Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, December 18, 2008

ஏ.டி.எம்., கார்டு உபயோக கட்டணம் ரத்து

இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டைப் பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்பதற்கு, ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இந்தியன் வங்கிக்கு 1,580 கிளைகள் உள்ளன. 670 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. 28 லட்சம் ஏ.டி.எம்., கார்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கின்றனர். ஒரு ஏ.டி.எம்., மையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 பேர் பணம் எடுக்கின்றனர். 27 ஏ.டி.எம்., மையங்களில் ரயில் டிக்கெட் பெறும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுத்தால் அந்த வங்கிகள் இந்தியன் வங்கியிடம் 18 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படாது. எந்த வங்கியில் வேண்டுமானாலும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்தியன் வங்கி சார்பில் ஐந்து லட்சம் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 250 ஏ.டி.எம்., இயந்திரங்கள் புதிதாக வாங்க உள்ளோம். ஏ.டி.எம்., மையங்கள் தேவையான இடங்களில் அவை பொருத்தப் படும். இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.

src: http://www.dinamalar.com

No comments: