ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் 7வது நாளாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.காற்றும் மணிக்கு55 கி.மீ வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.புகழ்பெற்ற அக்னீதீர்த்தம் அருகே கடல் நீர் உள்ளே புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 60 மிமீ மழையும், மண்டபத்தில் 18 மி.மீ., மழையும் பாம்பனில் 12.8 மி.மீ மழையும், தங்கச்சி மடத்தில் 10 மி.மீ.,மழையும் பதிவாகியுள்ளது.
Source : Dinamalar


No comments:
Post a Comment