Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Saturday, January 26, 2008

Happy Republic Day














Happy Republic Day

Tuesday, January 22, 2008

4.5 லட்சம் லாரிகள் ஓடாது

பெங்களூரு: கர்நாடகாவில் துவங்கியுள்ள லாரி ஸ்டிரைக் காரணமாக, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்தும் கர்நாடக அரசு உத்தரவை எதிர்த்து, காலவரையற்ற லாரி ஸ்டிரைக் நேற்று நள்ளிரவு முதல் துவங்கியது. ஸ்டிரைக் பற்றி விவாதிப்பதற்காக, கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்க கூட்டம், சாம்ராஜ்பேட்டையில் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் நடந்தது. வேக கட்டுப்பாடு கருவி பொருத்தினால், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை குறையும். டீசலும் அதிகம் தேவைப்படும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர் சண்முகப்பா கூறும் போது, லாரிகளுக்கு இந்த உத்தரவை அமல்படுத்தும் அரசு, ஏன் தனியார் வாகனங்களுக்கு அமல்படுத்தவில்லை என்று கேட்டார். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் ஸ்டிரைக் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில், கர்நாடகா முழுவதும் 4.5 லட்சம் வாகனங்கள் பங்கேற்கின்றன. இதில், 2.75 லட்சம் சரக்கு லாரிகள், 10 ஆயிரம் டாக்சிகள் அடங்கும்.

Source : Dinamalar

மலேசியாவில் தைப்பூசம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும்:-பிரதமர்

‌கோலாலம்பூர்: மலேசியாவில் தைப்பூசம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என மலேசியா பிரதமர் அப்துல்லா பதாவி கூறியுள்ளார் . மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்பின் பேரணியில் பங்கேற்ற மலேசியா பிரதமர் அப்துல்லா பதாவி கூறுகையில் மலேசியாவி்ல் இந்துக்கள் பெரிதும் ‌கொண்டாடும் பண்டிகைகளில் ‌தைப்பூசம் முக்கியமான ஒன்றாகும், இப்பண்டிகை மலேசியாவி்ல் வெகு விமரிசையாக ‌கொண்டாடப்படுகிறது. இந்நாளை அரசு விடுமுறையாக அறிவிப்பது குறித்து பரிசலீக்கப்படும் என்றார்.

Source : Dinamalar

Monday, January 21, 2008

கனடா முத்துமாரி அம்மன் கோயிலில் தைப்பூச கொண்டாட்டம்

கனடாவில் உள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் 22 ம் தேதி தைப்பூச கொண்டாட்டம் நடக்கவுள்ளது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்கூட்டியே பக்தர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இதன்படி கடந்த 19 ம் தேதி சனி பிரதோஷம் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. 21 ம் தேதி பூர்ணிமா விரதம், சிறப்பு அபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22 ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 25 ம் தேதி சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது

 

Source : Dinamalar

Friday, January 18, 2008

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 50 வீரர்கள் காயம்

மதுரையில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 11.30 மணிக்கு துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட காளையர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாடு பிடிக்கும் வீரர்களுக்கு நீலநிற சீருடை, தொப்பி வழங்கப்பட்டது. போலீஸ் எஸ்.பி., அன்பு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் ஜவஹர் போட்டிகளை துவக்கி வைத்தார். பார்வையாளர்கள் மைதானத்தின் உட்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. ஒருசில மாடுகளைத் தவிர பெரும்பாலான மாடுகள் வீரர்களுக்கு போக்கு காட்டிவிட்டு எல்லையைத் தொட்டுச் சென்றன. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, கட்டில், பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் ஆறுமணி நேரம் நடந்த போட்டியில் 400 காளை மாடுகள் பங்கேற்றன. போட்டியில் 50 வீரர்கள் காயமடைந்தனர்.

Source : Dinamalar

நரி ஜல்லிக்கட்டு நடத்தி கிராமத்தில் பொங்கல் உற்சாகம்

வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், நரியை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்.நரி முகத்தில் விழித்து காரியத்தை துவக்கினால் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. தை மாதத்தில் வங்கா நரியை ஓட விட்டு பிடிக்கும் வினோத ஜல்லிக்கட்டு, வாழப்பாடி சுற்று வட்டார கிராமங்களில் நடத்தப்படுகிறது. சேலம் வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நரி பிடிக்க, மேள தாளத்துடன் காட்டுக்குச் சென்றனர். வலையில் வங்கா நரி சிக்கியது. தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வங்கா நரியை கொண்டு வந்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளி மைதானத்தில் நரியின் வயிற்றில் கயிறு கட்டி ஓட விட்டு ஜல்லிக்கட்டு நடத்தி, ஆரவாரத்துடன் பொங்கல் கொண்டாடினர்.வங்கா நரி தேடி, வனப்பகுதியில் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டுள்ளனர். நரி பிடிபட்டதும் நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
Source : Dinamalar

Thursday, January 17, 2008

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 50 வீரர்கள் காயம்

மதுரையில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 11.30 மணிக்கு துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட காளையர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாடு பிடிக்கும் வீரர்களுக்கு நீலநிற சீருடை, தொப்பி வழங்கப்பட்டது. போலீஸ் எஸ்.பி., அன்பு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் ஜவஹர் போட்டிகளை துவக்கி வைத்தார். பார்வையாளர்கள் மைதானத்தின் உட்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. ஒருசில மாடுகளைத் தவிர பெரும்பாலான மாடுகள் வீரர்களுக்கு போக்கு காட்டிவிட்டு எல்லையைத் தொட்டுச் சென்றன. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, கட்டில், பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் ஆறுமணி நேரம் நடந்த போட்டியில் 400 காளை மாடுகள் பங்கேற்றன. போட்டியில் 50 வீரர்கள் காயமடைந்தனர்.

Source : Dinamalar

ஆப்பரிக்க போட்ஸ்வானாவில் உள்ள ‌ஒரே இந்து கோயில்

ஆப்பரிக்க கண்டத்தில் போட்ஸ்வானாவில் கப்ரோனா என்ற ஒரே இந்து கோயில் மட்டுமே உள்ளது. இங்கு சிவன், ராமர், லட்சுமணனர் , நவக்கிரகம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் உள்ளது என்பது முக்கியச்சிறப்பு. ஆப்ரிக்க கண்டத்தில் முக்கிய நகரங்களில் இந்துகோயில்கள் பல உள்ளன. ஆனால் போட்ஸ்வானாவில் உள்ள கப்ரோனா என்ற இந்து கோயில் மட்டுமே உள்ளது. இக்கோயிலை மக்கள் இந்துஹால் என்றே அழைக்கின்றனர். இப்பகுதி வாழ் இந்து மக்கள் குவிந்து தங்ள் இஷ்ட தெய்வங்களை வணங்கி வருகின்றனர். இங்கு நுழைவு வாயியில் முதல் பகுதியில் நவக்கிரக கோயில் உள்ளது. தொடர்ந்து பார்வதியுடன் சிவன், அருகில் கணேசர், முருகன் விக்கிரங்கள் உள்ளது. அடுத்து ராமர், லட்சுமணர், சீதாசன்னதி உள்ளது. இங்கு தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். இங்கு மகாசிவராத்திரி, ராமநவமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட இந்துக்களின் முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 5 ம் தேதி பிரதோஷமும், 8 ம் தேதி குருபூஜையும், 14 ம் தேதி போகிப் ப‌ண்டிகையும், 14 ம் தேதி திருப்பாவை, திருவெம்பாவை நிறைவு நிகழ்ச்சியும், 15 ம் தேதி மகரசங்கராந்தியும் கொண்டாடப்பட்டது. நாள்தோறும் இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இக்கோயில் நிர்வாத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source : Dinamalar

Wednesday, January 16, 2008

மெல்போர்ன் சிவவிஷ்ணு கோயிலில் 1008 கலச பூஜை

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகர் சிவவிஷ்ணு கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு 1008 கலச பூஜையும் , பொங்கல் திருவிழாவும் நடந்தது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகே பிலிப்பே கடலுக்கு சற்று தொலைவில் பேட்ர்சின் ஆற்றுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்து கலாச்சார முறைப்படி தத்ரூபமாக கட்டட கலை நுணுக்கத்துடன் 1. 5 மில்லியன் டாலர் செலவில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. விக்கோடரியா வாழ் இந்துக்கள் இக்கோயிலை நிறுவியுள்ளனர். இங்கு நாள்தோறும் காலை 7.30 முதல் 12. 05 வரையும், மாலையில் 4 மணி முதல் 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். புத்தாண்டை முன்னிட்டு மகாவிஷ்ணுக்கு 1008 கலச பூஜை நடத்தப்பட்டது. அந்நாளில் அன்னதானமும் நடந்தது. பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், மகேஸ்வர பூஜையும், உற்சவமும் நடந்தது. 16 ம் தேதி கானும் பொங்கலை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. வரும் 18ம் தேதி இக்கோயிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது. இக்கோயில் 17 ஆண்டுகளள்முன்னதாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கிராமங்களில் ஜல்லிக்கட்டு ‌போட்டி நடத்தப்படும். தமிழர்களின் வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகி்ன்றன. ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேட்டில் இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதையொட்டி பாலமேடு சுற்றுப்புற கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இதுதவிர தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது.

பழநி தைப்பூசம் : கொடியேற்றம்

பழநி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடியேற்றத்தை யொட்டி, பெரியநாயகியம்மன் கோவில் முத்துக்குமார சுவாமி சன்னதியில் மயூர யாகம் நடந்தது. கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் உலா வந்த பின் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்து கொடி ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் 10 நாட்களுக்கு யாக சாலை பூஜை நடைபெறும்.

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்

இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

Friday, January 11, 2008

http://www.chennai-madras.com/

Hi All,

I think the below site will be useful for somebody.

I came to know this site when I search for pin code for madippaakam

http://www.chennai-madras.com/

Cool ah...

Saturday, January 5, 2008

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ல் துவங்குகின்றன: மார்ச் 25ல் பத்தாம் வகுப்புக்கு ஆரம்பம்: அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் நேற்று வெளியிட்ட பொதுத் தேர்வு அட்டவணை விவரங்கள்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை விவரங்களை, அரசு தேர்வுத்துறை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதியில் இருந்து ஏப்ரல் 10ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. உயர் கல்வியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதால், பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்தே உயர் கல்வியில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்களும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடியதாக விளங்குகின்றன. அதை மனதில் கொண்டு அரசு தேர்வுத்துறை, அட்டவணையை தயாரித்துள்ளது. அறிவியல் பிரிவு மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் இடைவெளி வரும் வகையில் அட்டவணையை உருவாக்கியுள்ளது. மொழித்தாள் தேர்வுகளுக்குப் பிறகு, மார்ச் 10ம் தேதி காலை இயற்பியல் தேர்வு நடக்கிறது. அதற்கு பிறகு, இரண்டு நாள் இடைவெளி தரப்பட்டுள்ளன. 13ம் தேதி வேதியியல் தேர்வும், ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு மைக்ரோ-பயாலஜி மற்றும் பயோ-கெமிஸ்ட்ரி தேர்வும் நடைபெறுகின்றன. மீண்டும் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு 17ம் தேதி கணிதத் தேர்வும், விலங்கியல் தேர்வும் நடைபெறுகின்றன. அத்துடன் 20ம் தேதி உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. இப்படி முக்கிய பாடத் தேர்வுகளில், மாணவர்கள் கடைசி நேரத்தில் நல்ல முறையில் தயாராகும் வகையில் போதிய இடைவெளி விட்டு சிறப்பான முறையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அறிவியல் மற்றும் கணிதப் பிரிவு மாணவர்கள், ஒரு தேர்வை முடித்ததும் அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அதேபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் போதிய இடைவெளியுடன் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான், அறிவியல் மற்றும் கணித `குரூப்'கள் கிடைக்கும். இல்லையென்றால், கலைப்பாடப் பிரிவுகளில் சேர வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அவர்களுடைய நலனையும் கருத்தில் கொண்டு மொழிப்பாடத் தேர்வுகளை தவிர்த்து, இதர பாடங்களுக்கு போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்முறை தேர்வு எப்போது?: பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் ஆரம்பமாகும். இந்த தேர்வை பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு தேதிகளில் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். எனினும், குறிப்பிட்ட தேதியில் துவங்கி, முடிக்குமாறு தேர்வுத்துறை அறிவுறுத்தும். செய்முறைத் தேர்வு, பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கும் என்றாலும், சரியான தேதியை இன்னும் தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. செய்முறைத் தேர்வு முடிந்து இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு எழுத்துத் தேர்வு துவங்கி விடும். பிளஸ் 2 தேர்வு மாணவிகளே அதிகம்!: பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், `மொத்தம் ஐந்து லட்சத்து 95 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில், மாணவர்கள் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் பேர்; மாணவிகள் மூன்று லட்சத்து 12 ஆயிரம் பேர்' என்றார். மாணவர்களை விட மாணவிகள் 29 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை எட்டு லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சரியான புள்ளி விவரம் ஓரிரு நாளில் தெரிய வரும். தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதால், தேர்வுகளை நடத்துவதற்கான வேலைகளிலும் தேர்வுத் துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஆங்கிலோ இந்திய தேர்வை பொறுத்தவரை, மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையே பெரும்பாலும் பொருந்துகிறது. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு மார்ச் 25ம் தேதி மொழித் தாள் தேர்வு நடைபெறும். இந்த மாணவர்களுக்கு மொழி இரண்டாம் தாள் தேர்வு கிடையாது. எனவே, 25ம் தேதிக்குப் பிறகு 27ம் தேதி ஆங்கில முதற்தாள் தேர்வு நடைபெறும். மற்ற தேர்வுகள் அனைத்தும், மெட்ரிகுலேஷன் அட்டவணையே ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 3, 2008

மாருதி கார் விற்பனை 6.88 சதவீதம் உயர்வு

மும்பை: இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகியின் உள்நாட்டு கார் விற்பனை, 2007 டிசம்பரில் மாதத்தில் 6.88 சதவீதம் உயர்ந்துள்ளது. 2006-டிசம்பரில் 54,640 கார்களை விற்பனை செய்த மாருதி, 2007-டிசம்பரில் 58,401 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 6.88 சதவீதம் ... For full article read http://www.dinamalarbiz.com/

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 18 சதவீதம் சரிவு

2007-ல் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது இதற்கு முந்தைய ஆண்டில் 219 மில்லியன் கிலோவாக இருந்த ஏற்றுமதி, தற்போது 180 மில்லியன் கிலோவுக்கு குறைந்து விட்டது. ஈராக் மற்றும் பாகிஸ்தானில் பிரச்சினையால் ஏற்றுமதி குறைந்து விட்டதாக இந்திய தேயிலை அமைப்பு தெரிவித்தது.... For the Full News Read http://www.dinamalarbiz.com/

Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily

Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily

ஒரே நாளில் ஆயிரம் பஸ்கள் இன்று இயக்கம் : சென்னையில் மட்டும் 500 பஸ்கள் கூடுகிறது

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் ஒரே நாளில் முதன்முறையாக ஆயிரம் பஸ்கள், முதல்வர் கருணாநிதியால் இன்று துவக்கி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

எக்ஸ்பிரசில் சொகுசு மற்றும் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.கடந்த மாதம் போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் மற்றும் பொது மக்களுடனான சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை வாசிகள், அதிக பஸ்களை இயக்கும்படி கோரிக்கை விடுத்தனர். சென்னை மாநகர் பயணிகளின் போக்குவரத்து கோரிக்கைகளை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையை உயர்மட்டக் குழு பரிசீலித்து, பல்வேறு ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில் ஆயிரம் புதிய பஸ்களை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவெடுத்தது. சென்னையில் 500 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டது. 83 புதிய வழித்தடங்களை உருவாக்கி அந்த வழித்தடங்களில் புதிய பஸ்களை இயக்கவும், ஏற்கனவே உள்ள வழித் தடங்களில் 42 பஸ்களை கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளது. மற்ற பஸ்கள் அனைத்து வழித் தடங்களிலும் பகிர்ந்தளிக்கப்படுகிது. எக்ஸ்பிரஸ் வழித்தடங்களில் இயக்கப்படும் 500 பஸ்களில் கூடுதல் சொகுசு மற்றும் குளிர்சாதன வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக, சென்னையில் 100 தொடர் பஸ்கள், 300க்கும் அதிகமான தாழ்தள சொகுசு மற்றும் 10 குளிர்சாதன வால்வோ பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் போது சென்னையின் இலக்காக ஜனவரி 2008க்குள் மூன்றாயிரம் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். இன்று துவங்குவதில் சென்னை மாநகருக்கான 500 புதிய பஸ்களை சேர்த்து சென்னை மாநகரில் பஸ்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இன்று ஆயிரம் புதிய பஸ்களை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். துவக்க விழாவில் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உத்தரவினையும் வழங்குகிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இந்த விழாவிற்குத் தலைமையேற்கிறார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மா.ராமசுப்ரமணியன் கூறுகையில், "சென்னையில் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களை சேர்த்து தற்போதைய எண்ணிக்கை மூன்றாயிரத்து 60. சென்னை மாநகரின் எல்லை 40 கி.மீட்டரில் இருந்து 50 கி.மீ., தூரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 83 புதிய வழித்தடங்கள் சென்னையில் றிமுகப்படுத்தப்படுகிறது. மாநகர பஸ் பயணிகளின் கோரிக்கையை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பிரச்னைகள் ஆய்வு செய்து விரைவில் தீர்க்க இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும்," என்றார்.

சென்னை ஐகோர்ட் தமிழக அரசிடம் கேள்வி * தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளதா?

‌சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க கோரி கைதிகளின் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததால் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது

கடந்த 2000ம் ஆண்டில் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கலவரம் வெடித்தது. தர்மபுரியில் நடந்த கலவரத்தில் அ.தி.மு.க.,வினர், கோவைவிவசாய பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பஸ்சை தீயிட்டு கொளுத்தினர். இச்சம்பவத்தில் மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா மூவரும் எரிந்து பலியாயினர். இதுதொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் தர்மபுரியைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு சேலம் கூடுதல் அமர்வு நீதிபதி மாணிக்கம் டிச. 20ம் தேதி மூவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தார். அதை ஐகோர்ட் உறுதிப்படுத்தி விட்டது. ஜன.10ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

அப்பீல் மனுவை பெற்ற சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகம், தூக்கு தண்டனை கைதிகள் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்' என்ற தகவலை சென்னை ஐகோர்ட், தமிழக சட்டத்துறை செயலர், சேலம் நீதிமன்றம், கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எக்ஸ்பிரஸ் டெலிகிராம் மூலம் தெரிவித்துள்ளது. . தூக்கு தண்டனை கைதிகளின் வக்கீல் மனோஜ்பாண்டியன் சுப்ரீம் ‌கோர்ட்டில் விசாரணை நடக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென தெரிவித்தார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா எனவும், நாளைக்குள் பதில் சொல்ல வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்பாவி மாணவிகளின் உயிரோடு விளையாடிய மூன்று பேரின் தூக்கு ‌தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா... பதில் தமிழக அரசின் கையில் தான் உள்ளது.

Wednesday, January 2, 2008

Google Logo for 2008

Try this,

 

Go to www.google.com classic home page.

 

Click on the Google logo above the search text box [I copied the same here below. You can click on the below image also]

 

 

Click on the image.

 

This will give search result for “January 1 tcp/ip”

 

You will know the TCP/IP protocol and its history.

Tuesday, January 1, 2008

தேசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழகம்

புதுடில்லி : 56-வது தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் நடந்த அரையிறுதியில், சென்ற வருடம் 2-ம் இடம் பிடித்த கேரள அணியை 25-22, 25-22, 25-23 என்ற நேர்செட்களில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதியில் ஹரியானா தன்னை எதிர்த்து ஆடிய சர்வீசஸ் அணியை வென்றதால், தமிழகத்துடன் பைனலில் மோதவுள்ளது

நெல் வயலில் நீர் குமிழிகள் : புவனகிரி அருகே பரபரப்பு

புவனகிரி: நெல் வயலில் திடீரென நீர் குமிழிகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அடுத்த இடையன்பால்சொரி ஊராட்சி தலைவர் கருணாநிதிக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன் சேற்றில் ஒரு இடத்தில் மட்டும் நீர் குமிழிகள் ஏற்பட்டன. நேற்று காலை மீண்டும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நீர்குமிழிகள் தோன்றியது. வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் நீர் குமிழிகளைப் பார்த்து பீதியடைந்தனர். வேலை செய்ய மறுத்துவிட்டனர். இந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நீர் குமிழிகள் தோன்றுவதைப் பார்த்தனர். நிலத்தை பராமரிக்கும் வரதராஜன் கூறுகையில், `இது போன்ற நீர் குமிழிகள் ஏற்பட்டால் பூகம்பத்திற்கு அறிகுறி என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். நிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர் குமிழிகள் அதிகாரிகள் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.' என்றார்.

பிள்ளையார்பட்டியில் அலைமோதிய பக்தர்கள்

திருப்புத்தூர்: புத்தாண்டை யொட்டி பிள்ளையார்பட்டியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். சிவகங்கை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் திரண்டனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு புத்தாண்டு வழிபாடு துவங்கியது. கற்பக விநாயகர், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். உற்சவர், வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருந்து, விநாயகரை தரிசனம் செய்தனர்.