Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, February 29, 2008

மத்திய பட்ஜெட் : விவசாய கடன் ரூ.60 ஆயிரம் கோடி தள்ளுபடி

புதுடில்லி : 2008 - 09 கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்தார்.
* அப்போது தனி நபர் வருமான வரி உச்சவரம்பு, ஆண்களுக்கு ரூ.1,50,000 ஆகவும், பெண்களுக்கு ரூ.1,80,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
* தனிநபர் வருமான வரிவிகிதம் ரூ.1.50 - 3 லட்சம் வரை 10 சதவீதம். ரூ.3 - 5 லட்சம் வரை 25 சதவீதம். ரூ.5 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
* இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு எக்ஸைஸ் டூட்டி 12 சதவீமாக குறைக்கப்பட்டுளளது.
* இது தவிர சிறு,குறு விவசாயிகளின் ( ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் நிலம் வைத்திருப்பவர்கள் ) கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மார்ச் 2007 வரை வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் டிசம்பர் 2007 அன்று இருந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகை ரூ.60 ஆயிரம் கோடி என்றும், வங்கிகளில் இருக்கும் மொத்த கடன் தொகையில் இது 4 சதவீதம் என்றும் தெரிவித்தார்.மற்ற விவசாயிகளின் கடன் தொகைக்காக ஒரு திட்டம் கொண்டு வரப்படுகிறது.
* மேலும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான சம்பளம் மாதம் ரூ.1500 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். அதே போல அங்கன்வாடி உதவியாளர்களுக்கான சம்பளமும் ரூ.750 ஆக உயர்த்தப்படும் என்றார். இதனால் இந்தியாவில் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும் அவர் தெரிவித்ததாவது :
* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2005 இலிருந்து 8 சதவீதத்திற்கும் மேல் இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்து இனி வரும் வருடங்களிலும் வளர்ச்சி 8.8 சதவீதம் சராசரியாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுத்தது உற்பத்தி துறை மற்றும் சேவை துறைதான். இனி வரும் வருடங்களில் உற்பத்தி துறை 9.4 சதவீதமும், சேவை துறை 10.8 சதவீதமும் வளர்ச்சி அடையும் என்று அவர் தெரிவித்தார்.
* மேலும் ஒவ்வொரு நாளும் 52 கிராமங்களுக்கு டெலிபோன் இணைப்பு கொடுக்கப்படுகிறது.
* கல்விக்காக ரூ.34,400 கோடி ஒதுக்கப்படுகிறது.இது 20 சதவீதம் அதிகம்.
* 16 மத்திய பல்கலைக்கழகமும், 3 ஐ.ஐ.டி யும் துவங்கப்படுகின்றன. மூன்று ஐ.ஐ.டி.க்கள் ஆந்திரா, பீகார், ராஜஸ்தானில் துவங்கப்படுகிறது.
* சுகாதாரத்திற்காக ரூ.16,530 கோடி ஒதுக்கப்படுகிறது.
* எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் ஓ.பி.சி.,களின் நல திட்டத்திற்காக ரூ.,966 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மாடல் ஸ்கூல்களுக்காக ரூ.650 கோடி ஒதுக்கப்படுகிறது. 6000 புதிய மாடல் ஸ்கூல்கள் துவங்கப்படுகின்றன.
* தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ரூ.12,970 கோடி ஒதுக்கப்படுகிறது.
* தோட்டக்கலை துறைக்கு ரூ.1,100 கோடி ஒதுக்கப்படுகிறது.
* குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்படும் தொகையில் 24 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
* பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு ரூ.7,200 கோடி ஒதுக்கப்படுகிறது.
* 2008 - 09 ஆண்டின் விவசாய கடனுக்காக ரூ.2,80,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* ராஷ்ட்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்காக ரூ.2,80,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* 53 சிறிய நீர்ப்பாசன திட்டம் நிறைவேற்றப்படும். நீர்ப்பாசன திட்டத்திற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* இந்திய எல்லை பகுதி மக்கள் வளர்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.
* பள்ளி குழந்தைகளுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் கொடுப்பதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது.
* கிராம சுகாதார திட்டத்திற்காக ரூ.12,050 கோடி ஒதுக்கப்படுகிறது.
* சென்னையில் கடல்நீரை குடி நீரான ஆக்கும் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* 2009 ஏப்ரலுக்கு மேல் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரி கிடையாது.
* கார்பரேட் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
* நாட்டின் பாதுகாப்பிற்கு ரூ.1,05,600 கோடி ஒதுக்கப்படுகிறது.
* காஞ்சிபுரத்தில் ஐ.ஐ.ஐ.டி. என்று உயர் கல்வி நிலையம் அமைக்கப்படுகிறது.
* கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ரூ.16,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* போலியோ நோயை ஒழிப்பதற்கு ரூ.1,042 கோடி ஒதுக்கப்படுகிறது.
* சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்காக ரூ.13,100 கோடி ஒதுக்கப்படுகிறது.
* பில்டர் அல்லாத சிகரட்டுகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
* எய்ட்ஸ் நோய் தடுப்பு திட்டத்திற்காக ரூ.9,903 கோடி ஒதுக்கப்படுகிறது.
* இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் துவங்கப்படும் மருத்துவமனைகளுக்கு 5 வருடங்களுக்கு வரி கிடையாது.
* யுனஸ்கோ தேர்ந்தெடுத்துள்ள பாரம்பரிய இடங்களில் துவங்கப்படும் 2,3,4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு 5 வருடங்களுக்கு வரி கிடையாது.
* சிறிய கார்களுக்கான கலால் வரி 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* மருந்து பொருட்களுக்கான கலால் வரியும் 14 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

Source : Dinamalar

No comments: