்கள் எழுச்சி பெற வேண்டும். பறந்து கொண்டிருக்கும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் முடியாது என்ற சொல்லை மாற்றி என்னால் முடியும் என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும். தோல்விகளை, தோல்வியடைய செய்து வெற்றி பெற கடுமையாக உழைத்து இந்த நாட்டை வளமாக்க வேண்டும். இளைஞர்களுக்கு பத்து கட்டளைகளை தெரிவிக்கிறேன் அதனை பின்பற்றுங்கள். ஒருவர் உயர தாய், தந்தை, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியவர்ளை நினைத்தால் வளர்ச்சி சிறக்கும். ஐந்து குணங்கள் வேண்டும். லட்சியம், அறிவை தேடி கடும் உழைப்பு, பிரச்னைக்கு தீர்வு, நல்ல ஒழுக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். மீனாட்சி மிஷன் அருள் மொழி நன்றி கூறினார்.

நன்றி : தினமலர்

Tuesday, May 18, 2010

லைலா புயல் ; சென்னை - நாகை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு கிழக்கே அந்தமான் கடல் பகுதியில் சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் வட மேற்காக நகர்ந்து ஆந்திரா நோக்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கடலூர் நோக்கி மையம் கொண்டுள்ளது. இந்த மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிகிறது.



மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. எந்த அளவிற்கு எப்போது வலுப்பெறும் என வானிலை ஆராய்ச்சிமையம் மதியத்திற்குமேல்தான் அறுதியிட்டு கூற முடியும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புயலுக்கு லைலா என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ( 12 அடி உயரம் எழும்பும்) அதிகரிக்கும். காற்று மணிக்கு 65 கி.மீட்டர் முதல் 85 கி.மீட்டர் வரை இருக்கும். லேசான முதல் கனத்த மழை பெய்யக்கூடும். சென்னை, நாகை, ராமேஸ்வரம், காக்கிநாடா, புதுச்சேரி பகுதிகளில் நல்ல மழை இருக்கும்.



இன்று இரவு முதல் இன்னும் 48 மணி நேரத்திற்கு இந்த லைலா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை துணை இயக்குனர் குழந்தைவேலு தெரிவித்துள்ளார். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்கப்பட்டிருக்கின்றனர். ஆந்திர கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும் அவர் மேலும் கூறினார். Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail