நாகர்கோவில் : நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பாதையில் மண்சரிவு காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, மீண்டும் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், பள்ளியாடி அருகே ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 40 மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதையில் மண் மூடியது. இதனால், இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், கடந்த நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கேரளாவில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில்கள் திருவனந்தபுரத்திலும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாசெல்லும் ரயில்கள் நாகர்கோவிலிலும் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த மண் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. எனினும், தொடர்ந்து மண் சரிந்து விழும் நிலையில் இருந்ததால், அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தின் இரண்டு பகுதிகளிலும் உயரமாக இருந்த மண் அப்புறப்பட்டுத்தப்பட்டது. பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர். 13ம் தேதி காலை ஒன்பது மணியளவில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த அனந்தபுரி ரயில் இந்த பாதையில் அனுப்பப்பட்டது. பள்ளியாடியில் ரயில் குறைந்த வேகத்துடன் சென்றது. தொடர்ந்து நாகர்கோவில்- திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயில்களும் இயங்க துவங்கியது.
Thanks -> தினமலர்
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, December 13, 2010
நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்து துவக்கம்
Posted by
Arul
at
Monday, December 13, 2010
Labels: கன்னியாகுமரி, சென்னை, தினமலர்.தமிழ்நாடு, நாகர்கோவில், புயல், மழை


No comments:
Post a Comment