புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரீத் பரேக் கமிட்டி, "பெட்ரோல், டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கைவிட வேண்டும். சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்த வேண்டும். அதேபோல், கெரசின் விலையையும் உயர்த்த வேண்டும். எரிபொருள் மானியத்தை கணிசமாக குறைக்க வேண்டும்' என, பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழு வரும் 7ம் தேதி கூடுகிறது.
நன்றி : தினமலர் முழுச்செய்தி
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, June 4, 2010
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் : இன்னும் மூன்று நாளில் அறிவிக்க அரசு திட்டம்
Posted by
Arul
at
Friday, June 04, 2010


No comments:
Post a Comment