| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar
சென்னை : அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் நான்கு இலக்க எண்களிலும், சாதாரண பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று இலக்க எண்களிலும், புறநகர் மின்சார ரயில்கள் ஊர்களின் பெயரின் முதல் ஆங்கில எழுத்துக்களுடன், ஒரு இலக்கம் அல்லது இரண்டு இலக்க எண்களுடனும் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்களில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதையொட்டி தேவைக்கேற்ப வழக்கமான ரயில்களுடன், புதிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால், ரயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்களின் சர்வீஸ் பல ஆயிரமாக உயர்ந்ததால் இந்த நடவடிக்கை. நான்கு இலக்க எண்களை ஐந்து இலக்க எண்களாக மாற்றியமைத்தால் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் இயக்கத்திலும் வசதிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்த ரயில்வே அமைச்சகம், முன்பே முடிவு செய்திருந்தது.
இதையொட்டி எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் மற்றும் சாதாரண பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் எண்கள் இன்று முதல் ஐந்து இலக்கங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, December 20, 2010
| ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல் Dinamalar
Posted by
Arul
at
Monday, December 20, 2010


No comments:
Post a Comment