
சென்னை:இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வர்த்தக ரீதியாக செயற்கைக்கோள் களை உருவாக்கி, விண்ணில் ஏவி வரு கிறது. அத்தகைய அதிநவீன "டபிள்யு.2.எம்.,' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 4.05 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஏரியேன்-5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப் பட்டது.இந்த செயற்கைக்கோள் 3,463 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இதுவே. விண்ணில் செலுத்தப் பட்ட 32வது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்தது.
செயற்கைக்கோளில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹசனில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு திட்டமிட்டபடி சிக்னல்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன.இந்த செயற்கைக் கோள் 15 ஆண்டுகளுக்கு தனது பணியைச் செய்யும் திறன்மிக்கது. அதற்கேற்ப சூரிய ஒளியில் இருந்து அதிகபட்சமாக 7,000 வாட் வரை மின்உற்பத்தி செய்யவும், இதில் வசதி உள்ளது.
Source :
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, December 22, 2008
விண்ணில் பாய்ந்தது வர்த்தக செயற்கைக்கோள்
Posted by
Arul
at
Monday, December 22, 2008


No comments:
Post a Comment