சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு கிழக்கே அந்தமான் கடல் பகுதியில் சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் வட மேற்காக நகர்ந்து ஆந்திரா நோக்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கடலூர் நோக்கி மையம் கொண்டுள்ளது. இந்த மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிகிறது.
மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. எந்த அளவிற்கு எப்போது வலுப்பெறும் என வானிலை ஆராய்ச்சிமையம் மதியத்திற்குமேல்தான் அறுதியிட்டு கூற முடியும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புயலுக்கு லைலா என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ( 12 அடி உயரம் எழும்பும்) அதிகரிக்கும். காற்று மணிக்கு 65 கி.மீட்டர் முதல் 85 கி.மீட்டர் வரை இருக்கும். லேசான முதல் கனத்த மழை பெய்யக்கூடும். சென்னை, நாகை, ராமேஸ்வரம், காக்கிநாடா, புதுச்சேரி பகுதிகளில் நல்ல மழை இருக்கும்.
இன்று இரவு முதல் இன்னும் 48 மணி நேரத்திற்கு இந்த லைலா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை துணை இயக்குனர் குழந்தைவேலு தெரிவித்துள்ளார். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்கப்பட்டிருக்கின்றனர். ஆந்திர கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும் அவர் மேலும் கூறினார். Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Tuesday, May 18, 2010
லைலா புயல் ; சென்னை - நாகை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
Posted by
Arul
at
Tuesday, May 18, 2010


No comments:
Post a Comment