Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 3, 2008

சென்னை ஐகோர்ட் தமிழக அரசிடம் கேள்வி * தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளதா?

‌சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க கோரி கைதிகளின் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததால் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது

கடந்த 2000ம் ஆண்டில் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கலவரம் வெடித்தது. தர்மபுரியில் நடந்த கலவரத்தில் அ.தி.மு.க.,வினர், கோவைவிவசாய பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பஸ்சை தீயிட்டு கொளுத்தினர். இச்சம்பவத்தில் மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா மூவரும் எரிந்து பலியாயினர். இதுதொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் தர்மபுரியைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு சேலம் கூடுதல் அமர்வு நீதிபதி மாணிக்கம் டிச. 20ம் தேதி மூவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தார். அதை ஐகோர்ட் உறுதிப்படுத்தி விட்டது. ஜன.10ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

அப்பீல் மனுவை பெற்ற சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகம், தூக்கு தண்டனை கைதிகள் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்' என்ற தகவலை சென்னை ஐகோர்ட், தமிழக சட்டத்துறை செயலர், சேலம் நீதிமன்றம், கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எக்ஸ்பிரஸ் டெலிகிராம் மூலம் தெரிவித்துள்ளது. . தூக்கு தண்டனை கைதிகளின் வக்கீல் மனோஜ்பாண்டியன் சுப்ரீம் ‌கோர்ட்டில் விசாரணை நடக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென தெரிவித்தார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா எனவும், நாளைக்குள் பதில் சொல்ல வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்பாவி மாணவிகளின் உயிரோடு விளையாடிய மூன்று பேரின் தூக்கு ‌தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா... பதில் தமிழக அரசின் கையில் தான் உள்ளது.

No comments: