சேலம் : சேலம்-விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சேலத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி அகல ரயில்பாதை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அப்போது அதன் வழியே வந்து கொண்டிருந்த ரயிலை கண்ட விவசாயி தன் மனைவியின் சேலையை கொண்டு ரயிலை நிறுத்தினார்.இதன் மூலம் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் மெதுவாக வந்து 8 மணியளவில் தண்டவாளத்தை சரிசெய்தனர்.பின்னர் ரயில் ஒன்றதை மணிநேரம் தாமதமாக சென்றது. முன்னதாக பயணிகள் அனைவரும் பேருந்து மூலமாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.
Source: Dinamalar


No comments:
Post a Comment