Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, September 14, 2009

எந்தப் பகுதிக்கு பணம் அனுப்பினாலும் உடனடியாக சேரும்:அஞ்சல் துறை சேவையில் மற்றொரு புதுமை

சென்னை: ""அஞ்சல் துறையில் உடனடி பண பரிமாற்றம் செய்வதற்காக "யூரோ-ஜீரோ' திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளோம். அத்திட்டத்தின் படி, உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம்,'' என்று அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை துவக்கிவைத்த மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.



அஞ்சல்துறையின் சரக்கு விமான சேவை துவக்க விழா சென்னை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில், அஞ்சல் சேவை கழகத்தின் செயலாக்க உறுப்பினர் மஞ்சுளா பிரசர் வரவேற்றார்.அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, சிறப்பு உறையை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:இந்தியாவில் மரபும், சேவையும் மாறாமல் இருப்பது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை. ரயில்வே துறையாவது இந்தியாவில் சில இடங்களுக்கு சென்றடையவில்லை. ஆனால், ஆறு லட்சம் கிராமங்களை 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இணைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அஞ்சல் துறை புதிய பொலிவு பெற்றுள்ளது. இந்த துறை தபால்களை மட்டும் கொண்டு சேர்க்கும் துறை அல்ல. பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தை, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள நம்பிக்கையை கொண்டு போய் சேர்க்கும் துறை.



அஞ்சல் துறை நவீனப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சிதைந்து போகும் சூழல் ஏற்படும். இது சேவை துறை. இதில், லாபம் எதிர் பார்க்க கூடாது. வருவாயை கூட்டும் முயற்சி மேற்கொள் ளப்படாமல் இல்லை. வருவாயுடன் பொதுமக்கள் சேவை நோக்கத்தோடு இத்துறை செயல்பட வேண்டியுள்ளது.

விலை ரூ.30 கோடி: அஞ்சல் பிரிப்பகங்களை நவீனப்படுத்தும் முயற்சியில், 65 கோடி ரூபாய் நிதி ஓதுக்கப் பட்டுள் ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சல் பிரிப்பகங்களை அடுத்த மாதம் கொண்டு வரவுள்ளோம். அதற்கான ஒரு இயந்திரத்தின் விலை 30 கோடி ரூபாய்.இந்தியாவில் உள்ள ஆயிரம் தபால் நிலையங்களை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறோம். அடுத்த ஆறு மாத காலத்தில் மேலும், ஆயிரம் அஞ்சலகங்கள் நவீனமாக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்தியாவில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்திற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதத்தில் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.

அஞ்சல்துறையில் உடனடி பண பறிமாற்றம் செய்வதற்காக "யுரோ-ஜீரோ' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளளோம். அத்திட்டத்தின் படி உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான் ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம். இத்திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறோம். அதற்கான பூர்வாங்கப்பணிகள் முடிந்துவிட்டன.வடகிழக்கு மாநிலங்களில் துரித தபால் சேவைக்கான ஒரு விமான சேவை கொண்டு வரப் பட்டது. இன்று, அந்த சேவை தென்இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் போல இரண்டு விமானங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இயக்கப்படவுள்ளன. இந்தியா முழுவதும் இந்த சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சர் சச்சின் பைலட் பேசுகையில் கூறியதாவது :அஞ்சல் துறையில் சரக்கு விமானத்தின் முதல் சேவை கோல்கட்டா -வட கிழக்கு மாநிலங்கள் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஏர் இந்தியா சர்வீஸ் மூலம் மேலும் இரண்டு அஞ்சல் சரக்கு விமான சேவை துவக்கப்பட்டது. இதன் மூலம் மூன்று அஞ்சல் சரக்கு விமான சேவை பயன்படுத்தப்பட்டது.

கடந்த 1949ம் ஆண்டு இரவு நேர தபால் சேவை, தகவல் துறையின் முன்னாள் அமைச்சர் ரபீக் அகமது கித்வாயால் துவக்கப்பட்டது. அந்த திட்டம், சில காரணங்களுக்காக கடந்த 1970ம் ஆண்டு கைவிடப்பட் டது. அதன் பிறகு கடந்த 2008ம் ஆண்டு, "புராஜக்ட் ஏரோ' திட்டம் சிறந்த சேவையாற்றி வருகிறது. தற்போது, துவக்கப் பட்ட இந்த அஞ்சல் சரக்கு விமான சேவை மூலம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தபால் நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும்.இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.



அஞ்சல் துறையின் செயலர் ராதிகா துரைசாமி தலைமை தாங்கி பேசியதாவது: அஞ்சல் துறை சேவைக்காக மூன்று போயிங் ரக விமானங்கள் இயக் கப்படுகின்றன. ஒரு விமானத் தின் கொள்ளளவு 14 டன் ஆகும்.அதில், எட்டு அடுக்குகள் உள்ளன. இந்த விமானங்கள் மூலம் பல்வேறு தபால் சேவை அளிக்கப்படுகின்றன. நள்ளிரவு ஒரு மணிக்கு நாக்பூருக்கு இந்த விமானங்கள் வந்து சேருகின்றன. தபால் பரிமாற்றத் திற்கு பிறகு 2 மணிக்கு விமானங்கள் புறப்படுகின்றன.இவ்வாறு ராதிகா துரைசாமி கூறி�ர்.விழாவில், தலைமை தபால் துறை தலைவர் சக்ரபர்த்தி நன்றி தெரிவித்தார்.



--
நன்றி,
தினமலர் நாளிதழ் (www.dinamalar.com)

No comments: