Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, September 18, 2009

தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு துவங்கியது-அலைமோதும் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 17ம் தேதி தான் என்றாலும் சென்னை தற்போதே கலைகட்ட துவங்கிவிட்டது. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தின் தென் பகுதிக்கு செல்லும் ரயில்கள் அனைத்திலும் டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதை அடுத்து இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்படுகிறது.

கூட்டத்தை கட்டுப்படுத்து அரசு கோயம்பேட்டில் வழக்கமாக இயங்கும் 4 கவுன்டர்களுடன் கூடுதலாக 2 கவுன்டர்களை திறந்துள்ளது. இதை தவிர்த்து தாம்பரத்திலும் 1 கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கவுன்டர்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இங்கு 430 விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா [^], புதுச்சேரி [^] போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளம் அடக்கம்.

இதில் மக்களிடையே தற்போது ஏசி பஸ்களுக்கு தான் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து நீண்ட வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் ஏசி பஸ் தான் வேண்டும் என அடம்பிடித்து வருகின்றனர். ஆனால், ஏசி பஸ்கள் 50 தான் இருப்பதால் அவற்றுக்கான டிக்கெட் விரைவில் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது.

--
நன்றி,
http://thatstamil.oneindia.in/news/2009/09/16/tn-reservation-begins-for-deepavali-special-buses.html

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

Tuesday, September 15, 2009

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோலாகலம்

தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்கா வெள்ளைப் புலி ஈன்ற இரண்டு வெள்ளைப் புலி குட்டிகளுக்கு "ஆகான்ஷா', "நம்ப்ரதா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 வண்டலூர் உயிரியல் பூங்காவில், டில்லி தேசிய பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகையை சேர்ந்த பீஷ்மர் என்ற ஆண் வெள்ளை புலியும், அனு என்ற பெண் வெள்ளை புலியும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பெண் வெள்ளைப் புலி அனு, கடந்த மார்ச் மாதம் மூன்று குட்டிகளை ஈன்றது. முதல் முறையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகையை சேர்ந்த வெள்ளைப் புலி, குட்டிகளை ஈன்றதால் ஊழியர்களும், அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒரு குட்டி குடல் வளர்ச்சியடையாத காரணத்தால் இறந்தது. தாய் புலியும், இரண்டு குட்டிகளையும் ஊழியர்கள் கவனமாக பராமரித்து வருகின்றனர். சில மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாக கொண்டிருந்த குட்டிகள், மாட்டிறைச்சியையும் உண்ணத் துவங்கின. தற்போது, இறைச்சியை உண்ண வெள்ளைப்புலி குட்டிகள் நன்கு பழகிவிட்டன. இதனால், காலையில் ஒரு கோழியும், மாலையில் மாட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது. தற்போது, தாய் புலியுடன், குட்டிகளும் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

தாயுடன் குட்டிகள் ஓடி விளையாடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெள்ளைப் புலி குட்டிகளின் அட்டகாசங்களை ரசிப்பதற்காகவே தினசரி ஏராளமானோர் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். தற்போது, வெள்ளைப்புலி குட்டிகளுக்கு ஆகான்ஷா மற்றும் நம்ப்ரதா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூங்கா அதிகாரிகள் பெயர் கூறி அழைத்தால் வெள்ளைப்புலி குட்டிகள் ஓடி வருகின்றன.



--
நன்றி,
தினமலர்.

Monday, September 14, 2009

இன்ஜினியரிங் கல்லூரிகளில் 32 ஆயிரம் இடங்கள் காலி

திருச்சி: ""பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பு குறைவால், தமிழக பொறியியல் கல்லூரிகளில் 32 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன,'' என்று தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கணேசன் திருச்சியில் கூறினார்.

இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: திருச்சியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) நிறுவனம் நடப்பாண்டு துவக்கப்பட்டு பகுதிநேர வகுப்புகள் முதல் கட்டமாக துவங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து முழு நேர வகுப்பு துவங்கப்படவுள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப பூங்கா (என்.ஐ.டி.,)வில் தற்காலிகமாக ஐ.ஐ.எம்., வகுப்புகளும், அதில் பயிலும் மாணவர்களின் விடுதிகளும் செயல்படவுள்ளன.



தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பயில மேல்நிலை கல்வியில் வெற்றி பெற்றால் மட்டும் போதுமானது. ஆனால், தமிழகத்தில் ஜாதி வாரியாக பல்வேறு முறைகள் அமலில் உள்ளன.



 தமிழகத்தில் கடந்த ஆண்டு 18 ஆயிரமும், நடப்பாண்டு 32 ஆயிரமும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடங்கள் காலியாகவுள்ளன. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) துறையில் இடங்கள் காலியாக உள்ளன. பொருளாதார மந்த நிலை மற்றும் வேலை வாய்ப்பு குறைவு காரணங்களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வாய்ப்புள்ளது. இதற்காக புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் துவக்க அனுமதி தர தடை செய்யவில்லை. சமச்சீர் கல்வியை வரவேற்கிறோம்.



இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே நான்கு வகை கல்வி முறை உள்ளது. சமச்சீர் கல்வி முறை வந்தால் தொடக்கக் கல்வி தரமும் உயரும், உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும். அதனால், சமச்சீர் கல்வி முறையை வரவேற்கிறோம்.



பொது கல்விதிட்டம் தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் அனந்தகிருஷ்ணன், குழந்தைசாமி மற்றும் திட்ட கமிஷன் துணைத்தலைவர் நாகநாதன் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து ஆய்வறிக்கை மூலம் சில பரிந்துரை அளிக்கவுள்ளனர்.  அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் ஏற்கப்படவுள்ளன. இவ்வாறு கணேசன் கூறினார்.



--
நன்றி,
தினமலர் நாளிதழ் (www.dinamalar.com)

எந்தப் பகுதிக்கு பணம் அனுப்பினாலும் உடனடியாக சேரும்:அஞ்சல் துறை சேவையில் மற்றொரு புதுமை

சென்னை: ""அஞ்சல் துறையில் உடனடி பண பரிமாற்றம் செய்வதற்காக "யூரோ-ஜீரோ' திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளோம். அத்திட்டத்தின் படி, உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம்,'' என்று அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை துவக்கிவைத்த மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.



அஞ்சல்துறையின் சரக்கு விமான சேவை துவக்க விழா சென்னை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில், அஞ்சல் சேவை கழகத்தின் செயலாக்க உறுப்பினர் மஞ்சுளா பிரசர் வரவேற்றார்.அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, சிறப்பு உறையை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:இந்தியாவில் மரபும், சேவையும் மாறாமல் இருப்பது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை. ரயில்வே துறையாவது இந்தியாவில் சில இடங்களுக்கு சென்றடையவில்லை. ஆனால், ஆறு லட்சம் கிராமங்களை 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இணைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அஞ்சல் துறை புதிய பொலிவு பெற்றுள்ளது. இந்த துறை தபால்களை மட்டும் கொண்டு சேர்க்கும் துறை அல்ல. பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தை, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள நம்பிக்கையை கொண்டு போய் சேர்க்கும் துறை.



அஞ்சல் துறை நவீனப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சிதைந்து போகும் சூழல் ஏற்படும். இது சேவை துறை. இதில், லாபம் எதிர் பார்க்க கூடாது. வருவாயை கூட்டும் முயற்சி மேற்கொள் ளப்படாமல் இல்லை. வருவாயுடன் பொதுமக்கள் சேவை நோக்கத்தோடு இத்துறை செயல்பட வேண்டியுள்ளது.

விலை ரூ.30 கோடி: அஞ்சல் பிரிப்பகங்களை நவீனப்படுத்தும் முயற்சியில், 65 கோடி ரூபாய் நிதி ஓதுக்கப் பட்டுள் ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சல் பிரிப்பகங்களை அடுத்த மாதம் கொண்டு வரவுள்ளோம். அதற்கான ஒரு இயந்திரத்தின் விலை 30 கோடி ரூபாய்.இந்தியாவில் உள்ள ஆயிரம் தபால் நிலையங்களை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறோம். அடுத்த ஆறு மாத காலத்தில் மேலும், ஆயிரம் அஞ்சலகங்கள் நவீனமாக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்தியாவில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்திற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதத்தில் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.

அஞ்சல்துறையில் உடனடி பண பறிமாற்றம் செய்வதற்காக "யுரோ-ஜீரோ' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளளோம். அத்திட்டத்தின் படி உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான் ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம். இத்திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறோம். அதற்கான பூர்வாங்கப்பணிகள் முடிந்துவிட்டன.வடகிழக்கு மாநிலங்களில் துரித தபால் சேவைக்கான ஒரு விமான சேவை கொண்டு வரப் பட்டது. இன்று, அந்த சேவை தென்இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் போல இரண்டு விமானங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இயக்கப்படவுள்ளன. இந்தியா முழுவதும் இந்த சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சர் சச்சின் பைலட் பேசுகையில் கூறியதாவது :அஞ்சல் துறையில் சரக்கு விமானத்தின் முதல் சேவை கோல்கட்டா -வட கிழக்கு மாநிலங்கள் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஏர் இந்தியா சர்வீஸ் மூலம் மேலும் இரண்டு அஞ்சல் சரக்கு விமான சேவை துவக்கப்பட்டது. இதன் மூலம் மூன்று அஞ்சல் சரக்கு விமான சேவை பயன்படுத்தப்பட்டது.

கடந்த 1949ம் ஆண்டு இரவு நேர தபால் சேவை, தகவல் துறையின் முன்னாள் அமைச்சர் ரபீக் அகமது கித்வாயால் துவக்கப்பட்டது. அந்த திட்டம், சில காரணங்களுக்காக கடந்த 1970ம் ஆண்டு கைவிடப்பட் டது. அதன் பிறகு கடந்த 2008ம் ஆண்டு, "புராஜக்ட் ஏரோ' திட்டம் சிறந்த சேவையாற்றி வருகிறது. தற்போது, துவக்கப் பட்ட இந்த அஞ்சல் சரக்கு விமான சேவை மூலம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தபால் நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும்.இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.



அஞ்சல் துறையின் செயலர் ராதிகா துரைசாமி தலைமை தாங்கி பேசியதாவது: அஞ்சல் துறை சேவைக்காக மூன்று போயிங் ரக விமானங்கள் இயக் கப்படுகின்றன. ஒரு விமானத் தின் கொள்ளளவு 14 டன் ஆகும்.அதில், எட்டு அடுக்குகள் உள்ளன. இந்த விமானங்கள் மூலம் பல்வேறு தபால் சேவை அளிக்கப்படுகின்றன. நள்ளிரவு ஒரு மணிக்கு நாக்பூருக்கு இந்த விமானங்கள் வந்து சேருகின்றன. தபால் பரிமாற்றத் திற்கு பிறகு 2 மணிக்கு விமானங்கள் புறப்படுகின்றன.இவ்வாறு ராதிகா துரைசாமி கூறி�ர்.விழாவில், தலைமை தபால் துறை தலைவர் சக்ரபர்த்தி நன்றி தெரிவித்தார்.



--
நன்றி,
தினமலர் நாளிதழ் (www.dinamalar.com)

இன்று என் அக்காவின் பிறந்தநாள் !

இன்று என் அக்காவின் பிறந்தநாள் !

--
நன்றி,
அருள்.

Monday, September 7, 2009

சென்னையும் சிவப்பு நிற கட்டடங்களும்

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, "தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார் என்பவர்.பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த இவரது மாளிகை, "வெள்ளை மாளிகை' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின்னால் உள்ளது.இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன.இது அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப் பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.



எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு அவருக்கு சொந்தமாக இருந்தது.அதனால், "செட்டியார் பேட்டை' என அழைக்கப் பட்டது.நாளடைவில், "செட்டிபேட்டை' என மருவி, இன்று, "செட்பெட்' என மாறிவிட்டது.அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், அமைதியை விரும்பியதால், செட்டியாரின் நிலத்தை வாங்கி, அவரையே வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண் டனர்.அப்பகுதியில் இன்றும் அனேக வீடுகள் ஆங்கிலேய பெயர்களாக காசா மேஜர், ஜாரட்ஸ் கார்டன் (தற்போது சமூக சேவா பள்ளி) ஹாரிங்டன், பாந்தியன் என்று பெயர்.



கணிதமேதை - ராமானுஜம்: காலம் சென்ற கணித மேதை கடைசி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார்.இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் அதிகமாகி விட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக் கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். தமிழ்நாடு மிகப்பெரிய கணிதமேதையை இழந்தது. அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.



சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற முதல் வைசியர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது.தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் தனி ரயில் வண்டி வைத்திருந்தார்.



திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.ராவ் சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் பட்டங்களை, தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோவில்களின் திருப் பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார்.வடசென்னையில் பல பள்ளிகளும், சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் நடைபெறுகின்றன.சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது. (சென்னையின் வயது 370).


Thanks : www.dinamalar.com

Monday, March 2, 2009

இன்று பிளஸ் 2 எழுதும் 6.5 லட்சம்! மாணவ, மாணவியர்: தேர்வைக் கண்காணிக்க 4,000 பேர் நியமனம்: தினமலர்

இன்று பிளஸ் 2 எழுதும் 6.5 லட்சம்! மாணவ, மாணவியர்: தேர்வைக் கண்காணிக்க 4,000 பேர் நியமனம்: தினமலர்: "இன்று பிளஸ் 2 எழுதும் 6.5 லட்சம்! மாணவ, மாணவியர்: தேர்வைக் கண்காணிக்க 4,000 பேர் நியமனம்

மார்ச் 02,2009,00:00 IST

சென்னை: இன்று துவங்கிய பிளஸ் 2 தேர்வில் 6.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வில் மாணவ, மாணவியர்களுக்கு வசதியாக, பதட்டம் குறைய 15 நிமிடங்கள் அதிகமாக தரப்பட்டுள்ளது. அதே சமயம் காப்பியடிப்பதைக் கண்காணித்து தடுக்க 'பறக்கும் படைகள்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவங்குகின்றன. தற்போது, தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறுவது இன்றியமையாததாக உள்ளது. பிளஸ் 2 தேர்வில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் பொன் போன்றதாக கருதப்படுகிறது.




மூன்று லட்சத்து 42 ஆயிரத்து 732 பேர் மாணவிகள்: இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று துவங்குகின. பள்ளிக் கல்வித் துறையின் தேர்வு அட்டவணைப்படி தமிழ் முதல் தாளுடன் தேர்வுகள் இன்று துவங்குகின. இன்று துவங்கி வரும் 23ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களாகவே நடந்து வந்தது. இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.இன்று முதல் எழுத்துத் தேர்வுகள் துவங்கின. தொடர்ந்து 23ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5,040 பள்ளிகளில் இருந்து ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 632 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.இதில், மூன்று லட்சத்து 4 ஆயிரத்து 900 பேர் மாணவர்கள். மூன்று லட்சத்து 42 ஆயிரத்து 732 பேர் மாணவிகள். கடந்தாண்டை விட 54 ஆயிரத்து 326 பேர், அதாவது, 9.17 சதவீதம் பேர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.




இத்தேர்வுகளுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1,738 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.புதுச்சேரியில் 29 மையங்களில் தேர்வு நடக்கிறது. அங்குள்ள 87 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 965 மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு நடக்கும் அனைத்து நாட்களும் மாணவர்கள் அனைவரும் 10 மணிக்குள் தங்கள் தேர்வு மையத்திற்கு வந்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 5 நிமிடம்: மாணவர்களுக்கு, வினாத்தாளை படிக்கவும், தேர்வு முடிந்த பின் விடைத்தாளை படிக்கவும் கடந்தாண்டு 10 நிமிடங்கள் கூடுதலாக தரப்பட்டது. இந்தாண்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கூடுதலாக 15 நிமிடங்கள் என தரப்பட்டுள்ளது.




இதை, மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. மேலும், தேர்வு அறைக்குள் 10:15 மணி வரை நுழைய அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு ஏற்கனவே வினாத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட எஸ்.பி., கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரின் கண்காணிப்பின் கீழ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.




சென்னையில் நேற்று நடந்த பள்ளிக் கல்வித்துறை இணையதள துவக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''தேர்வு நடக்கும்போது சிறு தவறுகள் கூட நடக்காத வகையில் முழுமையாக கண்காணிக்க 'பறக்கும் படைகள்' அமைக்கப்பட்டு, அதில் தமிழகம் முழுவதும் 4,000 பேருக்கும் மேல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள், தேர்வு மையங்களில் திடீரென நுழைந்து சோதனை நடத்துவர். மேலும், தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் இருக்கும் இடமும் பலத்த பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது,'' என குறிப்பிட்டுள்ளார்.




தவிரவும், இத்தடவை தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் வழக்கமாக அதிக மதிப்பெண் எடுக்கும் போட்டி உணர்வில் அதற்கான முழுத்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அதே சமயம் இப்படிப்பு முடிந்ததும் என்ன மேற்படிப்பு என்பதை, உலகசூழ்நிலை உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய வித்தியாசமான நிலையில் உள்ளனர். குறிப்பாக வேலைவாய்ப்பு தரும் கல்வி குறித்து பலமுறை சிந்தித்து முடிவு செய்யும் சூழ்நிலையும் மாணவ, மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும் இத்தடவை கூடுதல் சுமையாக அமைந்திருக்கிறது."

Tuesday, February 24, 2009

பாலக்காடு கோவிலில் 'யானை ஓட்டம்': தினமலர்

பாலக்காடு கோவிலில் 'யானை ஓட்டம்': தினமலர்: "பாலக்காடு கோவிலில் 'யானை ஓட்டம்'

பிப்ரவரி 24,2009,00:00 IST

பாலக்காடு : கோவை, பாலக்காடு அருகேயுள்ள கல்லேக்குளங்கரை சிவன் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று 'யானை ஓட்டம்' நிகழச்சி நடந்தது. ஆண்டுதோறும் சிவராத்திரி விழா, இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி தினமான நேற்று கல்பாத்தி நதியில் மகாதேவர் யானை மீது அமர்ந்து சென்று, ஆறாட்டுக்கடவில், நீராடினார். பகல் 12.00 மணியளவில் செண்டை வாத்தியங்கள் முழங்க, கோவில் வந்தடைந்தார். பின், பக்தர்களின் ஆரவாரம் முழங்க கோவில் வளாகத்தில் ஏழு முறை யானையோட்டம் நடந்தது. யானைக்கு பின்னால், விரதமிருந்த ஆண்களும், பெண்களும் ஏழு முறை வலம் வந்தனர். தொடர்ந்து, அய்யப்ப சேவா சங்கத்தினரின் அன்னதானம் நடந்தது."

Friday, January 16, 2009

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "ஆட்டோ மொபைல்ஸ் தொழில் வீழ்ச்சி: விற்பனை குறைவால் கடும் பாதிப்பு

ஜனவரி 16,2009,03:12
புதுடில்லி: சர்வதேச பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக இந்திய ஆட்டோ மொபைல்ஸ் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களின் விற்பனை பெரிதும் குறைந்துள்ளது. இந்திய ஆட்டோ மொபைல்ஸ் தயாரிப்பாளர் வட்டாரங்கள் கூறியதாவது: சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக, இந்திய ஆட்டோ மொபைல்ஸ் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2007 டிசம்பரில் உள்நாட்டு சந்தையில் ஏழு லட்சத்து 30 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2008 டிசம்பரில் ஐந்து லட்சத்து 97 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. அதேபோல், 2007 நவம்பரில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், கடந்தாண்டு நவம்பரில் ஏழு லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆயின. வர்த்தக பயன்பாட்டுக்கான வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை தான் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2007 டிசம்பரில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆயின. 2008 டிசம்பரில் நான்கு லட்சத்து 61 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் தற்போது தான் இந்திய ஆட்டோ மொபைல்ஸ் துறை மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இவ்வாறு ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன."

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "குறைந்தது பணவீக்கம்

ஜனவரி 16,2009,03:12
புதுடில்லி: கடந்த 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் நாட்டின் பணவீக்கம் 5.24 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்கத்திற்குள்ளாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3ம்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 5.24 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் 5.91 சதவீதமாக இருந்தது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்குறைவு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.26 சதவீதமாக இருந்தது. தற்போதை நிலை தொடர்ந்தால், நிதியாண்டு இறுதியில் பணவீக்கத்தை 3 முதல் 4 சதவீதத்திற்குள் கொண்டு வரமுடியும் என, பொருளாதார விவகாரத் துறை செயலர் அசோக் சாவ்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்."

Thursday, January 15, 2009

இந்தியாவின் கொள்கையை மொரீஷியஸ் பின்பற்றும்: தினமலர்

இந்தியாவின் கொள்கையை மொரீஷியஸ் பின்பற்றும்: தினமலர்: "இந்தியாவின் கொள்கையை மொரீஷியஸ் பின்பற்றும்

ஜனவரி 15,2009,00:00 IST

அருப்புக்கோட்டை:இலங்கை தமிழர் பிரச்னையில் இந்தியாவின் கொள்கை தான் எங்களுடையதும் என அருப்புக்கோட்டை வந்த மொரீஷயஸ் நாட்டின் துணை ஜனாதிபதி ஏ.வி. செட்டியார் கூறினார்.மொரீஷியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி ஏ.வி. செட்டியார் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது தங்கை அமராவதி வீட்டிற்கு வந்திருந்தபோது நிருபர்களிடம் கூறியதாவது:


பல துறைகளில் என்னுடைய சேவையை பாராட்டி இந்திய அரசு விருது வழங்கியுள்ளது. ஜூன் மாதம் மொரீஷியசில் நடைபெறவிருக்கும் உலக தமிழ் மாநாட்டிற்கு அமைச்சர் ஸ்டாலினை தலைமை ஏற்குமாறு அழைக்க வந்துள்ளேன். முதல்வர் கருணாநிதியையும் சந்தித்து அழைப்பு விடுவேன். அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.


இலங்கை தமிழர் பிரச்னையில் இந்திய நாட்டின் கொள்கை தான் எங்களுடையதும். மொரீசியஷில் எதிர்கட்சியினர் தான் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் நிலை குறித்து மனதளவில் வேதனைப்படுவது மட்டும் தான் தற்போது எங்களால் செய்ய முடியும் என்றார்.அருப்புக்கோட்டை வந்துள்ள துணை ஜனாதிபதிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது."

வெளிமாநில வரத்தால் எள் விலை வீழ்ச்சி : தினமலர்

வெளிமாநில வரத்தால் எள் விலை வீழ்ச்சி : தினமலர்: "வெளிமாநில வரத்தால் எள் விலை வீழ்ச்சி

ஜனவரி 15,2009,00:00 IST

கள்ளக்குறிச்சி : வெளி மாநிலத்திலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் எள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இந்தியாவில் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவு உள்ளது. இங்கு தயாராகும் சமையல் எண்ணெய் உலகில் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.


இதனால் தமிழகத்தில் எண்ணெய் வித்துகளுக்கு அதிக மதிப்பும், மார்க்கெட்டிங் வசதியும் அதிகம் உள்ளது.கடந்த சில மாதங்களாக மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களிலிருந்து எள் இறக்குமதி தமிழகத்திற்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தரம் வாய்ந்த கறுப்பு எள் மூடை (80 கிலோ) 4, 500 முதல் 5,000 ரூபாய் வரை விலை போகிறது. வட மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யும் வெள்ளை நிற எள் மூடை (100 கிலோ) 2,500 முதல் 3 000 ரூபாய் வரை விலை போகிறது.விலை குறைவாகவும், எடை கூடுதலாகவும் இருப்பதால் சமையல் எண்ணெய் நிறுவனங்கள் வட மாநிலத்திலிருந்தே தங்களுக்கு தேவையான அளவு எள் இறக்குமதி செய்கின்றன.


இதனால் தமிழகத்தில் தற்போது எள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் விளைவிக்கப்படும் எள் தரமுள்ளதாகவும், கறுப்பு ரக எள்ளாகவும் இருப்பதால் இதிலிருந்து எடுக்கப்படும் எண் ணெய் வாசனை நிறைந்ததாகவும், சத்து மிகுந்ததாகவும் உள்ளன. புண்ணாக்கும் கால்நடைகளுக்கு சிறந்து ஊட்டச்சத்து மிக்க தீவனமாக பயன்படுகின்றன. வட மாநிலங்களிலிருந்து இறக்குமதி செயும் எள் தரமற்றதாகவும், அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனையின்றி, சத்து குறைந்தும் உள்ளது.


இதனால் வியாபாரிகள் எண்ணெய் வாசனையுடன் இருக்க 30 மூடை வட மாநில வெள்ளை எள்ளுடன், இரண்டு முதல் மூன்று மூடை தமிழகத்தில் கொள்முதல் செய்யும் கறுப்பு எள் கலந்து எண்ணெய் உற்பத்தி செய்கின்றனர். சமையல் எண்ணெய் நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப தமிழகத்தில் விலையும் எள் குறைந்த அளவே கொள்முதல் செய் வதால் விலை கடுமையாக விழ்ச்சி அடைந் துள்ளது. சிறு வியாபாரிகள் பலர் எள் மூடைகளை மார்க்கெட் கமிட்டிகள் மூலம் கொள்முதல் செய்து வைத்து விட்டு சரியான விலை கிடைக்காததால் மூன்று மாதங்களுக்கு மேலாக கூடுதல் விலை வருமென காத்திருக்கின்றனர்."

கல்பட்டி சத்திரம்-அய்யலூர் இடையே பழைய தடத்தில் புதிய ரயில் பாதை : தினமலர்

கல்பட்டி சத்திரம்-அய்யலூர் இடையே பழைய தடத்தில் புதிய ரயில் பாதை : தினமலர்: "கல்பட்டி சத்திரம்-அய்யலூர் இடையே பழைய தடத்தில் புதிய ரயில் பாதை

ஜனவரி 15,2009,00:00 IST

வடமதுரை : விழுப்புரம்- திண்டுக்கல் இரண்டாவது ரயில் பாதை திட்டத்தில் கல்பட்டிசத்திரம்-அய்யலூர் இடையே மட்டும் புதிய பாதை அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள் ளது.திருச்சி- திண்டுக்கல் இடையே 1998 வரை இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கல்பட்டிசத்திரம்- அய்யலூர் இடையே 2 இடங்கள் மேடாக இருந்தது. இன்ஜின்கள் பெட்டிகளை இழுக்க முடியாமல் திணறியதால் எரிபொருள் செலவும், தண்டவாள தேய்மானமும் அதிகம் இருந்தது.


பாதையின் சாய்வு விகிதத்தை மாற்றுவதற்காக கீரனூர் பகுதியில் சென்ற வழித்தடம் கைவிடப்பட்டு குமரம்பட்டியை சுற்றி 5.5 கி.மீ., தூரத்திற்கு புதிய பாதை அமைக்கப்பட்டது. இங்கு அதிகபட்சமாக 80 அடி ஆழம், 150 அடி அகலம் வரை பள்ளம் வெட்டி எடுக்கப்பட்டது.1998ல் பணி நடந்ததால் ஒரு ரயில் பாதைக்காக மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் நீண்ட இழுபறிக்கு பிறகு விழுப்புரம்- திண்டுக்கல் இரண்டாவது பாதை திட்டத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் அருகில் மற்றொரு தண்டவாளம் அமைக்க வேண்டுமானால் பாறைகளை வெடிவைத்தல், பாலங்களை மாற்றியமைத்தல், வாய்க்கால்களை மாற்றியமைத்தல் என பல சிக்கல்கள் உள்ளன. இது தற்போதைய போக்குவரத்திற்கு பெரும் பாதிப் பை ஏற்படுத்தும்.


இதனால் கல்பட்டிசத்திரம்-அய்யலூர் இடையே கீரனூர் வழியே ஏற்கனவே இருந்த (மீட்டர் கேஜ்) வழித்தடத்திலேயே புதிய பாதை அமையும் வாய்ப்புள்ளது. இவ்விரு ஸ்டேஷன்களுக்கிடையே மட்டும் இரட்டை ஒருவழிப்பாதையாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே இன்ஜினியர்கள் தெரிவிக்கின்றனர்."

கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்: தினமலர்

கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்: தினமலர்: "கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்

ஜனவரி 15,2009,00:00 IST

மயிலாடுதுறை : கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுக்கு தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எம்பாவை எஸ். யோகநாதன், பொதுச்செயலாளர் நாகு சுப்ரமணியன் அறிக்கை:மத்திய, மாநில அரசுகள் நெல்லுக்கும், கோதுமைக்கும் இணையாக கரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. இதனால் கரும்பு சாகுபடியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கையிருப்பு அதிகமாக இருந்ததால் சர்க்கரை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு கரும்பிற்கு நல்ல விலை தர முடியாத நிலை ஏற்பட்டது. பணம் பட்டுவாடாவிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது சர்க்கரை விலை உயர்ந்துள்ளதால் பல சர்க்கரை ஆலைகள் மாநில அரசு பரிந்துரைத்துள்ள விலையை விடக் கூடுதலாக வழங்க முன் வந்துள்ளன. இந்த ஆண்டு மத்திய அரசு சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (ராசுகர்) இறக்குமதிக்கு அனுமதித்து, அவற்றை வெண் சர்க்கரையாக மாற்றி உள்நாட்டில் விற்க அனுமதிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் சர்க்கரை விலையில் வீழ்ச்சி ஏற்படும். இதனால் கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் பாதிக்கப்பட்டு கரும்பு விவசாயம் நசியும்.

அதனை தவிர்க்க சுத்திரிக்கப்படாத சர்க்கரையை இறக்குமதி செய்து அவற்றை வெண் சர்க்கரையாக மாற்றி 2 ஆண்டுக்குள் மீண்டும் ஏற்றுமதி மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டும். ஸ்வீட் ஸ்டால் மற்றும் ஆடம்பர பானங்களான கோக் ,பெப்சி போன்றவைகள் தான், உற்பத்தியாகும் சர்க்கரையில் 65 சதவீதத்தை பயன்படுத்துகின்றன. அவைகளுக்கு விலையை உயர்த்தி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகளை அழிக்க நினைக்கும் சுத்திகரிக்கப்படாத சர்க்கரை இறக்குமதி திட்டத்தை மறு பரிசீலனை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது."

உடுமலையில் 12 ஆண்டுகளுக்கு பின் பூக்கும் 'சைக்காஸ்' மலர்: தினமலர்

உடுமலையில் 12 ஆண்டுகளுக்கு பின் பூக்கும் 'சைக்காஸ்' மலர்: தினமலர்: "உடுமலையில் 12 ஆண்டுகளுக்கு பின் பூக்கும் 'சைக்காஸ்' மலர்

ஜனவரி 15,2009,00:00 IST

உடுமலை : காஷ்மீர், ஊட்டி, கொடைக்கானல் உட்பட மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும் அரிய வகை 'சைக்காஸ்' மரம், உடுமலை ஐஸ்வர்யா நகரிலுள்ள செவ்வேள் என்பவர் வீட்டில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன் 'சைக்காஸ்' வகை மரம் வாங்கி வளர்த்துள்ளார். வட்ட வடிவத்தில், அழகிய வண்ணத்தில் விரிந்த கீற்றுடன் வளர்ந்து வந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது வட்ட வடிவ கீற்றுக்களுக்கு மத்தியில் மஞ்சள் நிறத்தில் 'ராக்கெட்' வடிவத்தில் மனதைக் கவரும் 'சைக்காஸ் மலர்' மலர்ந்துள்ளது. இந்த அதிசய மலரை, சுற்றுப்புற பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்."

வெள்ளை எலி வளர்ப்பில் ஆதிவாசி மக்கள் ஆர்வம்: தினமலர்

வெள்ளை எலி வளர்ப்பில் ஆதிவாசி மக்கள் ஆர்வம்: தினமலர்: "வெள்ளை எலி வளர்ப்பில் ஆதிவாசி மக்கள் ஆர்வம்

ஜனவரி 15,2009,00:00 IST

குன்னூர் : நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வனப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்கள் வெள்ளை எலி வளர்ப்பில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.குன்னூர் வனச்சரக எல்லைக்குள் 4,000 எக்டர் பரப்பளவில் வனம் உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் செங்கல்கோம்பை, குறும்பாடி, ஆனைப்பள்ளம், நெடுகல் கோம்பை, மேல் குறும்பாடி, கீழ் குறும்பாடி, நீராடிக்கோம்பை, சேம்பக்கரை உள்ளிட்ட ஏராளமான ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.


இக்கிராமங்களில் உள்ள ஆதிவாசி மக்கள், வனத்தில் விளையும் கடுக்காய், நெல்லிக்காய், பூச்சக்காய், சீகைக்காய், துடைப்பம் செய்யப் பயன்படும் ஈச்சம்புற்களை சேகரித்து, விற்று வருகின்றனர்.குறும்பாடி பகுதியில் வசிக்கும் குறும்பர் இன ஆதிவாசி மக்களிடம் வெள்ளை எலி வளர்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது; இவர்கள் வீட்டின் முன் கூண்டு வைத்து வெள்ளை எலிகளை வளர்க்கின்றனர். இவற்றுக்கு காடுகளில் விளையும் புல் மற்றும் கேரட் போன்றவற்றை உணவாக அளிக்கின்றனர்.


வெள்ளை எலி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஆதிவாசி மக்கள் கூறுகையில், ''நாங்கள் வளர்க்கும் வெள்ளை எலியை பலரும் வாங்கி செல்கின்றனர். எங்களிடம் உள்ள வெள்ளை எலி 2 முதல் 3 கிலோ எடை கொண்டது. வெள்ளை எலிகளில் மருத்துவக் குணம் இருப்பதாலும் பலர் வாங்குகின்றனர். ஒரு எலியை 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். இதன் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது,'' என்றனர். தற்போது, கிளி ஜோசியம் போன்று பல இடங்களில் எலி ஜோசியம் பார்க்கப்படுகிறது; எலி ஜோசியத்துக்காகவும் சிலர் வெள்ளை எலிகளை வாங்கிச் செல்வதாக இவர்கள் கூறுகின்றனர்."

பழநி அருகே கற்கால மனிதர்கள் ஓவியங்கள் கண்டுபிடிப்பு: தினமலர்

பழநி அருகே கற்கால மனிதர்கள் ஓவியங்கள் கண்டுபிடிப்பு: தினமலர்: "பழநி அருகே கற்கால மனிதர்கள் ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

பழநி : பழநி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பழநி அருகே உள்ளது பாப்பம்பட்டி நரிப் பாறை. இங்குள்ள மலை உச்சியில் உள்ள இரண்டு குகைகளில் பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது பற்றி தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, டாக்டர்.மணிவண்ணன், நாட்ராயன் ஆகியோர் கூறியதாவது:பழநிக்கு மேற்கே 20 கி.மீ., தூரத்தில் குதிரையாற்றின் கரையோரம் 1000 அடி உயரமுள்ள நீண்ட மலைத்தொடர் உள்ளது. இதில் நரிப்பாறை என்ற மலை உச்சியில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன. இந்த குகைகளில் தான் கற்கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஒரு குகையில் கற்கால மனிதர்கள் வேட்டையாட கிளம்பி செல்லும் நிகழ்வு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.தற்போது உள்ள ஓவியத்தில் ஒரு மனிதன் வேட்டை குழுவை நடத்தி செல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு பின்புறம் ஒரு மனிதன் ஒரு விலங்கின் மீது அமர்ந்து செல்வது போல் வரையப்பட்டுள்ளது. அமர்ந்து செல்லும் மனிதன் இந்த குழுவின் தலைவனாக இருக்கலாம். நடந்து வருபவனின் ஒரு கையில் கல் கோடாரி உயர்த்தி பிடித்து வருவது போல் வரையப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஓவியத் தொடருக்கு கீழே உள்ள ஓவியத்தில் ஒரு மனிதன் படகு ஒன்றில் அமர்ந்து அதை துடுப்பு போட்டு இயக்குவது போல் வரையப்பட்டுள்ளது. விலங்கின் மேல் அமர்ந்து செல்லும் மனிதனின் படம் குதிரையை குறிப்பதாகவும், படகு செல்லும் ஆறு, இந்த மலை அடிவாரத்தில் ஓடும் குதிரையாற்றை குறிப்பதாகவும் கொள்ளலாம். குதிரையாறு தமிழ் சங்க இலக்கியங்களில் குதிரையாறு என்றும், மலை முதிரை மலை என்றும் அழைக்கப்படுகிறது. குகையில் உள்ள மொத்த ஓவியங்களும் சாம்பல் நிறத்தில் உள்ளன. மனிதர்களும், விலங்குகளும் குச்சி குச்சியாக வரையப்பட்டுள்ளன.அடுத்த குகையில் ரத்தச்சிவப்பு நிறத்தில் ஏழு கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த கோடுகள் சராசரியாக 13 செ.மீ., நீளமும், 7 செ.மீ., உயரமும் உள்ளவையாக உள்ளன. இந்த கோடுகள் தமிழர்களின் பண்டைய தெய்வங்களான ஏழு கன்னிமார்களை குறிப்பதாக கொள்ள வேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகத்திலேயே 7 கன்னிமார் உருவங்கள் கிடைத்துள்ளன. இது வரை தமிழகத்தில் கிடைத்துள்ள 7 கன்னிமார் உருவங்களில் கற்காலத்தை சேர்ந்த இந்த அடையாளமே மிகப்பழமையானதாகும்.இரண்டு குகைகளிலும் கற்காலத்தை சேர்ந்த கற்கருவிகள் ஏராளமான அளவில் கிடக் கின்றன. ஆகவே இந்த குகை பழங்கற்கால தமிழ் மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பானை ஓடுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. பெருங்கற்காலத்தை சேர்ந்தவை இந்த பானை ஓடுகள். ஆகவே பழைய கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரை அதாவது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும்' என்றனர்."

தை பிறப்பை முன்னிட்டு பழநியில் சிறப்பு வழிபாடு: தினமலர்

தை பிறப்பை முன்னிட்டு பழநியில் சிறப்பு வழிபாடு: தினமலர்: "தை பிறப்பை முன்னிட்டு பழநியில் சிறப்பு வழிபாடு

ஜனவரி 15,2009,00:00 IST

பழநி : தை பிறப்பை முன்னிட்டு பழநி கோயிலில் சிறப்பு வழிபாடும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.தை பிறப்பை முன் னிட்டு பழநி ஆண்டவருக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, பால், பஞ்சாமிர்தம், விபூதி, உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், சோடஷ உபச்சாரத்துடன் நடந்தது. கோயிலின் விழா, கட்டளைதாரர்களின் பட்டியல் விபரங்கள் அடங்கிய நாட்காட்டியை பழநி கோயில் இணை ஆணையர் தி.ராஜமாணிக்கம் வெளியிட்டார். மாலையில் கோயில் வெளிப்பிரகாரத்தில் நாதஸ்வர, தவுல் பயிற்சி பள்ளி மாணவர்களின் இன்னிசை, தேவார, திருவாசக பாடல்களை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மலைக்கோயிலுக்கு செல்லும் படிகளுக்கு சந்தனம்,குங்குமம் வைத்து சூடம் கொளுத்தி பக்தர்கள் பூஜை செய்தனர். உப கோயிலான திருஆவினன்குடி, பெரியநாயகிம்மன் கோயில், பெரியாவுடையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன."

இரும்பு, ஸ்டீல் விலை சரிவு: பீரோ, கட்டில்கள் விலை குறைவு: தினமலர்

இரும்பு, ஸ்டீல் விலை சரிவு: பீரோ, கட்டில்கள் விலை குறைவு: தினமலர்: "இரும்பு, ஸ்டீல் விலை சரிவு: பீரோ, கட்டில்கள் விலை குறைவு

ஜனவரி 15,2009,00:00 IST

சிவகாசி : இரும்பு ஸ்டீல் விலை குறைவால் பீரோ, கட்டில் விலை குறைக்கப் பட்டுள்ளது.கடந்த ஆண்டு இரும்பு, தகடுகளின் விலை கடுமையாக உயர்ந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ இரும்பு தகடு ரூ.58க்கு உயர்ந்தது. இதனால் 2008 ஏப்ரல் முதல் வீட்டு உபயோக பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பீரோ, கட்டில்களுக்கு விலையை உயர்த்தின.


2008 டிசம்பரில் இரும்பு பொருட்களின் விலை குறையத் தொடங்கின. ரூ.58க்கு விற்பனையான இரும்பு தகடு தற்போது கிலோ ரூ.43 ஆக குறைந்தது. கிலோவிற்கு ரூ.15 குறைந்தது. சிவகாசியில் ராமநாதபுரம் மத்திய சர்வோதய சங்கத்தில் இரும்பு தகடு விலை குறைந்ததை தொடர்ந்து பீரோ, கட்டில்களுக்கு விலையை குறைத்துள்ளனர். ரூ.9800க்கு விற்ற 18 கே.ஜி., ஆறரை அடி பீரோ ரூ.8 ஆயிரமாகவும், ரூ.8400க்கு விற்ற ஐந்தரைஅடி பீரோ ரூ.7 ஆயிரமாகவும், ரூ.5100க்கு விற்ற கட்டில் ரூ.4ஆயிரத்து 500 ஆக விலை குறைக்கப் பட்டுள்ளது. இதே போல் டேபிள், ரேக்குகள் என பொருட்களுக்கு தக்கவாறு விலை குறைத்துள்ளது. விலை குறைப்பை சர்வோதய சங்கம் அறிவிப்பு செய்துள்ளது."

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்: தினமலர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்: தினமலர்: "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்

ஜனவரி 15,2009,00:00 IST

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழாவை கொண்டாட இங்கிலாந்து, பிரான்ஸ், தாய்லாந்து, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 14 சுற்றுலாப் பயணிகளை தமிழக சுற்றுலா துறையினர் திருச்சுழிக்கு அழைத்து வந்தனர்.


இவர்களை ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். கோலப்போட்டிகள்,பகவான் ரமண மகரிஷி பிறந்த இல்லத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் திருமேனிநாதர் துணைமாலையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களை கவரும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம் நடந்தன. கோயில் முன் பொங்கலிட்ட பெண்களுடன் சேர்ந்து வெளிநாட்டினரும் பொங்கல் வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழக சுற்றுலாத்துறை அதிகாரி தர்மராஜ், கோயில் செயல் அலுவலர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்."

பண்ருட்டி பகுதியில் காலிபிளவர் வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சி: தினமலர்

பண்ருட்டி பகுதியில் காலிபிளவர் வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சி: தினமலர்: "பண்ருட்டி பகுதியில் காலிபிளவர் வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சி

ஜனவரி 15,2009,00:00 IST

பண்ருட்டி : பண்ருட்டி பகுதியில் காலிபிளவர், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையம், திருத்துறையூர், கள்ளிப்பட்டு, குச்சிப்பாளையம் கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் காலிபிளவர், முட்டைகோஸ் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.


கடந்த 4 ஆண்டுகளாக கார்த்திகை, மார்கழி மாதத்தில் விதை கன்றுகளை நடவு செய்து உரம், ஊட்ட சத்துக்கள் வைத்து பயிர் செய்வது வழக்கம்.இந்தாண்டு அண்ணாகிராம ஒன்றிய தோட்டக்கலைதுறை அலுவலர்கள் சார்பில், காலிபிளவர் போன்ற பயிர் செய்ய முறையாக விதைகள், கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு தோட்டக்கலைதுறை ஒத்துழைப்பு இல்லாததால், சாகுபடி பரப்பு 300 ஏக்கரில் இருந்து 100 ஏக்கராக குறைந்தது.இதில் அனுபவம் பெற்ற சிறுவிவசாயிகள் மட்டுமே ஓசூர் பண்ணையில் விதை கன்றுகள் வாங்கி பயிர் செய்தனர்.


கடந்த மாதம் பெய்த கனமழையில் காலிபிளவர், முட்டைகோஸ் பாதிப்படைந்தது. பல செடிகள் மழையில் மூழ்கி அழுகியது.கடந்த ஒரு வாரமாக கிராமங்களில் இருந்து பண்ருட்டி மார்க் கெட்டிற்கு காலிபிளவர் தினந்தோறும் 10 மூடைகள் வர துவங்கியது. பெங்களூரூ காலிப்பிளவர் 10 ரூபாய் முதல் 15 வரை விற்றது. உள்ளூர் காலிபிளவர் வருகையால் இரு காலிபிளவர் 15 ரூபாய் என விலை குறைந்தது. இன்னும் 15 நாட்களில் முட்டை கோஸ் அறுவடைக்கு வர துவங்கும்."

சுற்றுலா பொருட்காட்சியில் பொங்கல் விழா : தினமலர்

சுற்றுலா பொருட்காட்சியில் பொங்கல் விழா : தினமலர்: "சுற்றுலா பொருட்காட்சியில் பொங்கல் விழா

ஜனவரி 15,2009,00:00 IST

சென்னை : சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் சுற்றுலா பொருட்காட்சியில், தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவில், தாசில்தார் சியாம் சுந்தர், மாவட்ட சமூக அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மாநகராட்சி: சென்னை மாநகாட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சுப்ரமணியன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், துணை மேயர் சத்யபாமா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்க என்று அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.சுற்றுலா பொருட்காட்சி: சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 35வது சுற்றுலா பொருட்காட்சியில், அத்துறையின் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் சமத்துவ தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த ஆங்கிலேயர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சுற்றுலாத்துறையின் சிற்றூர் சுற்றுலா வளாகத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கிராமிய பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கு சென்னை மக்களுடன் வெளிநாட்டினர் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். முன்னதாக சிலம்பம், வாள் வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளுடன் அமைச்சர் மற்றும் வெளிநாட்டினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


விழாவில் சுற்றுலாத்துறை தலைவர் சன்வத்ராம் ஐ.ஏ.எஸ்.,(ஓய்வு), செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., மேலாண்மை இயக்குனர் ராஜாராம் ஐ.ஏ.எஸ்., ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் 9 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், நடனம், குரலிசை போட்டிகள் நடந்தன. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று வகை போட்டியிலும் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் கலை விழாவில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், 2ம் பரிசாக 7,500 மற்றும் மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் வீதம் பரிசுகள் அளித்து பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன."

'ஒற்றுமைக்கு வழிகாட்டும் நல்லிணக்க கிராமம்': தினமலர்

'ஒற்றுமைக்கு வழிகாட்டும் நல்லிணக்க கிராமம்': தினமலர்: "'ஒற்றுமைக்கு வழிகாட்டும் நல்லிணக்க கிராமம்'

ஜனவரி 15,2009,00:00 IST

அம்மன் கோயிலில் கிறிஸ்தவர்களுக்கு முதல் மரியாதை. அனைத்து சமுதாயத்தினருக்கும் சம உரிமை; மாதா கோயில் சப்பரத்தை இழுக்கும் இந்துக்கள்; கந்தூரி விழாவில் இந்து, கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் என நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள பனங்குடி கிராமம்.இப்பகுதிகளில் 'நாடு'(பல கிராமங்களை உள்ளடக்கியது) என்ற கட்டமைப்பு கடந்த பல தலைமுறைகளாக உள்ளது. பனங்குடி நாட்டின் கீழ் கோவினிபட்டி, பிளாமிச்சம்பட்டி, மும்முடிச்சான்பட்டி, சக்கரவர்த்திபட்டி, வீரனேந்தல்பட்டி, சீகூரணிபட்டி கிராமங்கள் உள்ளன.


அனைவருக்கும் மரியாதை: இங்கு பழமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். பத்துநாள் நடைபெறும் விழாவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் 'மரியாதை' செலுத்தப்படுகிறது.'முதல் மரியாதை' பனங்குடி நாட்டு தலைவருக்கு அளிக்கப்படும். ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் மட்டுமே தலைவராக முடியும் என்ற முறைப்படி, கிறிஸ்தவர்கள் தான் தலைவராகின்றனர். தலைவர் என்ற அடிப்படையில் அம்மன் கோயில் முதல் மரியாதையை பெறுவது கிறிஸ்தவர்கள் தான்.பிரதான நிகழ்ச்சியான தேரோட்டத்தை நடத்தும் பொறுப்பு ஆதிதிராவிடர், நாவிதர், துணி துவைப்பவர் போன்ற சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சமுதாயத்தினர் பூஜை செய்து மரியாதை செலுத்திய பிறகு தான் தேர் புறப்படும். முஸ்லிம்கள் பங்கேற்று, அனைத்து பணிகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றனர்.


கந்தூரியில் இந்துக்கள்: வியாகுல அன்னை ஆலயத்தில் நடக்கும் இயேசு வின்னேற்ற விழாவில் மாதாவின் சப்பர பவனி நடத்தப்படும். இந்துக்களும், முஸ்லிம்களும் சப்பரத்தை இழுத்து செல்வர். மசூதியில் நடக்கும் கந்தூரி விழாவில் இந்து, கிறிஸ்தவர்கள் தான் சிறப்பு விருந்தினர்களாக கவுரவிக்கப்படுவர்.பொங்கல் பண்டிகையின் 2 வது நாள் அன்று இங்கு நடக்கும் மஞ்சுவிரட்டு ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது. கிராம பெரியவர்கள் ஒன்று கூடி, 7 கிராமங்களிலும் ஒவ்வொரு வீடாக சென்று 'தொழு திறந்து' (மாடு அவிழ்த்தல்) விடும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. 4 ம் நாள் சர்ச்சுகளின் முன் கிறிஸ்தவர்கள் பொங்கலிடும் போது இந்துக்கள் அதில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.


பனங்குடியை சேர்ந்த புஷ்பவனம் கூறுகையில், 'அம்மன் கோயில் விழாவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடந்த 250 ஆண்டுகளாக இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றி வருகிறோம். கிறிஸ்தவ, முஸ்லிம் விழாக்களில் நாங்கள் தான் முன்நின்று பணிபுரிவோம்' என்றார்.


ஊர் தலைவர் சேசுராஜ் கூறுகையில், 'பனங்குடிக்கு உட்பட்ட 7 கிராமங்களிலும் பசுமையை பாதுகாத்து வருகிறோம். செடி, கொடிகளை அழித்து விடும் என்பதால் யாரும் ஆடு வளர்ப்பதில்லை. திருமணங்களின் போது வரதட்சணை கேட்பது கிடையாது. சமுதாய வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறோம்' என்றார்."

தமிழக சிறைகளில் அருங்காட்சியம் திறப்பு: தினமலர்

தமிழக சிறைகளில் அருங்காட்சியம் திறப்பு: தினமலர்: "தமிழக சிறைகளில் அருங்காட்சியம் திறப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

மதுரை : தமிழக சிறைகளில் 15 ஆண்டுகளாக கைதிகள் செய்த, கற்ற நல்ல விஷயங்களை மற்ற கைதிகளும் அறியும் வகையில் அருங் காட்சியகம் திறக்கப் பட்டுள்ளது.சென்னை, மதுரை உட்பட 9 மத்திய சிறைகள், 114 கிளை சிறைகள், 2 பெண் சிறைகள், 6 சிறப்பு கிளைச் சிறைகள், ஒரு திறந்தவெளிச் சிறை உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிக்க வாய்ப்பு அளிக்கபடுகிறது. இதுதவிர யோகா போன்ற சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.கடந்த 15 ஆண்டுகளாக கைதிகள் செய்த நல்ல விஷயங்கள், தயாரித்த பொருட்கள், அவர்களை மேம்படுத்திய நிகழ்வுகளின் போட்டோக்களை சேகரித்து மற்ற கைதிகளின் பார்வைக்கு வைக்க சிறைத்துறை டி.ஜி.பி., நட்ராஜ் உத்தரவிட்டார்.


இதன்படி நேற்று மதுரை உட்பட மத்திய சிறைகளில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. மற்றவர்களும் பார்க்கும் வகையில் பார்வையாளர் பகுதிக்கு அருங்காட்சியகம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது."

பெற்றோர்களே... தேர்வுக்கு தயாராகுங்கள்!இனியும் 'டிவி' பார்க்கலாமா: தினமலர்

பெற்றோர்களே... தேர்வுக்கு தயாராகுங்கள்!இனியும் 'டிவி' பார்க்கலாமா: தினமலர்: "பெற்றோர்களே... தேர்வுக்கு தயாராகுங்கள்!இனியும் 'டிவி' பார்க்கலாமா

ஜனவரி 15,2009,00:00 IST

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கு தற்போது மாணவர்கள் தீவிரமாக படிக்கத் தொடங்கியுள்ளனர். பிளஸ் 2 மாணவர்களைப் பொறுத்தவரை இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் அவர்களது எதிர்காலம். பெரும்பாலான வீடுகளில் படிப்பைப் பொறுத்தவரை அது பிள்ளைகளுக்கு மட்டுமான பொறுப்பு என்று நினைக்கின்றனர்.


அவர்களது நடவடிக்கைகளும் அதையொட்டியே அமைகின்றன. 'இந்த முறை நீ நன்றாக படிக்கவில்லை என்றால், மாடு மேய்க்க போக வேண்டியதுதான்' என்று சொல்லும் பெற்றோர்களை சாதாரணமாக பார்க்கிறோம்.'நாங்கள் அவ்வளவாக படிக்கவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது... உன் வாழ்க்கையை நீயே பார்த்துக் கொள்' என்று கூறிவிட்டு 'டிவி' மெகா தொடரில் மூழ்குவோரும் உண்டு.பொதுத் தேர்வுக்கு பிள்ளைகள் தயாராகும் போது, பெற்றோர்களும் அதை தவமாக கருதி, அவர்களுடன் சேர்ந்து அந்த முயற்சிக்கு உதவ வேண்டும்.பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கும் போது, 'டிவி' நிகழ்ச்சியில் குடும்பத்தார் அனைவரும் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பதும், அந்நிகழ்ச்சியைப் பற்றி பேசி அரட்டை அடிப்பதும், படிக்கும் மாணவரின் கவனத்தை சிதறடிக்கும்.


'உனக்கென்ன நீ... படிக்க வேண்டியதுதானே. நாங்கள் சத்தத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறோம்' என்று சமாதானம் சொல்வோரையும் நாம் சாதாரணமாக பார்க்கிறோம். பிள்ளைகள் புத்தகத்தை தூக்கியவுடன் 'டிவி' முன் அமரும் பெற்றோர்கள் அதிகரித்து வருகிறார்கள். பிளஸ் 2 பாடங்களை எல்லா பெற்றோர்களாலும் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே, பிள்ளை என்ன படிக்கிறான் என்பதையும் அது தொடர்பாக விவாதிக்கவும் எல்லோராலும் முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோராக இருந்தால் கூட, நம் பிள்ளை அக்கறையாக படிக்க வேண்டுமே என்று கருதி, உண்மையான விருப்பத்துடன் அருகில் இருந்து ஒரு 'டீ' தயாரித்துத் தருவது கூட, பெற்றோரின் அக்கறையை பிள்ளைகளை உணர செய்யும்.


தேர்வு முடிந்த பின்னர், மாநில அளவில் முதல் மதிப்பெண், மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்து சாதிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், 'உங்கள் பிள்ளை சாதித்ததன் ரகசியம் என்ன' என்று கேட்கும் போது, அவர்கள் கூறும் ஒரே பதில், 'கடந்த ஓர் ஆண்டாக, பிள்ளைகளைத்தான் கண்ணும் கருத்துமாக பார்த்தோம், 'டிவி' பார்க்கவில்லை' என்பதுதான்.


பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியவை:* 'டிவி' என்பது வீட்டில் பயன்படுத்தாத பொருளாக மாற வேண்டும். இது மாணவரின் கடைசி நேர 'ரிவிஷன்' செய்ய உதவும்.
* சிலருக்கு 'ரிவிஷன்' செய்வது பிடிக்காது. ஆகவே, அதை தவிர்க்க முயற்சி செய்வார்கள். தேர்வுக்கு தயாராவோருக்கு 'ரிவிஷன்' முக்கியம் என்பதை எடுத்துரைத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வையுங்கள்.
* பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கும் போது, கோபம் மற்றும் பயம் ஆகியவற்றை காண்பிக்கக் கூடாது. இது அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்கும்.
* படிக்கும் பிள்ளைகளை கவனித்து வாருங்கள். மிக அதிகமாக படித்து களைப்படைவது போல் தெரிந்தால் கொஞ்சம் ஓய்வு எடுக்க சொல்லுங்கள். படிக்கும் போது, அவ்வப்போது இடைவெளி விட்டு படிக்க செய்வது அவர்கள் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.
* காபி அருந்துவதற்கு பதிலாக 'பால்' குடிக்க சொல்லலாம். புரோட்டீன் நிறைந்த தானியங்கள் மற்றும் பருப்புகளை இடையில் அளிக்கலாம். இடையில் கொஞ்சம் டிபன் அளிக்கலாம். நிறைய தண்ணீர் கொடுக்கலாம்.
* படிக்கும் பிள்ளைகள் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது குறைவாக சாப்பிட்டாலோ அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து அவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ள வேண்டும். அதையும் மீறினால் நல்ல ஆலோசகர்களிடம் பிள்ளைகளை கூட்டிச் சென்று பார்க்கலாம். இதற்கு பள்ளிகளையே நாடலாம்.
* மாணவர்கள் 'ரிலாக்சாக' இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வெறும் பாடப்புத்தகங்களையே படித்துக் கொண்டிருக்காமல், செய்தித்தாள்கள் படிக்க அல்லது மென்மையான மியூசிக் கேட்பதை மகிழ்ச்சியுடன் அனுமதிக்கலாம். சிறிய வயதிலிருந்து செய்தித்தாள்களை படிக்க சொல்வது அவர்களின் பொது அறிவை வளரச் செய்து, மூளையை சுறுசுறுப்பாக்கும்."

எடையை குறைக்க எளிய வழி!: தினமலர்

எடையை குறைக்க எளிய வழி!: தினமலர்: "எடையை குறைக்க எளிய வழி!

ஜனவரி 15,2009,00:00 IST

இன்றைய அவசர உலகில், உணவிலும் உடற்பயிற்சியிலும் அதிக அக்கறை காட்டாததால், 30 வயதுக்கு அதிகமானோரிடம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதாலோ அல்லது மாத்திரைகளை விழுங்குவதாலோ எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாது.உடல் எடை ஒரே நாளில் அதிகரிக்கவில்லை.


அதுபோல் படிப்படியாகத்தான் திட்டமிட்டு உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடல் எடையை குறைக்க இரு தனி நபர்களுக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் எப்போதும் பொருந்தாது. ஆகவே இன்னொருவர் கடைபிடிக்கும் முறையை கடைபிடித்துப் பார்ப்போமே என்று நினைக்கக்கூடாது.ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டில் (மாவு பொருள்) அல்லது ஒரு கிராம் புரதத்தில் ( பருப்புகளில் உள்ளது) உள்ள கலோரி அளவை விட, கொழுப்புப் பொருட்களில் இரு மடங்கு கலோரி உள்ளது. எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்துவிட்டு, குறைந்த கலோரி உள்ள பழங்கள் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


ஒரு சிலருக்கு கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு உள்ள உணவுகளை அறவே நீக்கினால் உடல் எடை குறையும். சிலர் அவர்கள் எடுக்கும் உணவின் அளவில் கொஞ்சம் மாற்றம் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.உருளைக்கிழங்கு, அரிசி, இனிப்பு பொருட்கள், இனிப்பு சுவையுடைய பழங்கள் ஆகியவற்றை அளவுடன் சாப்பிட வேண்டும். கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்திருப்பதையோ அல்லது 'டிவி' பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும். தனிநபரின் உயரம், வயது, ஆண், பெண், மரபணு, தசை திரட்சி, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, எண்ணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நம் உடல் எடையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஒருவருக்கு உடல் எடை குறைப்புக்கு கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை டாக்டர் தீர்மானிக்கிறார்.


நீரிழிவு, இருதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், சில வகை கேன்சர் உள்ளிட்டவற்றுக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் முதல் கடமையாக இருக்க வேண்டும். உடல் எடையை குறைப்பதற்கான பொருட்கள் இப்போது அதிகம் வந்துவிட்டன. புத்தகங்கள், 'சிடி'கள், கிரீம், லோஷன், பெல்ட்கள் உள்ளிட்டவை உடல் எடையை குறைக்கும் கோஷங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் இவையெல்லாம் குறைக்கும் என்று நம்புவதை விட, கொஞ்சம் கொஞ்சமாக நம் உணவில் கொண்டு வரும் மாற்றமே நல்லது. உடற்பயிற்சி என்பதை தொடர்ச்சியாக செய்யக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும். நம்மால் எது முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானது. ஒரே நாளில் எடையை குறைக்க முடியாது."

மீனாட்சி கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை : தினமலர்

மீனாட்சி கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை : தினமலர்: "மீனாட்சி கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை

ஜனவரி 15,2009,00:00 IST

மதுரை : தை மாத பிறப்பையொட்டி மதுரை மீனாட்சி கோயிலில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை நேற்று நடந்தது.ஒருசமயம் சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமானுக்கும், பாண்டிய மன்னருக்கும் கல் உட்பட அனைத்திலும் ஜீவன் உண்டா, இல்லையா என்பது குறித்து விவாதம் நடந்தது.


அருகில் இருந்த கல் யானையை சுட்டிக்காட்டி 'இந்த யானை கரும்பு சாப்பிடுமா' என்று பாண்டிய மன்னர் ஏளனம் செய்தார். சித்தர் கூறியபடி ஒரு கட்டு கரும்புகளை மன்னர் எடுத்துக் கொடுக்க, கல் யானை துதிக்கையால் வாங்கி உண்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் கோயில் சித்தர் சன்னதி அருகேயுள்ள கல் யானைக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் முன்பு கரும்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் 16 கால் மண்டபத்தில் கோயில் யானை பார்வதிக்கு கரும்பு வழங்கப்பட்டது.


வைரக்கீரிடம் : மீனாட்சி அம்மனுக்கு தை மாதப் பிறப்பு, தை அமாவாசை, சித்திரை முதல் நாள், தீபாவளி அன்று வைரக்கீரிடமும், தங்க பாவாடையும் அணிவிப்பது வழக்கம். நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டது. அபிஷேகத்திற்கு பிறகு காலை 10.30 மணிக்கு கிரீடம் எடுத்து வைக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அணிவிக்கப் பட்டது. சுவாமி சுந்தரேஸ்வரருக்கும் வைர நெற்றிப் பட்டை சாத்தப்பட்டது."

பாளை.,மத்திய சிறை கைதிகளுக்கு வடை, பாயாசத்துடன் சாப்பாடு: தினமலர்

பாளை.,மத்திய சிறை கைதிகளுக்கு வடை, பாயாசத்துடன் சாப்பாடு: தினமலர்: "பாளை.,மத்திய சிறை கைதிகளுக்கு வடை, பாயாசத்துடன் சாப்பாடு

ஜனவரி 15,2009,00:00 IST

திருநெல்வேலி : தமிழ்ப்புத்தாண்டையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகளுக்கு வாழைஇலையில் வடை, பாயாசத்துடன் சாப்பாடு வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் மத்திய சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தினத்தையொட்டி உறவினர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக கைதிகள் தடுப்புசுவரின் இருபுறமும் நின்றுகொண்டுதான் பேசிக்கொள்ள முடியும். ஆனால் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களை ஒரே அறையில் சந்தித்து பேச அனுமதிப்பதாக சமீபத்தில் சிறைத்துறை டி.ஜி.பி.,நட்ராஜ் தெரிவித்திருந்தார்.


பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகள் ஆயிரத்து 450 பேருக்கு வாழைஇலையில் வடை, பாயாசத்துடன் சாப்பாடு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாளை.,சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தாசுவாமிகள் செய்திருந்தார். அவர் பேசுகையில், ஒரு குற்றத்தை செய்தவர்கள் வாழ்க்கை முழுவதும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் திருந்துவதற்கு தரப்படும் வாய்ப்புதான் இது. அனைவரும் மற்றவர்கள் மீது அன்புகாட்டுங்கள் என்றார். தொடர்ந்து கைதிகளுக்கு அவர் உணவு பரிமாறினார்.


நிகழ்ச்சியில் திருவேடகம் அமலாந்தாசுவாமிகள், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சத்யானந்தாசுவாமிகள், கோவை ஆம்டெக்ஸ் நிறுவன உரிமையாளர் கந்தசுவாமி, நெல்லை மத்திய ரோட்டரி கிளப் தலைவர் மயில்பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி பேசுகையில், தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பாளை சிறைவாசிகளுக்கு இது ஒரு புதிய அனுபவம் என்றார்."

முதல் மரியாதை பெறும் கோயில் காளைகள்: தினமலர்

முதல் மரியாதை பெறும் கோயில் காளைகள்: தினமலர்: "முதல் மரியாதை பெறும் கோயில் காளைகள்

ஜனவரி 15,2009,00:00 IST

'முனியா... இங்கிட்டு வா...' என்று பாசத்தோடு அழகு அழைக்க, 'உஷ்...உஷ்...' என்று அனல் வீசும் பெருமூச்சுக்காற்றை விட்டப்படி 'ஒன்றுமே தெரியாத பச்சிளம் பாப்பா போல்' அருகே வந்து நிற்கிறது முனியாண்டி கோயில் காளை. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இந்த காளைக்கு தான் முதல் மரியாதை.


ஊர் காவல் தெய்வமான முனியாண்டி கோயிலுக்கு நேர்த்தி கடனாய் விடப்படும் காளைகளில் ஒன்றை கோயில் நிர்வாகம் தேர்வு செய்கிறது. அதற்கு 'முனியாண்டி' என்று பெயர் சூட்டி, அழகு என்பவரிடம் 'தத்து' கொடுப்பது வழக்கம். கடந்த 25 ஆண்டுகளாக அழகு குடும்பம் கோயில் காளைகளை மட்டுமே வளர்த்து வருகிறது. தற்போதுள்ள முனியாண்டி காளைக்கு 4 வயதாகிறது. அறிமுகம் இல்லாதவர் பக்கத்தில் சென்றாலே கால் குழம்பு தேய, திமில் புடைக்க, ஒரு 'குத்து' விடவா என கண்கள் வெறிக்க எச்சரிக்கை விடுக்கிறது. ''ஏதாவது கோயில் விசேஷம்னா யாராச்சும் காளைக்கு வேட்டி, துண்டுனு மரியாதை செலுத்துவாக. பிறகு தேங்காய் சில்லு, புண்ணாக்கு, அரிசி, பருத்தி விதைனு விருப்பப்பட்டதை கொடுப்பாக'' என்று பாசம் காட்டுகிறது அழகு குடும்பம்.


அலங்காநல்லூரில் யாரும் பிடிக்காத, யாருக்கும் பிடிகொடுக்காத ராஜாவாக இருக்கும் முனியாண்டிக்கு, மற்ற ஊர் ஜல்லிக்கட்டு என்றாலே குஷி வந்துவிடுகிறது. குங்குமப் பொட்டு, சலங்கை கட்டுதல் என்று அலங்கரித்துவிட்டாலே, 'இதுக்குதானே இவ்வளவு நாளா காத்திருந்தேன்' என முனியாண்டி விளையாட தயாராகிவிடுகிறது. மற்ற நாட்களில் அழகு வீடுதான் கதி.''இதுவரை மற்ற ஊர் ஜல்லிக்கட்டில் முனியாண்டி பிடிபட்டதாக சரித்திரம் இல்லை. இனியும் பிடிபடபோவதில்லை'' என்று தன்னடக்கத்துடன் கூறுகிறது அழகு குடும்பம்.


அதை ஒத்துக்கொள்ளும் விதமாக 'ஆமாம்' என்பதுபோல் தலையை ஆட்டியது முனியாண்டி காளை. இதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டிலும் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. முதலில் சம்பிராதய முறைப்படி கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து காளையை அவிழ்த்துவிடுகின்றனர். அடுத்து குறிப்பிட்ட சமூகத்தினரின் கோயில் காளைகள் விடப்படுகின்றன. இவற்றை பிடிப்பது போல் பாசாங்கு காட்டும் 'காளையர்கள்', அருகில் வந்தவுடன் பயபக்தியுடன் தொட்டு வணங்கி 'தப்பிச்சோம்டா சாமி' என்று பின்வாங்குவதை இன்றும் பார்க்கலாம்."

பாலூட்டும் அன்பிலே அன்னை நியே !: தினமலர்

பாலூட்டும் அன்பிலே அன்னை நியே !: தினமலர்: "பாலூட்டும் அன்பிலே அன்னை நியே !

ஜனவரி 15,2009,00:00 IST

பசுக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ அருளும் கோபிநாதசுவாமி, திண்டுக்கல் அருகிலுள்ள ரெட்டியார்சத்திரத்தில் அருளுகிறார். மாட்டுப்பொங்கல் தினமான இன்று இவரது தரிசனம் பெறுவோம்.
தல வரலாறு: வடநாட்டில் பசுக்களை மேய்த்து வந்த ஒரு தாயும், மகனும் பசுக்களுடன் இங்கு வந்தனர். ஒருசமயம், இங்கு பஞ்சம் ஏற்படவே பல பசுக்கள் மடிந்தன. பசுக்களின் மீது அன்பு கொண்ட அந்த பசுமேய்ப்போன், பசுக்களின் உயிரை எடுப்பதற்குப் பதிலாக, தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தான். பஞ்சம் நீங்கியது. பசுக்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, தான் வேண்டியபடி உயிரை விட்டான். மகனை இழந்த தாயும் உயிர் விட்டாள்.


இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர், பசுக்களைக் காக்க ஆயர்பாடியிலிருந்து கிருஷ்ணரும், யசோதையுமே இங்கு வந்து உயிரைத் தியாகம் செய்ததாகக் கருதி அவர்களை மானசீகமாக வணங்கி வந்தார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், இம்மலையைச் சுட்டிக் காட்டி அவ்விடத்தில் அந்த தாய்க் கும், மகனுக்கும் கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி பக்தர் அவர்களுக்கு சிலை வடித்தார். சுவாமிக்கு கோபிநாதர் என்றும், அவரது தாயாருக்கு கோப்பம்மாள் என்றும் பெயர் சூட்டினார்.


பிரார்த்தனை தலம்: பசுக்களுக்கான பிரார்த்தனை தலமாக இக்கோயில் திகழ்கிறது. பசுக்கள் கருத்தரிக்கவும், அவை நோயின்றி வாழவும், அதிக பால் சுரக்கவும் விவசாயிகள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அப்பசுக்கள் முதன்முதலில் சுரக்கும் பாலைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பால் சாதம் படைத்து, துளசி மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பசுக்களின் உருவ பொம்மையும் செய்து வைப்பதுண்டு. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையும், இம்மலையில் விளையும் தர்ப்பைப்புல்லையும் பசுக்களுக்குக் கொடுத்தால், அவை நோயின்றி வாழும் என்கிறார்கள்.


பொங்கல் விசேஷம்: தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல் நாட்களில் சுவாமிக்கு பால், தயிர், வெண்ணெய், நெய் அபிஷேகம் நடக்கிறது. பசு வளர்ப்போர், மாட்டுப் பொங்கல் தினத்தன்று பசு முன்பாக நின்று, ''கோபிநாத சுவாமி அருளால் பட்டி (பசு) பெருக! பால் பானை பொங்க!'' என்று சொல்லி பசுவைச் சுற்றி வந்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.


தாய்க்கு முதல் பூஜை: 620 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. புல்லாங்குழல் வாசித்தபடி கோபிநாதர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் கன்றுக்கு பால் கொடுக்கும் பசுவின் சிலை இருக்கிறது. கோபிநாதருக்கு நடக்கும் மூன்று கால பூஜையின்போதும் சேகண்டி ஒலித்து, சங்கு முழக்கும் வழக்கம் உள்ளது. சங்கு, மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும், சுவாமியின் ஆயுதங்களில் ஒன்று என்பதாலும் இவ்வாறு செய்கின்றனர். சன்னதி முன் மண்டபத்தில் கோப்பம்மாள் காட்சி தருகிறார். பிள்ளையை விட தாய்க்கே முக்கியத்துவம் தர வேண்டுமென்பதன் அடிப்படையில், இவரை பூஜித்தபின்பே கோபிநாதருக்கு பூஜை செய்கின்றனர். தாயும், பிள்ளையும் காட்சி தரும் தலம் என்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கவும், பிள்ளைகள் பெற்றோர் மீது பாசத்துடன் இருக்கவும், பெண்கள் தங்கள் புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். மலையடிவாரத்தில் கருடாழ்வார், ஆஞ்சநேயருக்கு சன்னதிகள் உள்ளன.இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா 3 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவின்போது மட்டும் உற்சவர் கிருஷ்ணர் மலையிலிருந்து புறப்பாடாகி, வீதியுலா சென்று, நான்காம் நாள் கோயிலுக்குத் திரும்புகிறார். சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.


இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள ரெட்டியார்சத்திரம் சென்று, அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ரெட்டியார்சத்திரத்தில் இருந்து பஸ், ஆட்டோ வசதி குறைவு. சனிக்கிழமைகளில் திண்டுக்கல்லில் இருந்து கோயில் வரை ஸ்பெஷல் பஸ்கள் செல்கிறது.திறக்கும் நேரம்: காலை 8- மாலை 5 மணி.போன்: 0451- 2554 324, 2554 241, 98420 12922."

மகர சங்கராந்தியை முன்னிட்டு நான்கு லட்சம் பேர் புனித நீராடல்: தினமலர்

மகர சங்கராந்தியை முன்னிட்டு நான்கு லட்சம் பேர் புனித நீராடல்: தினமலர்: "மகர சங்கராந்தியை முன்னிட்டு நான்கு லட்சம் பேர் புனித நீராடல்

ஜனவரி 15,2009,00:00 IST

சாகர் தீவுகள் : மகர சங்கராந்தியை முன்னிட்டு, சாகர் தீவுகளில், வங்காள விரிகுடா கடலில் கங்கை நதி சங்கமிக்கும் இடத்தில் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள், சங்குகளை ஊதியபடியும், மேளங்களை முழக்கியபடியும் புனித நீராடினர்.நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் குழுமினர்.


கங்கா சாகர் மேளாவை பார்த்து ரசிப்பதற்காவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வந்திருந்தனர்.புரி சங்கராச்சாரியார் நிஷிலானந்தா சரஸ்வதி மகராஜும் புனித நீராடினார். கங்கை நதி சங்கமிக்கும் இடத்தில் நின்று சூரிய நமஸ்காரமும் செய்தார். புனித நீராடலுக்கு முதல்நாளே குவிந்துவிட்ட பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெட்டவெளியில் படுத்து உறங்கினர். பெரும்பாலான பக்தர்கள் புனித நீராடலுக்கு முன், தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டனர்.


அங்கு குவிந்திருந்த பிச்சைக்காரர்களுக்கும் ஏராளமான பக்தர்கள் தர்மம் செய்தனர்.கபில் முனி ஆசிரமத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெறுவதற்காக, அரை கி.மீ., தூரத்துக்கும் அதிகமாக வெறும் காலுடன் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ராமகிருஷ்ண மிஷன், இஸ்கான், கன்னகுயா, காட்டன் ஸ்டிரீட் யங் பாய்ஸ் கிளப், பர்ரபசார் பயம் சமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அன்னதானம் வழங்கின.புனித நீராடலில் கலந்து கொண்ட பக்தர்களில் பலர், பசுக்களை தானமாக வழங்கினர். முதல் முதலாக கங்கா சாகர் மேளா ஐரோப்பிய சமூகத்தில் 1819ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1939ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடந்து வருகிறது."

பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி: தினமலர்

பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி: தினமலர்: "பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி

ஜனவரி 15,2009,00:00 IST

சபரிமலை : சன்னிதானத்தில் பகவான் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்ற சிறிது நேரத்தில் பொன்னம் பலமேட்டில் பிரகாசித்த மகர ஜோதியை கண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசமடைந் தனர். சபரிமலையில் நேற்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது.


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடியிருந்தனர். அதிகாலை முதலே 18ம் படியேறி தரிசனம் செய்யவும், நெய்யபிஷேகம் நடத்தவும் நீண்ட கியூ காணப்பட்டது. மகர சங்கரம பூஜை: அதிகாலை 4.15 மணிக்கு துவங்கிய நெய்யபிஷேகம் 6 மணிக்குநிறுத்தப்பட்டது. பின்னர் மகர சங்கரம பூஜைக்கான ஏற்பாடுகள் துவங்கியது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்த 6.27 மணிக்கு பகவானின் விக்ரகத்தில் சிறப்பு நெய்யபிஷேகம் நடத்தப்பட்டது. திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து அனுப்பப் பட்ட நெய் தேங் காய்கள் உடைக்கப்பட்டு விக்ரகத் தில் அபிஷேகம் செய்யப் பட்டது. அதன் பின்னர் தீபாராதனை நடைபெற்றது. பின்னர்7 முதல் பகல் 1 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உச்சபூஜை நடத்தப் பட்டு நடை மூடப்பட்டது.


திருவாபரண பெட்டி வருகை: மாலை 6 மணிக்கு சரங்குத்திக்கு திருவாபரண பெட்டிகள் வந்து சேர்ந்தது. அப்போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. பந்தளத்தில் திருவாபரண பெட்டி புறப்பட்டது முதல் இந்த கருடன் கூடவே வருவதாக ஐதீகம். இங்கு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின், திருவாபரண பெட்டி 18ம் படி வழியாக 6.34 மணிக்கு ஸ்ரீகோயிலுக்கு வந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் திருவாபரண பெட்டி யை பெற்றுக் கொண்டு நடை அடைத்தனர். 6.40 மணிக்கு நடை திறக்கப் பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மகர நட்சத்திரம் விண்ணில் ஒளிவிட்டு பிரகாசிக்க துவங்கியது.


அதை தொடர்ந்து 6.42 மணிக்கு முதல் முறை ஜோதி ஒளிவிட்டு பிரகாசித்தது. அப்போது பக்தர்களின்'சரணம் ஐயப்பா' என்ற கோஷம் எழுந்தது. பின்னர் 6.43க்கு இரண்டாவது முறையும், 6.44 க்கு மூன்றாவது முறையும் ஜோதி காட்சி தந்தது. ஜோதி தரிசனம் முடித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். வரும் 20ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். எனினும் 18ம் தேதி காலை 10 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் உண்டு. அன்று உச்சபூஜைக்கு முன்னோடியாக களப பூஜை நடைபெறும். 19 ம் இரவு வரை பக்தர்கள் தரிசனம் நடத்த முடியும். ஜன.,16 முதல் 19 வரை படிபூஜை நடைபெறுகிறது. ஜன.,20 காலையில் பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜவர்மா முன்னிலையில் நடைமூடப்படும். பின்னர் மன்னர் பிரதிநிதி திருவாபரணங்களுடன் பந்தளம் திரும்பி செல்வார்.


துளிகள்: * மகரஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் பக்தர்களை அனுமதிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறைவான பாஸ் வினியோகிக்கப்பட்டதால் பலரும் இந்த வாய்ப்பை பெற முடியவில்லை
*சன்னிதானம் முழுக்க முழுக்க மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு சோதனை தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது."

சபரிமலை வருமானம் ரூ.100 கோடியை கடந்தது : தினமலர்

சபரிமலை வருமானம் ரூ.100 கோடியை கடந்தது : தினமலர்: "சபரிமலை வருமானம் ரூ.100 கோடியை கடந்தது

ஜனவரி 15,2009,00:00 IST

சபரிமலை : சபரிமலையில் நடப்பு மண்டல,மகரவிளக்கு சீசனில் மொத்த வருமானம் 100 கோடி ரூபாயை கடந்தது. கடந்த ஆண்டு நவ.,15ம் தேதி மண்டல சீசன் துவங்கியது. மொத்தம் 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்ற இந்த காலத்தில் மொத்தம் 71 கோடியே 95 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த தொகையுடன் அன்னதான நன்கொடையாக 67.28 லட்சம் ரூபாய் கிடைத்தது. மகரவிளக்குகாக நடை திறக்கப்ட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் மொத்த வருமானம் 30 கோடியை கடந்தது. இதன் மூலம் முதன்முறையாக சபரிமலை வருமானம் மண்டல, மகரவிளக்கு சீசனில் நூறு கோடி ரூபாயை கடந்தது. அரவணை விற்பனை முதலிடத்திலும், காணிக்கை இரண்டாம் இடத்திலும் உள்ளது. அபிஷேக டிக்கெட் விற்பனை மூலம் 34 லட்சம் ரூபாயும், அபிஷேக நெய் விற்பனை மூலம் 56 லட்சம் ரூபாயும் கிடைத்துள்ளது"

பெட்ரோல் ரூ.11; பாட்டில் தண்ணீர் 15 ரூபாய்:நம்ப முடியலியா; உண்மை தான்: தினமலர்

பெட்ரோல் ரூ.11; பாட்டில் தண்ணீர் 15 ரூபாய்:நம்ப முடியலியா; உண்மை தான்: தினமலர்: "பெட்ரோல் ரூ.11; பாட்டில் தண்ணீர் 15 ரூபாய்:நம்ப முடியலியா; உண்மை தான்

ஜனவரி 15,2009,00:00 IST

புதுடில்லி : பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 11 ரூபாய்; ஆனால் அதை விட, குடிநீர் விலை 4 ரூபாய் அதிகம்.என்னாங்க, பெட்ரோல் விலை நாலு மடங்கு அதிகம்; தப்பா சொல்றீங்க...ன்னு நீங்க நினைக்கலாம்; மேலே படியுங்க:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல், அதாவது 190 லிட்டர் விலை 2,000 ரூபாயை தொடும்; அதாவது, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 10 ரூபாய்.


கச்சா எண்ணெயில் இருந்து தான் பெட்ரோல், டீசல் முதல் பல பெட்ரோலியப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.ஒரு பேரல் கச்சா எண்ணெயில் இருந்து இவை பிரித்தெடுக் கும் போது, 20 லிட்டர் பெட்ரோல், 80 லிட்டர் டீசல் கிடைக்கிறது. இப்படி பிரித்தெடுத்த பின் உள்ள விலை தான் மேலே கூறப்பட்டுள்ளது.கச்சாவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெட்ரோல் விலை 11 ரூபாய்; டீசல் விலை 13 ரூபாய். ஆனால், போக்குவரத்து, எண்ணெய் நிறுவனங்களின் லாப சதவீதம், வரிகள் சேர்த்தபின், இவற்றின் விலை நான்கு மடங்கு உயர்கிறது.


டில்லியில் 45 ரூபாய் லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது; இதில், 22 ரூபாய் வரிகள், 12 ரூபாய் எண்ணெய் கம்பெனிக்கு லாப பங்கு சேர்க்கப்படுவதால் இந்த விலை. இதுபோல, டீசல் விலை லிட்டர் 32 ரூபாய் தான். 19 ரூபாய் வரை வரி, கட்டணங் கள் சேர்க்கப் படுகின்றன.பெட்ரோல், டீசலை ஒப்பி டும் போது, பாட்டில் தண்ணீர் விலை அதிகம். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் விலை 12ல் இருந்து 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது."

இன்று ராணுவ தினம்: தினமலர்

இன்று ராணுவ தினம்: தினமலர்: "இன்று ராணுவ தினம்

ஜனவரி 15,2009,00:00 IST

நாட்டின் ராணுவ தினம் ஆண்டு தோறும் ஜன.,15ம் தேதி கொண்டாடப்படுகிறது. 11 லட்சத்து 30 ஆயிரம் வீரர்களை கொண்டுள்ள இந்திய ராணுவமே உலகின் இரண்டாவது பெரிய தரைப்படையாக உள்ளது. உயிரைப் பொருட்படுத்தாமல் தேசத்தை பாதுகாக்கும் சேவையாகவே ராணுவ பணியை கூறலாம்.


பிற நாடுகளை போல கட்டாய ராணுவ சேவை இந்தியாவில் கிடையாது. நாட்டுக்காக போரிடுவது மட்டுமல்லாமல் மிகவும் நீளமான இந்திய எல்லையை பாதுகாப்பது, பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் ஈடுபடுவது, இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு உதவுவது, ஐ.நா., அமைதிப்படை சார்பில் பிற நாடுகளுக்கும் சென்று அமைதிப்பணிகளில் ஈடுபடுவது என ராணுவத்தின் பணிகள் அதிகம்.ராணுவ தினத்தின் போது டில்லியில் வீரர்கள் அணிவகுப்பு, டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறுகிறது."

அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்கள்: தினமலர்

அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்கள்: தினமலர்: "அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்கள்

ஜனவரி 15,2009,00:00 IST

திண்டுக்கல் : தமிழகத்தில் பாரம்பரியமாக புழக்கத்தில் இருந்த மடுமுழுங்கி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கொத்தமல்லி சம்பா உட்பட பல நெல் ரகங்கள் அழிந்து வருகின்றன. தமிழகத்தின் முக்கிய தொழிலாக விவசாயத்தொழில் உள்ளது. இந்த தொழிலுக்கு அடிப்படை நெல் விவசாயமாகும். தற்போது தமிழ்நாடு விவசாயப்பல்கலைக்கழகம் புதுப்புது நெல் ரகங்களை, புதுபுது பெயர்களில் அறிமுகம் செய்கிறது. இதனால் பாரம்பரியத்தில் உள்ள பல நெல்வகைகள் அழிந்து வருகின்றன.


மடு முழுங்கி: இந்த நெல் ரகத்தை ஆறு, குளம்,குன்று,மலைகளில் வறட்சி காலங்களில் விவசாயிகள் தூவி விடுவார்கள். மழை பெய்த நீர் நிலைகளில் இது முளைத்து விடும். தண்ணீர் எவ்வளவு இருந்தாலும் கவலைப்படாமல் நெற்கதிர்கள் அந்த அளவிற்கு வளர்ந்து மேலோங்கி நிற்கும். விவசாயிகள் பரிசலில் சென்று கதிர்களை அறுப்பார்கள். இவற்றின் வயது 180 நாட்களாகும்.


மாப்பிள்ளை சம்பா:இது நல்ல ஊட்டச்சத்து உள்ள நெல் ரகமாகும். இதை சாப்பிட்டால் மாப்பிள்ளைக்கு உள்ள வலிமை உண்டாகும். இந்த அரிசி சாப்பிட்டவர்கள் கிராமங்களில் இளவட்டகல்லை தூக்கியும், காளை மாடுகளை அடக்கவும் செய்வார்கள். உடல் உறவுக்கு ஏற்ற வீரியம் இந்த வகை அரிசியில் கிடைக்கும். இதன் காலம் 180 நாட்களாகும்.


60ம் குறுவை: இது 60 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். இந்த நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சில இடங்களில் பயிரிடுகின்றனர். இதே போல பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த கருங்குறுவை, சீரகசம்பா, கொத்தமல்லி சம்பா, காட்டுயானம்,ஒற்றியடையான், நவ்ரா ஆகிய நெல் வகைகள் அழிந்துள்ளன. இவைகள் நார் சத்து அதிகமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கும். இந்த வகை அரிசிகளை சாப்பிட்டால் எளிதில் ஜீரண சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.


மேலும் இந்த பாரம்பரிய நெல் வகைகள் இயற்கை உரங்களைத்தான் ஏற்றுக் கொள்ளும், ரசாயன உரங்களை ஏற்றுக் கொள்ளாது. இவற்றின் காலம் 60 நாட்கள் முதல் 180 நாட்களாகவே இருந்தன. இவை தற்போது அழிந்து வருகிறது. இவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்."

+2 மொழிப்பாடத்தை டம்மி ஆக்கும் தேர்வுத்துறை: தினமலர்

+2 மொழிப்பாடத்தை டம்மி ஆக்கும் தேர்வுத்துறை: தினமலர்: "+2 மொழிப்பாடத்தை டம்மி ஆக்கும் தேர்வுத்துறை

ஜனவரி 15,2009,00:00 IST

பரமக்குடி : பிளஸ் 2 பாடங்களில் மொழிப்பாடத்தை தேர்வுத்துறை தொடர்ந்து டம்மியாக்குவதால் அதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இன்ஜி., உள்ளிட்ட மேல்படிப்புக்கு கட் ஆப் முறையில் பிளஸ் 2 பாடங்களின் மதிப் பெண்கள் முக்கியத்துவம் பெற்றதால் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் பாடங்களுக்கு டம்மி எண் வழங்கப்பட்டு மதிப்பெண் முறைகேடுகள் தடுக்கப்பட்டன.


இந்நிலையில் நுழைவுத்தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்த பின்னரும் தற்போது நான்கு பாடங்களுக்கும் 'டம்மி' எண் வழங்கப்பட்டே அரசு தேர்வுகள் நடக்கின்றன. மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலத்துக்கு இது போன்று ' டம்மி' எண் வழங்கப்படுவதில்லை. முன்பு கட்ஆப் மார்க் இருந்த போது இதன் அவசியம் குறைவாக இருந்தது. தற்போது ஆசிரியர் பயிற்சி படிப்புகள் போன்றவற்றுக்கு பிளஸ் 2 வில் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படுவதால் மொழிப்படத்தின் மதிப் பெண்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்கு டம்மி எண் வழங்கப்படாததால் மதிப்பெண் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் மற்ற பாடங்களுக்கு வழங்குவது போல் விடைத்தாள் நகலும் மொழிப்பாடங்களுக்கு வழங்குவது இல்லை .


இதன் காரணமாக முறைகேடுகள் நடந்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது. மேல்கல்விக்கு மொழிப்படங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் மற்ற படங்களுக்கு உள்ளது போல 'டம்மி' எண் , விடைத்தாள் நகலும் வழங்கினால் மட்டுமே தேர்வுத் துறை மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் கூறும்போது, ' மற்ற பாடங்களை போல மொழிப்பாடங்களுக்கும் டம்மி எண், விடைத்தாள் நகலும் வழங்கினால் தான் முறைகேடுகளை தவிர்க்கலாம். தேர்வு கட்டணத்தை அரசு ரத்து செய்தும் தேர்வுக்கு பின் விடைத்தாள் நகல் பெற 300 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் மாணவர்கள் மதிப்பெண் குளறுபடிகளை அறிய வாய்ப்பில்லாமல் போகிறது.வருங்காலங்களில் முறைகேடுகளை தவிர்க்க கட்டணம் வசூலிப் பதை தவிர்க்கலாம்' என்றார்."

தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் பாதிப்பு: தினமலர்

தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் பாதிப்பு: தினமலர்: "தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் பாதிப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

வத்தலக்குண்டு : தமிழகத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம், கொப்பரை களம் இல்லாததால் சீரான விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, கரூர், தஞ்சை,மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தென்னை விவசாயம் அதிக அளவில் உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சுற்றியுள்ள பகுதிகள் மஞ்சளாறு, மருதாநதி மூலம் பாசன வசதி பெறுகின்றன. இங்கு தென்னை விவசாயம் பல ஏக்கரில் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றுப்படுகை, மதுரை மாவட்டம் சோழவந்தானில் தென்னை விவசாயம் சிறப்பாக உள்ளது. ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தென்னையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். அவ்வப்போது தென்னைகளை செம்பான் சிலந்தி நோய் தாக்குவதால் தேங்காய் சிறியதாகி மகசூல் பாதிக்கிறது. கேரள வாடல் நோய் தாக்குவதால் மரம் பட்டு விடுகிறது. இதை தவிர்க்க வேளாண் ஆராய்ச்சியாளார்கள் தகுந்த ஆய்வு செய்து, உரிய பூச்சிகொல்லிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.


கடந்த 5 ஆண்டுகளாக தேங்காய் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.2 லிருந்து 3 வரை மட்டுமே விற்று வருகிறது. அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.36 நிர்ணயம் செய்துள்ளது. கரூர், காங்கேயம், வெள்ளகோயில் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேங்காய் கொள்முதல் செய்து அப்பகுதிகளில் கொப்பரையாக மாற்றி மொத்தமாக விற்று லாபம் ஈட்டுகின்றனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத் தில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு ஊழல்கள் நடந்ததால் அனைத்து நிலையங்களும் மூடப்பட்டன. தேங்காய் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு ஆங்காங்கே கொப்பரை தேங்காயாக மாற்ற களம் அமைத்துக் கொடுத்தால் நல்ல லாபம் பெற வாய்ப்பாக இருக்கும்."

கோல்கட்டாவில் தரையிறங்கிய பாக்., விமானம்: தினமலர்

கோல்கட்டாவில் தரையிறங்கிய பாக்., விமானம்: தினமலர்: "கோல்கட்டாவில் தரையிறங்கிய பாக்., விமானம்

ஜனவரி 15,2009,00:00 IST

கோல்கட்டா : தாகாவில் கடும் மூடுபனி நிலவியதால், வங்கதேசம் சென்ற பாக்., விமானம் கோல்கட்டாவில் அவசரமாக தரையிறங்கியது. பாகிஸ்தானில் கராச்சி நகரிலிருந்து நேற்று அதிகாலை, விமானம் ஒன்று வங்கதேச தலைநகர் தாகாவிற்கு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் பணி பெண்கள் உட்பட 200 பேர் இருந்தனர். கோல்கட்டாவிற்கு மேல், விமானம் பறந்து கொண்டிருந்த போது, தாகா விமான நிலையத்தில் இருந்து தகவல் ஒன்று வந்தது. அதில், தாகாவில் கடும் மூடு பனி நிலவுவதால், அங்கு விமானம் தரை இறங்க முடியாது என, தெரிவிக்கப்பட்டது. இதனால், கோல்கட்டா விமான நிலையத்தில் பாக்., விமானம் தரையிறங்கியது."

மூன்று குழந்தை பெற்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் : சட்ட கமிஷன் பரிந்துரையால் சர்ச்சை: தினமலர்

மூன்று குழந்தை பெற்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் : சட்ட கமிஷன் பரிந்துரையால் சர்ச்சை: தினமலர்: "மூன்று குழந்தை பெற்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் : சட்ட கமிஷன் பரிந்துரையால் சர்ச்சை

ஜனவரி 15,2009,00:00 IST

திருவனந்தபுரம் : 'இரண்டுக்கும் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு ரூ. பத்தாயிரம் அபராதம் விதிக்க வேண்டும்'என, கேரள அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு சார்பில், சட்ட கமிஷன் நியமிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ண அய்யர் இந்த கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.


இந்த கமிஷன் இம் மாதம் 24ம் தேதி தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.சட்ட கமிஷன் பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. 'இரண்டுக்கும் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். இவர்களுக்கு இலவச கல்வி திட்டம் தொடர்பான சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும்' என்பது உட்பட பல பரிந்துரைகள் இதில் உள்ளன.இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின், அதை அமல்படுத்துவதா இல்லையா என்பதை மாநில அரசு முடிவு செய்யும். ஆனால், அதற்குள் இது தொடர்பாக, கேரளாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத அமைப்புகள், இந்த பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன."

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "ஒனிடா பெயரில் மொபைல் அறிமுகம்

ஜனவரி 14,2009,02:15
மும்பை: இந்தியாவின், மிர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பிரபலமான 'ஒனிடா' பெயரில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஒனிடா' மொபைல் போன்கள் பல மாடல்களில், பல்வேறு சிறப்பம் சங்களுடன் உள்ளன. ஊ910 மாடல் மொபைல் போன், இரண்டு மெகா பிக்சல் கேமரா, ஒரு ஜிபி மெமரி கார்டு, இரண்டு சிம் கார்டுகள் போடும் வசதி ஆகிய சிறப்பம் சங்களை கொண்டு உள்ளன. இந்த இரண்டு சிம் கார்டுகளில் இருந்து ஒரே சமயத்தில் அழைப்புகள் வரும். எனவே, ஒருவர் தனது அலுவலகம் மற்றும் வீட்டு எண்களை ஒரே மொபைல் போனில் பயன்படுத்தலாம். 'ஒனிடா' மொபைல் போன்களை வினியோகிப்பதற்காக, 400 வினியோகஸ்தர்கள் மற்றும் 10 ஆயிரம் சில்லறை வியாபாரிகளை நியமிக்க மிர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது."

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "டி.சி.எஸ்., நிறுவனத்திற்கு அதிர்ஷ்டம்

ஜனவரி 14,2009,02:18
வாஷிங்டன்: சத்யம் கம்ப்யூட்டர் சிற்கு தடை விதிக்கப் பட்டதால், அந்தப் பணிகளை டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு (டி.சி.எஸ்.,) உலக வங்கி வழங்கியிருக்கிறது. சில பணி நடைமுறைகள் மீறல் குற்றச்சாட்டு அடிப்படையில் உலக வங்கி சத்யம் கம்ப்யூட் டர்ஸ் நிறுவனத்தை தடை செய்து அறிவித்தது. அதேசமயம் உலக வங்கி தடையில் மற்றொரு சாப்ட்வேர் நிறுவனம் ஆன 'விப்ரோ' வேறு காரணத்திற்காக இடம் பெற்றது. தற்போது உலக வங்கியானது, 'சத்யத்திற்குத் தரப்பட்ட பணிகள் டி.சி.எஸ்., நிறுவனத்திற்குத் தரப்படும்' என்று அறிவித்தது. இதற்கிடையே தங்கள் மீதான உலக வங்கி புகாரை 'விப்ரோ' தலைவர் அசீம் பிரேம்ஜீ ஏற்கவில்லை. தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் 'விப்ரோ' சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நாம் மேற்கொண்ட நடவடிக்கை சரியானதே' என்று எழுதியுள்ளார்"

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "பெட்ரோல், டீசல் விலை குறைய நாள் நெருங்கியது

ஜனவரி 14,2009,02:18
புதுடில்லி: அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை நாளை குறைக்கலாம் என பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சரவை குழு கூட்டம் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாயும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.70ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.3.70ம் லாபம் பெறுகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.31.70ம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ.11.69ம் நஷ்டம் ஏற்படுகிறது. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு ஏற்படும் இழப்பீடை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், சில்லறை எரிபொருள் விலையை நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கான சுங்கவரியை லிட்டருக்கு குறைந்தபட்சமாக ஒரு ரூபாய் அதிகரிப்பதன் மூலம் அதிக வருவாய் பெற அரசு தீர்மானித்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு ஏற்படும் நஷ்டத்தை சரி கட்ட, இந்த நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கூடுதலாக எண்ணெய் கடன் பத்திரம் வழங்குவது குறித்தும் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப் படும். உலகளவிலான கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து, டிசம்பர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை முறையே லிட்டருக்கு 5 ரூபாய் மற்றும் 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. இவ்வாறு, பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்."

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: உயிர்பலி தவிர்ப்பு: தினமலர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: உயிர்பலி தவிர்ப்பு: தினமலர்: "அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: உயிர்பலி தவிர்ப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 20 பேர் காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் மேடை அமைக்கப்பட்டு நேற்று காலை 10.25மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கி, மாலை 4 மணிக்கு முடிந்தது.


முதலில் மேளதாளத்துடன் நாட்டாமை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி, அவனியாபுரம், சோளங்குருணி, கொம்பாடி, கோவில்பாப்பாகுடி ஊர்களிலிருந்து 305 காளைகள் கலந்துகொண்டன. கலெக்டர் சீத்தராமன், ஆர்.டி.ஓ., ஜெயராஜ், எஸ்.பி.,(பொறுப்பு) செந்தில்குமார் மேற்பார்வையில் நடந்தது. அவனியாபுரம் நகராட்சி தலைவர் போஸ்முத்தையா, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் எஸ்.ஆர். கோபி, தி.மு.க., திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஏ.எஸ்.பி., பிரவீண் குமார் அபினவ் தலைமையில் டி.எஸ்.பி., கணேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வராஜ், வலையங்குளம் ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள் வரலட்சுமி, கண்ணன், சுரேஷ் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.


மாடுபிடி வீரர்களின் பெயர், முகவரி பதிவு செய்து மருத்துவ பரிசோதனை நடந்தது. அதன்பின் எண் போடப்பட்ட வெள்ளை பனியன்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்நடை துறை மண்டல இணைஇயக்குனர் டாக்டர் ராஜகோபால், உதவி இயக்குனர் டாக்டர் காஜா முகைதீன், நோய் புலனாய்வுதுறை உதவி இயக்குனர் பூமிநாதன் காளைகளை பரிசோதனை செய்தனர். குறைந்த வயது உள்ள 9 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. 47 காளைகளுக்கு கொம்பில் இருந்த கூர்மை மழுங்கச் செய்யப்பட்டன. உடலில் எண்ணெய் தடவி வந்த 39 காளைகளில் எண்ணெய்தன்மை நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன.


பிராணிகள் நலவாரிய நிர்வாகிகள் பாணிமா, ரமேஷ், பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பு தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் சிவகுமார் பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமன்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடுகளை அடக்கியவர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், பேன், பட்டுசேலை, வேஷ்டி, துண்டு, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன."

மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?: தினமலர்

மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?: தினமலர்: "மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?

ஜனவரி 15,2009,00:00 IST

வாயில்லா ஜீவன்களில் மனித சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்பது பசு என்றால் அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் 'பால் வந்து விட்டதா?' என்பது தான் நம் முதல் கேள்வியாக இருக்கிறது. அன்போடு வாஞ்சையாக ''அம்மா'' என்று பசு அழைக்கிறது. ஆனால், உண்மையில் நம் எல்லோருக்கும் பசுவே தாயாக இருந்து பால் தந்து காக்கிறது. பெற்ற தாய் கூட இரண்டு வயது வரை தான் பால் தருவாள். ஆனால், எத்தனை வயதானாலும் பசுவின் பால், மோர், தயிர், நெய் நம் உணவில் சேர்த்துக் கொள்ள மறப்பதில்லை.


வயதாகி சாப்பிட முடியாத நிலை வரும் போது, பசும்பால் மட்டுமே நமக்கு கைகொடுக்கிறது. உயிர் வெளியேறத் துடிக்கும் போது, குழந்தைகளெல்லாம் வாயில் பால் ஊற்றுகிறார்கள். இறந்த பிறகு சமாதியிலும் பால் ஊற்றுகிறார்கள். இப்படி பிறப்பு முதல் இறப்புக்குப் பிறகும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயான பசுவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. அதனால் தான் அதனை ''கோமாதா'' என்று அழைக்கிறோம்.


பசுவுக்காக வாழ்ந்த சித்தர்: திருவாவடுதுறைக்குத் தெற்கே உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும் இடையன் வாழ்ந்து வந்தான். தான் வளர்த்து வந்த பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். பசுக்களும் மூலன் மீது தன் அன்பைப் பொழிந்தன. ஒருநாள் காட்டில் மேய்ச்சலுக்கு சென்றபோது, ஒரு பாம்பு மூலனைத் தீண்டியது. அவன் இறந்து விட்டான். மூலனை விட்டுப் பிரிய மனமில்லாத பசுக்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி நின்றன. வான் வழியே சென்று கொண்டிருந்த சிவயோகியான சித்தர் ஒருவர் இக்காட்சியைக் கண்டு பசுக்கள் மீது இரக்கம் கொண்டார். பசுக்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணம் கொண்டார். 'பரகாயப்பிரவேசம்' என்னும் கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் மூலனின் உடம்பில் புகுந்தார். அதுவரை மூலனாக இருந்த அந்த உடல், சித்தரின் புனித சேர்க்கையால் ''திருமூலர்' என்ற பெயர் பெற்றது. அவர் புகழ் பெற்ற சித்தர் ஆனார். தன் மீது அன்புகாட்டிய மூலன் உயிர்த்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. காலையிலிருந்து பசும்புல் உண்ணாமல் வாடி நின்ற பசுக்கூட்டங்களை திருமூலர் நீர் அருந்தச் செய்து, வயிறார மேயச் செய்து ஊர்போய் சேர்ந்தார். இவர் எழுதிய பாடல்கள் 'திருமந்திரம்' என்று போற்றப்படுகிறது.


பசுக்குலத்திற்கே பெருமை: அப்பர் தேவாரத்தில் 'ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்' என்று பாடுகிறார். 'ஆ' என்றால் பசு; 'அஞ்சாடுதல்' என்றால் 'பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்தல்'. பஞ்சகவ்யம் என்பது பசுவிடமிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம்(பசுவின் ஜலம்), கோமயம்(பசுஞ்சாணம்) என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே பஞ்சகவ்யம் எனப்படும். இதுதவிர, பாலபிஷேகம், தயிர் அபிஷேகம், நெய்யபிஷேகம் என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு. திருவையாறு அருகிலுள்ள தில்லைஸ்தானம் என்னும் தலத்தில் இருக்கும் பெருமானுக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகும். தில்லைஸ்தானம் என்னும் இத்தலம் தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர் குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை 'கோசிருங்கம்' எனப்படும் பசுக்கொம்பினால் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.


சாத்வீக உணவு: சாதுவான பிராணியான பசுவினைத் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்கிறோம். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதசமுதாயத்திற்கு மகத்தான உணவுப்பொருளாகப் பாலைத் தருகிறது. உணவு வகையில் சாத்வீகம் (சாந்தம்), ராட்சசம்(மிருகம்), தாம்சம் (மந்தம்) என்று முக்குணங்களை ஏற்படுத்தும் பொருள்கள் உண்டு. இதில் பசுவின் பால் சாத்வீக உணவாகும். பால் பசுவின் ரத்தம் என்பதால் அதுவும் அசைவம் தானே என்ற அபிப்ராயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சாஸ்திரத்தில் பசும்பால் சாத்வீக உணவு என்றே குறிக்கப்பட்டுள்ளது. பாலைக் கொடுப்பதால் பசுவிற்கு ஹிம்சை எதுவும் இல்லை. அது நம் அறிவை துலங்கச் செய்கிறது. பல சாதுக்கள், பசும்பாலை ஆகாரமாகக் கொண்டு உதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். முக்குண உணவுகளைப் பற்றி விவரிக்கும் கீதையை போதித்த கிருஷ்ணர், ஆயர்பாடியில் பாலையும், வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட நவநீதகிருஷ்ணனாக இருந்திருக்கிறார்.


வெள்ளையைத் தேடி கருப்பு வரும்: நம் மனம் எல்லாம் வெள்ளை வெளேரென்று பாலினைப் போன்று இருக்கவேண்டும். அப்போது தான் கன்னங்கரேல் என்று இருக்கின்ற கிருஷ்ணன் நம்மை நாடி வருவான். 'கார்வண்ணன்' என்றால் 'மேகம் போன்று கருமையாக இருப்பவன்' என்று பொருள். எவ்வளவு கருமையாக மேகம் வானில் கூடுகிறதோ அதற்கு தகுந்தாற்போல மழை கொட்டும். அதுபோல, கண்ணன் நம் மீது அருள்மழை கொட்டுபவன். அவன் அப்படியே பசும்பாலை எடுத்துக் குடிப்பதில்லை. அது தயிராகி, அதிலிருந்து வெண்ணெய் எடுத்தால் அதை உண்ண விரைந்து வருவான். இதற்கு காரணம் என்ன தெரியுமா? வெள்ளை மனம் என்னும் பாலை, பக்தி என்னும் நெருப்பு கொண்டு காய்ச்சினால் அது பொங்கும். நெருப்பை அணைத்ததும் பொங்கிய பால் தணிவது போல, மனதின் உணர்ச்சி வேகத்தை அடக்கி, அதில் சாந்தம் என்னும் உறை ஊற்றினால், மனம் தயிர் போல கெட்டியாகி விடும். தயிரை மத்தினால் கடைந்தால் வெண்ணெய் ஊற்றெடுப்பது போல, கெட்டியான மனம் என்னும் தயிரை 'கடவுளைப் பற்றிய ஒருமுகசிந்தனை' என்ற மத்தால் கடைந்தால் 'பூரணத்துவம்' (மனிதனாகப் பிறந்ததே கடவுளை நிரந்தரமாக அடைவது என்ற நோக்கம்) என்ற வெண்ணெய் கிடைக்கும். நம் மனதுக்குள் கிடக்கும் பூரணத்துவம் ஆகிய வெண்ணெயை திருட கருமை நிறமுடைய கண்ணன் வருவான். அவனது அருள் கிடைத்ததும் நாம் அவனுடன் இரண்டற கலந்து விடுவோம்


நடமாடும் கோயில்: பசு இருக்கும் இடம் புனிதமானது. அதை நடமாடும் கோயில் எனலாம். பூஜையறையில் செய்யும் வழிபாட்டை விட, மாட்டுக்கொட்டிலைத் தினமும் சுத்தம் செய்து, அங்கு அமர்ந்து ஜபம் செய்யும் வழிபாட்டிற்கு கோடி மடங்கு பலனும், புண்ணியமும் கிடைக்கும். பசுவின் உடலில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் உள்ளனர். சகல புண்ணிய நதிகளும் அதன் உடம்பில் அடங்கியுள்ளனர். அதனால் பசுவே ஒரு நடமாடும் ஆலயம் போன்றதாகும். அங்கு செய்யப்படும் பிரார்த்தனை எல்லா தேவர்களையும் சென்றடையும். லட்சுமி வாசம் செய்யும் தலங்களான சுமங்கலியின் வகிடு, மலர்ந்த தாமரை, யானையின் தலை, வில்வதளம், பசுவின் பிருஷ்டபாகம்(பின்புறம்) ஆகிய ஐந்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காலை வேளையில் பசுக்கள் கிளப்பும் தூசி பட்ட காற்று மிகவும் உன்னதமானது. அதனால் அந்த பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலைப் பொழுதை ''கோதூளி லக்னம்'' என்று குறிப்பிடுவர். தினபூஜைகள் நடத்தும் போது முதலில் பசுவிற்கு கோபூஜை செய்த பின்பே கஜபூஜை, சிவபூஜைகளைச் செய்ய வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது.


பசுக்களைப் பாதுகாப்போம்: பசுக்களைப் பாதுகாத்தால் நாட்டில் நன்மை உண்டாகும். பாவங்கள் விலகும். அமைதி பெருகும். உலகில் தர்மம் தழைக்க வேண்டுமானால் பசுக்களைப் பாதுகாப்பது அவசியம். தர்மதேவதையே தவம், தூய்மை, தயை, சத்தியம் என்னும் நான்கு கால்களைக் கொண்ட காளை வடிவில் தான் இருக்கிறது. கலிதோஷம் நீங்கி தர்மம் மீண்டும் உலகில் தலையெடுக்க வேண்டுமானால், கோபால கிருஷ்ணனை வழிபாடு செய்து, பசுக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் எல்லா தர்மங்களையும் தர்மருக்கு உபதேசிக்கும்போது, பசுவின் மகிமைகளைச் சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும்படி எடுத்துக் கூறுகிறார். பசுவைத் தானமாகக் கொடுப்பது மிகுந்த புண்ணியபலனைத் தருவதாகும். மாபாதகங்கள் தீர்க்கும் மாமருந்து என்றே இதைச் சொல்லலாம். ஆனால், தானம் பெறுபவர் அந்தப் பசுவை இறுதி வரை பாதுகாப்பவரா என்பதை உறுதி செய்தபின் தானம் செய்வது நல்லது. சியவன மகரிஷி பசுக் களைப் பற்றி,''எந்ததேசத்தில் பசுக்கள் தங்களுக்கு இம்சை நேருமோ என்று பயப்படாமல், கோகுலத்தில் நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின் றனவோ அந்த தேசமே எல்லாப் பாவங்களில் இருந்து விலகி ஒளியுடையதாய் பிரகாசிக்கும்,'' என்று குறிப்பிடுகிறார்."

Tuesday, January 13, 2009

பாசிபட்டினத்தில் படகு போட்டி: தினமலர்

பாசிபட்டினத்தில் படகு போட்டி: தினமலர்: "பாசிபட்டினத்தில் படகு போட்டி

ஜனவரி 13,2009,00:00 IST

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினத் தில் சர்தார் நைனா முகமது தர்கா கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நேற்று மீனவர் இளைஞர் அணி சார்பில் பாய்மர படகு போட்டி நடந்தது. 5 கி.மீ.,தூரம் எல்லை நிர்ணயிக்கப் பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட படகுகள் காற்றை கிழித்துகொண்டு சென்றன. பாசிபட்டினத்தை சேர்ந்த மலையாண்டி படகு முதலாவதாகவும், மகாலிங்கம் படகு இரண்டாவதாகவும், கணேசன் படகு மூன்றாவதாகவும் வந்தன."

மஞ்சள்கொத்து அறுவடை தீவிரம் : தென்மாவட்ட வியாபாரிகள் முகாம்: தினமலர்

மஞ்சள்கொத்து அறுவடை தீவிரம் : தென்மாவட்ட வியாபாரிகள் முகாம்: தினமலர்: "மஞ்சள்கொத்து அறுவடை தீவிரம் : தென்மாவட்ட வியாபாரிகள் முகாம்

ஜனவரி 13,2009,00:00 IST

பரமக்குடி : பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மஞ்சள் கொத்துக்களை வாங்கி செல்ல பரமக்குடியில் தென் மாவட்ட வியாபாரிகள் முகாமிட்டுள்ளனர்.இங்குள்ள மஞ்சள் பட்டணத்தில் பயிரிடப்படும் மஞ்சள்கொத்துகள் பொங்கல் பண்டிகைக்காக ராமநாதபுரம் , மதுரை, சிவகங்கை, விருதுநகர் , புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு பருவம் தவறிய மழையால் இதன் விவசாயம் பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கி செடிகளும் அழுகின.


இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டபோதும் எஞ்சியவற்றை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் தீவிரம் காட்டினர். ஒரு வழியாக அறுவடையை நெருங்கிய நேரத்தில் விவசாயிகளுக்கு லாரி ஸ்டிரைக் பெருத்த இடியாக விழுந்தது.இருப்பினும் இதற்கு கிராக்கி இருப்பதால் தென்மாவட்ட வியாபாரிகள் இங்கு முகாமிட்டு வாங்கி செல்கின்றனர். லாரிகளுக்கு பதில் 'மினிடோர்' லாரிகளை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யப் பட்டாலும் அதிக அளவில் மஞ்சள் கொத்துகள் தேக்கம் அடைந்து வருகின்றன. தற்போது 1.50 ரூபாய் வரை வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 50 காசு அதிகமாகும். தேவை அதிகம் இருப்பதால் பொங்கல் வரை அறுவடை நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்."

மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் பொங்கல் பொருட்கள்: தினமலர்

மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் பொங்கல் பொருட்கள்: தினமலர்: "மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் பொங்கல் பொருட்கள்

ஜனவரி 13,2009,00:00 IST

சென்னை : திருமங்கலம் இடைத் தேர்தலை முன்னிட்டு நிறுத்திவைக்கப்பட் டிருந்த இலவச பொங்கல் பொருட்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்றும், நாளையும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: 'வரும் தை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு நாளாகக் கொண்டாடும் வகையில், திருமங்கலம் இடைத் தேர்தலை முன்னிட்டு, இலவச பொங்கல் பொருட்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட் டிருந்தது. இப்போது தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன், மதுரை மாவட் டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 13 மற்றும் 14ம் தேதிகளில் வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது."

மதுரை மண் மணக்கும் மஞ்சள் கிழங்கு: தினமலர்

மதுரை மண் மணக்கும் மஞ்சள் கிழங்கு: தினமலர்: "மதுரை மண் மணக்கும் மஞ்சள் கிழங்கு

ஜனவரி 13,2009,00:00 IST

மதுரை : பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தில் இருப்பது மஞ்சள் கிழங்கு. நாளை(ஜன.,14) பண்டிகை ஆரம்பிக்கும் நிலையில் மதுரையில் மஞ்சள் கிழங்கு அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. பாலமேடு, அய்யூர், கோணப்பட்டி, சுர்ரம்பட்டி போன்ற பகுதிகளில் மஞ்சள் கிழங்கு அதிகமாக பயிரிடுவது வழக்கம். முழுமையாக மஞ்சள் கிழங்கு வளர்ச்சி அடைய ஓராண்டு ஆகும். ஆனால் பொங்கல் பண்டிகைக்காகவே கடந்த ஆடி மாதம் நடவு செய்யப்பட்டு ஆறு மாதம் கழித்து, தற்போது அறுவடை நடந்து வருகிறது.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறிய மண் வெட்டியால் லாவகமாக மஞ்சள் கிழங்கு செடியை 'உருவி' எடுக்கின்றனர். அதை ஓரிடத்தில் மொத்தமாக சேகரித்து, தண்ணீரில் அலசி களிமண்ணை அகற்றுகின்றனர். மஞ்சள் கிழங்கு செடி காய்ந்து விடக்கூடாது என்பதற்காக உச்சி வெயில் எட்டி பார்க்கும் முன்பே, தண்ணீரால் குளிப்பாட்டி வாகனங்களில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.


வியாபாரிகளை நேரடியாக அணுகும் இவர்கள், ஒரு மஞ்சள் கிழங்கு கொத்தை மூன்று ரூபாய்க்கு வாங்கி சில்லரையில் 10 ரூபாய் வரை விற்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகைக்காகவே மஞ்சள் கிழங்கை பயிரிடுவது வழக்கம். இனி அடுத்த ஆடி மாதத்தில் நடவு செய்வோம். அதுவரை வெங்காயம் போன்றவற்றை பயிரிடுவோம்,'' என்றனர்."

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் 21 கிராமங்கள்: தினமலர்

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் 21 கிராமங்கள்: தினமலர்: "ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் 21 கிராமங்கள்

ஜனவரி 13,2009,00:00 IST

மதுரை : பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உட்பட 21 கிராமங்களில் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் 16ம் தேதி அலங்காநல்லூரிலும், 15ம் தேதி பாலமேடு, நாளை(14ம் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்நாட்களில் மூணான்டிப்பட்டி, காஞ்சரன்பேட்டையிலும் நடக்கிறது.


இம்மாதத்தில் சத்திரப்பட்டி, கீழப்பட்டி, கரடிக்கல், நல்லூர், ஆனையூரிலும், மார்ச்சில் பாப்பாநாயக்கன்பட்டி, வலையப்பட்டி, சின்ன கட்டளை, மங்கல்ரேவு, உறங்கான்பட்டி, சக்குடியிலும், ஏப்ரலில் வில்லாபுரம், மே மாதத்தில் எழுமலையிலும் நடக்கிறது. இப்போதே இதற்கான ஏற்பாடுகளை கிராமக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்."

பாலமேடு ஜல்லிக்கட்டில் 'விளையாட' தயாராகும் காளைகளும், 'காளையர்களும்': தினமலர்

பாலமேடு ஜல்லிக்கட்டில் 'விளையாட' தயாராகும் காளைகளும், 'காளையர்களும்': தினமலர்: "பாலமேடு ஜல்லிக்கட்டில் 'விளையாட' தயாராகும் காளைகளும், 'காளையர்களும்'

ஜனவரி 13,2009,00:00 IST

மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு, ஜன.,15ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டி செய்து வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகள் மஞ்சள்மலை ஆறு ஓடை வழியாக 'மிரட்டல்' விடுத்துக்கொண்ட கரையேறுவது வழக்கம். இதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.


ஜல்லிக்கட்டை ரசிக்க ஓடைக்கரையில் வி.ஐ.பி.,க்கள், பார்வையாளர்களுக்கு என பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நாளை மாலை முதல் முன்பதிவு துவங்குகிறது. காளையை பிடிக்கும் வீரர்களுக்கு சீருடையும் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டாலும், கிராம கமிட்டி சார்பில் அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த 100 தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 'காளைகளை பிடித்து விளையாடுவதற்கு பதில் சீண்டுபவர்களை கண்காணித்து வெளியேற்றுவது இவர்களது முக்கிய பணி' என்கின்றனர் கிராம கமிட்டியினர்.


காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் கோவில் காளையான கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து காளை வாடிவாசல் வழியாக ஓடிவந்து ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கிறது. பின்னர் குறிப்பிட்ட சமூகத்தினரின் கோவிலுக்குரிய நான்கு காளைகள் அடுத்தடுத்து விடப்படும். கோவில் காளைகளை யாரும் பிடிக்கக்கூடாது, பிடிக்க மாட்டார்கள் என்பது மரபு. பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு 48 மணி நேரமே உள்ள நிலையில் இப்போதே காளைகளும், 'காளையர்களும்' விளையாட தயாராகி வருகின்றனர்."

ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ., செல்லும் கார்: தினமலர்

ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ., செல்லும் கார்: தினமலர்: "ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ., செல்லும் கார்

ஜனவரி 13,2009,00:00 IST

பெங்களூரு : வெறும் தண்ணீரை மட்டும் பிரதான எரிபொருளாகக் கொண்டு, ஒரு லிட்டருக்கு 500 கி.மீ., தூரம் செல்லும் காரை கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு காரை பெங்களூரு ஆர்.வி. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். விரைவில் வெறும் தண்ணீரை மட்டுமே எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடிய காரையும் இவர்கள் வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.


இத்திட்டத்தில் பல்வேறு பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெரிதும் ஆர்வம் செலுத்தி வருகின்றன. ஜி.இ., மோட்டார்ஸ் நிறுவனம், இந்த கார் வடிவமைப்பு துவக்க கட்ட ஆய்வுக்கான முழு நிதி உதவியையும் ஏற்றுள்ளது. அது மட்டுமின்றி, காரின் எடையை குறைக்கும் வகையில் பயன்படுத்தப்படும் பாலிமெர் கார் வடிவமைப்பையும் அளித்து உதவி உள்ளது.


இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய குழுவினர் ஏற்கனவே, தண்ணீரை பிரதான எரிபொருளாகக் கொண்டு இயங்கும் காரை வடிவமைத்தனர். ஆனால், இந்த கார் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 180 கி.மீ., மட்டுமே செல்லக் கூடியது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கார், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 500 கி.மீ., தூரம் செல்லக் கூடியது. எல்லாவற்றுக்கும் மேலாக, சுற்றுச் சூழல் மாசு சிறிதும் ஏற்படுத்தாத கார் இது.


தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அதை வாயுவாக மாற்றி, இன்ஜினுக்கான எரிபொருளாக செலுத்தும் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் எரிபொருளும், இன்ஜினால் மிக சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக விசேஷ ஹைட்ரஜன் கிட் வடிவமைத்து காரில் பொருத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக வெற்றியடையும் நிலையில், அனைத்துக் கார்களிலும், ஹைட்ரஜன் கிட்கள் பொருத்த முடியும்.


இதன் மூலம், வாகன எரிபொருளில் 50 சதவீதம் மிச்சப்படும். வழக்கமாக செல்லும் தூரத்தை விட, இரண்டு மடங்கு தூரம் அதிகமாக செல்ல முடியும். புனேயை சேர்ந்த வினீத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி, இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இன்னொரு புதிய தொழில்நுட்பமும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு எலக்டிரானிக் கன்ட்ரோல் யூனிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கருவி, எரிபொருளை மிக சிக்கனமாக, அது செல்ல வேண்டிய வழியில் சிறப் பாக செலுத்தக் கூடியது. இந்த கார் வடிவமைப்புக்காக, ரோட்டரி நிறுவனத்தின் இளம் சாதனையாளர்கள் விருது வழங்கப் பட்டுள்ளது.


தற்போது, தண்ணீரும் ஒரு எரிபொருளாக இந்த காரில் பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க தண்ணீரை மட்டுமே எரிபொருளாகக் கொண்ட காரை வடிவமைப்பதே இந்த குழுவினரின் கனவாக உள்ளது. மெக்சிகனில் நடக்கும் சூப்பர் மைலேஜ் வாகன போட்டி, பிரிட்டனில் நடக்க உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பில்லா மாரத்தான் போட்டிகளில் இந்த கார் பங்கேற்க உள்ளது."

இன்ஜின் பற்றாக்குறையால் ஊட்டி மலை ரயில் பரிதவிப்பு: தினமலர்

இன்ஜின் பற்றாக்குறையால் ஊட்டி மலை ரயில் பரிதவிப்பு: தினமலர்: "இன்ஜின் பற்றாக்குறையால் ஊட்டி மலை ரயில் பரிதவிப்பு

ஜனவரி 13,2009,00:00 IST

குன்னூர் : தரமற்ற நிலக்கரியால் ஊட்டி மலை ரயில் போக்குவரத்தில் அடிக்கடி தாமதம் ஒரு புறமிருக்க, டீசல் இன்ஜின் பற்றாக்குறையாலும் தினமும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஊட்டி மலை ரயில் போக்குவரத்துக்காக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜினும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜினும் இயக்கப்படுகிறது.


நீராவி இன்ஜினுக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரி தரமற்றதாக இருப்பதால், இன்ஜினின் உந்து சக்தி குறைந்து, கடந்த ஒரு மாதமாக, ரயில் போக்குவரத்தில் பல மணி நேர தாமதம் ஏற்பட்டு வருகிறது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, 10.30 மணிக்கு குன்னூர் வந்து சேர வேண்டிய ரயில், மதியம் 1.00 மணிக்கு மேல் தான் வந்து சேருகிறது; இதனால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இது ஒரு புறமிருக்க, குன்னூர் - ஊட்டி இடையே இயங்கும் ரயில் போக்குவரத்திலும் பிரச்னை துவங்கியுள்ளது; தற்போது, இரண்டு டீசல் இன்ஜின்கள் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன. தினமும் காலை 7.40 மணி, காலை 10.30 மணி, மதியம் 1.30 மணி, மாலை 4.30 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து குன்னூருக்கு காலை 9.00 மணி, மதியம் 12.15 மணி, மாலை 6.00 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது.


தற்போது, ஒரு டீசல் இன்ஜின் பழுதாகி, குன்னூர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஒரு இன்ஜினைக் கொண்டு குன்னூர் - ஊட்டி இடையே ரயிலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது."

லாரி ஸ்டிரைக் எதிரொலி : கரும்பு அரவை நிறுத்தம்: தினமலர்

லாரி ஸ்டிரைக் எதிரொலி : கரும்பு அரவை நிறுத்தம்: தினமலர்: "லாரி ஸ்டிரைக் எதிரொலி : கரும்பு அரவை நிறுத்தம்

ஜனவரி 13,2009,00:00 IST

கள்ளக்குறிச்சி : லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வருவதால் காகித ஆலையில் நீராவி உற்பத்தி பாதித்து, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எண்.2 உள்ளது. சர்க்கரை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் உள்ளது. காகித நிறுவனத்தில் சர்க்கரை ஆலை இயங்கத் தேவையான நீராவியை உற்பத்தி செய்து கொடுத்து அதற்குப் பதிலாக பெக்காஸ் (கரும்புச் சக்கை) காகிதம் தயாரிக்க வாங்கிக் கொள்கின்றனர்.


லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வரும் நிலையில் காகித நிறுவனம் இயங்க நிலக்கரி வரத்து தடைபட்டது. இருப்பில் உள்ள நிலக்கரி மூலம் நீராவி தயாரித்து சர்க்கரை ஆலைக்கு வழங்கினர். நிலக்கரி 11ம் தேதி இரவு தீர்ந்தது. இதனால், நீராவி உற்பத்தி பாதித்து, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையும் நிறுத்தப்பட்டது. கட்டிங் ஆர்டர் உத்தரவும் நிறுத்தப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த டிச., 3ம் தேதி அரவை துவங்கியது. இந்த ஆண்டு, 4 லட்சத்து 35 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி வரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 91 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் முடிந்தால் தான் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கும். மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் மூலம் நீராவி வழங்கி வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது."