Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, December 22, 2008

தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் ஆரம்பம்

கோவை:தமிழகம் முழுவதும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட 385 "மாதி ரிப்பள்ளிகள்' உருவாக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, கல்வியில் பின்தங்கிய 11 மாவட்டங்களில், 38 பள்ளிகளை துவங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தனியார் பள்ளிகளைப் போல் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட "மாதிரிப் பள்ளி'களை துவக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள் ளது.


தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், முதல் கட்டமாக கல்வியில் பின்தங் கிய 11 மாவட்டங்களை சேர்ந்த 38 ஒன்றியங்களில் இந்த மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளன.கல்வியறிவு பெற்ற பெண்கள் 50 சதவீதத்துக்கு குறைவாக இருப்பது, ஆண், பெண் எண்ணிக்கையின் வேறுபாடு 20 சதவீதத்துக்கு கூடுதலாக இருப்பது ஆகிய இரு அம்சங் களின் அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கான ஒன்றியங்கள் தேர்வு செய் யப்படுகின்றன.


நாடு முழுவதும் இது போல் 2,500 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படவுள்ளன. 10 ஏக்கர் பரப் பளவில் அமையவுள்ள ஒவ்வொரு பள்ளியும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக அமைக்கப் படும்.அனைவருக்கும் கல்வி இயக்கம் போல, "அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு "ராஷ்ட்ரீய மத்ய மிக் சிக்ஷா அபியான்' (தேசிய இடைநிலை கல்வி இயக்கம்) என பெயரிடப்பட்டுள்ளது.


மத்திய அரசு 75 சதவீதமும் மாநில அரசு 25 சதவீதமும் இத்திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கின்றன. இந்த சிறப்பு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். மண்டல அளவில் மாணவ மாணவியருக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இந்த பள்ளிகளுக்கு மாணவ மாணவி யரை தேர்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இத்திட்டம் குறித்து விவாதிக்க, விழுப்புரம், ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட- கல்வியில், பின்தங்கிய 11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அலுவலகத்தில் நடந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாதிரிப் பள்ளிகள் துவங்க இடம் தேர்வு செய்வது, நுழைவுத் தேர்வு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

Source: Dinamalar

No comments: