Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 3, 2008

ஒரே நாளில் ஆயிரம் பஸ்கள் இன்று இயக்கம் : சென்னையில் மட்டும் 500 பஸ்கள் கூடுகிறது

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் ஒரே நாளில் முதன்முறையாக ஆயிரம் பஸ்கள், முதல்வர் கருணாநிதியால் இன்று துவக்கி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

எக்ஸ்பிரசில் சொகுசு மற்றும் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.கடந்த மாதம் போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் மற்றும் பொது மக்களுடனான சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை வாசிகள், அதிக பஸ்களை இயக்கும்படி கோரிக்கை விடுத்தனர். சென்னை மாநகர் பயணிகளின் போக்குவரத்து கோரிக்கைகளை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையை உயர்மட்டக் குழு பரிசீலித்து, பல்வேறு ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில் ஆயிரம் புதிய பஸ்களை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவெடுத்தது. சென்னையில் 500 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டது. 83 புதிய வழித்தடங்களை உருவாக்கி அந்த வழித்தடங்களில் புதிய பஸ்களை இயக்கவும், ஏற்கனவே உள்ள வழித் தடங்களில் 42 பஸ்களை கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளது. மற்ற பஸ்கள் அனைத்து வழித் தடங்களிலும் பகிர்ந்தளிக்கப்படுகிது. எக்ஸ்பிரஸ் வழித்தடங்களில் இயக்கப்படும் 500 பஸ்களில் கூடுதல் சொகுசு மற்றும் குளிர்சாதன வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக, சென்னையில் 100 தொடர் பஸ்கள், 300க்கும் அதிகமான தாழ்தள சொகுசு மற்றும் 10 குளிர்சாதன வால்வோ பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் போது சென்னையின் இலக்காக ஜனவரி 2008க்குள் மூன்றாயிரம் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். இன்று துவங்குவதில் சென்னை மாநகருக்கான 500 புதிய பஸ்களை சேர்த்து சென்னை மாநகரில் பஸ்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இன்று ஆயிரம் புதிய பஸ்களை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். துவக்க விழாவில் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உத்தரவினையும் வழங்குகிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இந்த விழாவிற்குத் தலைமையேற்கிறார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மா.ராமசுப்ரமணியன் கூறுகையில், "சென்னையில் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களை சேர்த்து தற்போதைய எண்ணிக்கை மூன்றாயிரத்து 60. சென்னை மாநகரின் எல்லை 40 கி.மீட்டரில் இருந்து 50 கி.மீ., தூரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 83 புதிய வழித்தடங்கள் சென்னையில் றிமுகப்படுத்தப்படுகிறது. மாநகர பஸ் பயணிகளின் கோரிக்கையை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பிரச்னைகள் ஆய்வு செய்து விரைவில் தீர்க்க இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும்," என்றார்.

No comments: