Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, December 18, 2007

மதுரை-தூத்துக்குடி 'தங்க நாற்கர சாலை': தனியாரிடம் ஒப்படைப்பு

 

http://www.dinamalarbiz.com/admin/news/8957898.jpgமதுரை : மதுரை - தூத்துக்குடி இடையே ரூ.629 கோடி மதிப்பில் 128 கி.மீ., தொலைவுக்கு போடப்படும் நான்கு வழிச்சாலை திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரம் திட்டம் (நான்கு வழிச்சாலை) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மூலம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நாடு முழுவதும் ஜரூராக நடக்கிறது. இத்திட்டத்துக்கு 'பி.ஓ.டி.' என (பில்ட்-ஆபரேட்டிவ்-டிரான்ஸ்பர்) பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கட்டுமானம், செயலாக்கம், ஒப்படைப்பு என்ற அடிப்படையில் நான்கு வழிச்சாலையை அமைக்க ஒரு கி.மீ.,க்கு ரூ.5 கோடி வரை என்.எச்.ஏ.ஐ., செலவிடுகிறது.தங்க நாற்கரத் திட்டத்துக்கு பெரும்தொகை தேவைப்படுவதால் தனியார் முதலீடை என்.எச்.ஏ.ஐ., பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட தொலைவில், நிர்ணயிக்கப்பட்ட தொகையில், தரத்துடன் நான்கு வழிச்சாலையை முடித்து கொடுப்பதற்காக முன்னணி நிறுவனங்கள் சிலவற்றுடன் என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் அவ்வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு 'டோல்கேட்' வரி 15 முதல் 30 ஆண்டுகள் என வாகனங்களிடம் வசூலிக்கும் உரிமம் தனியாரிடம் வழங்கப்படும். மதுரை - தூத்துக்குடி இடையே ரூ.629 கோடி மதிப்பில் 128 கி.மீ., தொலைவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மதுக்கான் நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் அந்நிறுவனம் வாகனங்களிடம் என்.எச்.ஏ.ஐ., ஒப்புதலுடன் டோல்கேட் வரியை 30 ஆண்டுகள் வரை வசூலிக்கும். இதேபோல் திண்டுக்கல் - கரூர் இடையே மதுக்கான் நிறுவனமும், நாமக்கல் - சேலம் இடையே ரிலையன்ஸ் நிறுவனமும், சமயநல்லூர் - விருதுநகர் இடையே அகர்வால் நிறுவனமும் என்.எச்.ஏ.,யிடம் நான்கு வழிச்சாலைக்கான ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.

 

Source : Dinamalar

No comments: