Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, December 31, 2010

| மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு Dinamalar

இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். அதனால், சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.

| மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு Dinamalar

International Scores

International Scores: "Get the latest scores of all the international cricket matches from Cricinfo. Add the Cricinfo International Scores widget now!"

Wednesday, December 22, 2010

Forecastfox Weather

Forecastfox Weather

| பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி Dinamalar

| பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி Dinamalar

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் வரை மட்டும் இயங்கும்

வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, தெற்கு ரயில்வேயில் உள்ள கம்ப்யூட்டர் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

More

Monday, December 20, 2010

| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar

| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar


சென்னை : அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் நான்கு இலக்க எண்களிலும், சாதாரண பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று இலக்க எண்களிலும், புறநகர் மின்சார ரயில்கள் ஊர்களின் பெயரின் முதல் ஆங்கில எழுத்துக்களுடன், ஒரு இலக்கம் அல்லது இரண்டு இலக்க எண்களுடனும் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்களில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதையொட்டி தேவைக்கேற்ப வழக்கமான ரயில்களுடன், புதிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால், ரயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்களின் சர்வீஸ் பல ஆயிரமாக உயர்ந்ததால் இந்த நடவடிக்கை. நான்கு இலக்க எண்களை ஐந்து இலக்க எண்களாக மாற்றியமைத்தால் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் இயக்கத்திலும் வசதிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்த ரயில்வே அமைச்சகம், முன்பே முடிவு செய்திருந்தது.

இதையொட்டி எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் மற்றும் சாதாரண பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் எண்கள் இன்று முதல் ஐந்து இலக்கங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar

Thursday, December 16, 2010

Monday, December 13, 2010

நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்து துவக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பாதையில் மண்சரிவு காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, மீண்டும் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், பள்ளியாடி அருகே ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 40 மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதையில் மண் மூடியது. இதனால், இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், கடந்த நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கேரளாவில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில்கள் திருவனந்தபுரத்திலும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாசெல்லும் ரயில்கள் நாகர்கோவிலிலும் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த மண் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. எனினும், தொடர்ந்து மண் சரிந்து விழும் நிலையில் இருந்ததால், அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தின் இரண்டு பகுதிகளிலும் உயரமாக இருந்த மண் அப்புறப்பட்டுத்தப்பட்டது. பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர். 13ம் தேதி காலை ஒன்பது மணியளவில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த அனந்தபுரி ரயில் இந்த பாதையில் அனுப்பப்பட்டது. பள்ளியாடியில் ரயில் குறைந்த வேகத்துடன் சென்றது. தொடர்ந்து நாகர்கோவில்- திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயில்களும் இயங்க துவங்கியது.

Thanks -> தினமலர்

Friday, December 3, 2010

மார்ச்- 28 ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ; அட்டவணை முழு விவரம்

தேர்வு கால அட்டவணை விவரம் :

மார்ச்- 2 ம் தேதி : தமிழ்மொழிப்பாடம் ( முதல் தாள் )

மார்ச்- 3 ம் தேதி : தமிழ்‌மொழி்ப்பாடம் ( 2 ம் தாள்)

மார்ச்- 7 ம் தேதி : ஆங்கிலம்- (முதல்தாள்)

மார்ச் - 8ம் தேதி : ஆங்கிலம் (இரண்டாம் தாள்)

மார்ச்- 11 ம் தேதி: இயற்பியல் , பொருளாதாரம்,

மார்ச்- 14 ம் தேதி : வேதியியல், அக்கவுண்ட்ஸ், சார்ட்டர்டு அக்கவுண்ட்

மார்ச்- 17 ம்தேதி : கணக்கு விலங்கியல், மைக்‌ரோ பயாலஜி,

மார்ச்- 18ம் தேதி : வணிகம், ஹோம் சயின்ஸ் , புவியியல்,

மார்ச்- 21 ம் தேதி : பயோலஜி, தாவரவியல், வரலாறு,

மார்ச்- 23 ம் தேதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், தட்டச்சசு.

மார்ச்: 25 ம் தேதி : தொழிற்கல்வி.

பத்தாம் வகுப்பு எஸ். எஸ்.எல்சி., தேர்வு :

மார்ச்- 28 ம்தேதி : ‌தமிழ் ( முதல்தாள் )

மார்ச்- 29 ம்தேதி : ‌தமிழ் ( முதல்தாள் )

மார்ச்- 31 ம்தேதி : ஆங்கிலம் ( முதல்தாள்)

ஏப்ரல்- 1 ம்தேதி : ஆங்கிலம் ( 2ம் தாள் )

ஏப்ரல்- 5 ம் தேதி: கணக்கு

ஏப்ரல்- 8ம் தேதி: அறிவியல்

ஏப்ரல்- 11 ம் தேதி: சமூக அறிவியல்