
மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் ஆரம்பித்த நான்கு நிமிடத்திலேயே 225 புள்ளிகள் உயர்ந்து விட்டது. திங்கள் அன்று கடும் வீழ்ச்சியிலும் அதை தொடர்ந்து நேற்று சிறிது குறைந்தும் முடிந்த மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த உடனேயே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. காலை 11.00 மணிக்கெல்லாம் சென்செக்ஸ் 528.15 புள்ளிகளும், நிப்டி 145.90 புள்ளிகளும் உயர்ந்திருந்தது. பின்னர் அது கொஞ்சம் இறங்க துவங்கி, மாலை வர்த்த முடிவில் சென்செக்ஸ் 341.13 புள்ளிகள் ( 2.05 சதவீதம் ) உயர்ந்து 16,949.14 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 91.20 புள்ளிகள் ( 1.88 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,929.45 புள்ளிகளில் முடிவடைந்தது.


No comments:
Post a Comment