சென்னை:சென்னையில் 4 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகள் உட்பட, தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. போலியோவை முற்றிலும் ஒழிக்க நேற்றும், வரும் பிப்ரவரி முதல் தேதியும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து கொடுக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, நாடு முழுவதும் சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சிறப்பு முகாம் களில் நேற்று போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தவர்களுக்கும், முகாம் நாளான நேற்று மீண்டும் கொடுக்கப்பட்டது. பிறந்து ஒன்றிரண்டு நாட்களான குழந்தைகளுக்கும் இம்மருந்து கொடுக்கப்பட்டது.போலியோ மருந்து கொடுக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தனது இல்லத்தில் நேற்று காலை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், சுற்றுலா மையங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையங்களில் சொட்டு மருந்துகள் இலவச மாக வழங்கப்பட்டன.சொட்டு மருந்து கொடுத்ததும், குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் "ஜென்ஷன் வயலட்' என்ற அடையாள "மை' வைக்கப்பட்டது.
விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து கொடுப்ப தற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் பன் னீர் செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, ""தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதற்கான பணியில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். போலியோவை அறவே ஒழிக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டன,'' என்றார்.
Source: Dinamalar
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, December 22, 2008
70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
Posted by
Arul
at
Monday, December 22, 2008


No comments:
Post a Comment