Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்கள்: தினமலர்

அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்கள்: தினமலர்: "அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்கள்

ஜனவரி 15,2009,00:00 IST

திண்டுக்கல் : தமிழகத்தில் பாரம்பரியமாக புழக்கத்தில் இருந்த மடுமுழுங்கி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கொத்தமல்லி சம்பா உட்பட பல நெல் ரகங்கள் அழிந்து வருகின்றன. தமிழகத்தின் முக்கிய தொழிலாக விவசாயத்தொழில் உள்ளது. இந்த தொழிலுக்கு அடிப்படை நெல் விவசாயமாகும். தற்போது தமிழ்நாடு விவசாயப்பல்கலைக்கழகம் புதுப்புது நெல் ரகங்களை, புதுபுது பெயர்களில் அறிமுகம் செய்கிறது. இதனால் பாரம்பரியத்தில் உள்ள பல நெல்வகைகள் அழிந்து வருகின்றன.


மடு முழுங்கி: இந்த நெல் ரகத்தை ஆறு, குளம்,குன்று,மலைகளில் வறட்சி காலங்களில் விவசாயிகள் தூவி விடுவார்கள். மழை பெய்த நீர் நிலைகளில் இது முளைத்து விடும். தண்ணீர் எவ்வளவு இருந்தாலும் கவலைப்படாமல் நெற்கதிர்கள் அந்த அளவிற்கு வளர்ந்து மேலோங்கி நிற்கும். விவசாயிகள் பரிசலில் சென்று கதிர்களை அறுப்பார்கள். இவற்றின் வயது 180 நாட்களாகும்.


மாப்பிள்ளை சம்பா:இது நல்ல ஊட்டச்சத்து உள்ள நெல் ரகமாகும். இதை சாப்பிட்டால் மாப்பிள்ளைக்கு உள்ள வலிமை உண்டாகும். இந்த அரிசி சாப்பிட்டவர்கள் கிராமங்களில் இளவட்டகல்லை தூக்கியும், காளை மாடுகளை அடக்கவும் செய்வார்கள். உடல் உறவுக்கு ஏற்ற வீரியம் இந்த வகை அரிசியில் கிடைக்கும். இதன் காலம் 180 நாட்களாகும்.


60ம் குறுவை: இது 60 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். இந்த நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சில இடங்களில் பயிரிடுகின்றனர். இதே போல பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த கருங்குறுவை, சீரகசம்பா, கொத்தமல்லி சம்பா, காட்டுயானம்,ஒற்றியடையான், நவ்ரா ஆகிய நெல் வகைகள் அழிந்துள்ளன. இவைகள் நார் சத்து அதிகமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கும். இந்த வகை அரிசிகளை சாப்பிட்டால் எளிதில் ஜீரண சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.


மேலும் இந்த பாரம்பரிய நெல் வகைகள் இயற்கை உரங்களைத்தான் ஏற்றுக் கொள்ளும், ரசாயன உரங்களை ஏற்றுக் கொள்ளாது. இவற்றின் காலம் 60 நாட்கள் முதல் 180 நாட்களாகவே இருந்தன. இவை தற்போது அழிந்து வருகிறது. இவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்."

No comments: