
சிலிக்கான் வேலி, அமெரிக்கா : அமெரிக்காவில் இருக்கும் கார்பரேட் அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் சிறந்த 15 பெண்களில், பத்மஸ்ரீ வாரியார் என்ற இந்திய பெண்ணும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த சிஸ்கோ சிஸ்டத்தில் சீப் டெக்னாலஜி ஆபிசராக ( சிடிஓ ) பணியாற்று கிறார். அவர்களது திறமையாலும் புதுப்புது யுத்திகளாலும், அவர்கள் சார்ந்த நிறுவனங்களை அவர்கள் எந்த அளவு முன்னேற்றுகிறார்கள் என்பதை வைத்து இந்த லிஸ்ட் சேகரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பிரபல பிசினஸ் இதழ் ஒன்று இந்த லிஸ்டை தயார் செய்து வெளியிடுகிறது. அதில் முதல் 15 பெண் உயர் அதிகாரிகளில் பத்மஸ்ரீயும் ஒருவர். டிசம்பர் 2007ல் சிஸ்கோ சிஸ்டம் நிறுவனத்தில் சேர்ந்த இவர் இதற்கு முன் மோட்டரோலா நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட் மற்றும் சி இ ஓ வாக இருந்தவர். ஆந்திராவில் உள்ள விஜயவாடாவை சேர்ந்த பத்மஸ்ரீ வாரியார், டில்லி ஐ.ஐ.டி யில் கெமிக்கல் இஞ்சினியரிங்கில் இளநிலை பட்டம் பெற்ற பின் அமெரிக்க கார்னல் பல்கலைக்கழகத்தில் 2007 ம் ஆண்டில் எம்.எஸ்.பட்டம் பெற்றார். பின்னர் இஞ்சினியரிங்கில் டாக்டர் பட்டமும் பெற்றார். ஏற்கனவே பெப்சி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் இந்திய பெண்ணான இந்திரா நூயி, இந்தியாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது இன்னொரு இந்திய பெண்ணும் அமெரிக்க கார்பரேட் உலகத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.


No comments:
Post a Comment