Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, May 20, 2010

இந்தியாவின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள்: அப்துல் கலாம்

விருதுநகர் : விருதுநகர் அருகே தோனுகால் கிராமத்தில் புரா திட்டத்தை துவக்கி வைத்து ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்திய நாட்டின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள் என்றார்.

தோனுகாலில் நடந்த விழாவிற்கு வந்த இரவு 9.12 மணிக்கு வந்த அப்துல் கலாமிற்கு கிராமத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேடைக்கு வந்த அப்துல்கலாம் லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பள்ளி மாணவர்கள் குடி நீருக்கான சுத்திகரிப்பு இயந்திரம், சிறுநீரக நோயளிகளுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் நடமாடும் வேன் ஆகியவற்றை துவக்கி வைத்தார். மேலும் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி சார்பில் தோனுகால் கிராமத்தில் நகரத்துக்கு இணையான மருத்து வசதியான டெலி மெடிஷன் சென்டர், 'இ' லியர்னிங் சென்டர், வேலைவாயப்பு ஐகிராண்டி ஆகிய வசதிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அப்பதுல்கலாமை வரவேற்று அவரது தவியாளர் பொன்ராஜ் பேசினார். புரா திட்டம் குறித்து மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியின் துணை தலைவர் டாக்டர் குரு சங்கர், மகாசேமம் திட்டம் குறித்து துணைத்தலைவர் பன்னீர் செல்வம், நடமாடும் டயாலிசிஸ் வேன், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இயந்திரம் குறித்து மாவட்ட லயன்ஸ் ஆளுனர் டாக்டர் வேலுச்சாமி பேசினார். விருதுநகர் கலெக்டர் சிஜி தாமஸ் உட்பட பலர் பேசினார்கள்.

மகாசேமம் திட்டத்தில் மகளிர் குழுவிற்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு இலவச காலனி வழங்கி பாரத ரத்னா அப்துல்கலாம் பேசியதாவது: இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள் தான் இவர்கள் எழுச்சி பெற வேண்டும். பறந்து கொண்டிருக்கும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் முடியாது என்ற சொல்லை மாற்றி என்னால் முடியும் என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும். தோல்விகளை, தோல்வியடைய செய்து வெற்றி பெற கடுமையாக உழைத்து இந்த நாட்டை வளமாக்க வேண்டும். இளைஞர்களுக்கு பத்து கட்டளைகளை தெரிவிக்கிறேன் அதனை பின்பற்றுங்கள். ஒருவர் உயர தாய், தந்தை, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியவர்ளை நினைத்தால் வளர்ச்சி சிறக்கும். ஐந்து குணங்கள் வேண்டும். லட்சியம், அறிவை தேடி கடும் உழைப்பு, பிரச்னைக்கு தீர்வு, நல்ல ஒழுக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். மீனாட்சி மிஷன் அருள் மொழி நன்றி கூறினார்.

நன்றி : தினமலர்

No comments: