தரிசன டிக்கெட் விற்பனை மூலம் பழநி கோயில் வசூல் ஒரே நாளில் ரூ.14 லட்சத்தை எட்டியது.
கடந்த ஞாயிறன்று பழநி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ரூ.10, ரூ.100 தரிசன மற்றும் அபிஷேக,அர்ச்சனை டிக்கெட் விற்பனை மூலம் வசூல் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம். பஞ்சாமிர்த விற்பனை ரூ.8 லட்சத்து 24 ஆயிரம். தங்கரத புறப்பாட்டின் மூலம் ரூ.92 ஆயிரம். இரண்டு வின்சுகள் மூலம் வசூல் ரூ.86 ஆயிரம். மற்ற இனங்களை சேர்த்து வசூல் ரூ.14 லட்சத்தை எட்டியது. இதில் தங்கும் விடுதிகள், முடிக்காணிக்கை வசூல் சேர்க்கப்படவில்லை. மேற்கண்ட தகவலை பழநி கோயில் இணை ஆணையர் தி.ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
Source : Dinamalar


No comments:
Post a Comment