தூத்துக்குடி: தூத்துக்குடி: கடற்கரையில் 100 கிலோ எடையுள்ள பெண் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இறந்து கரை ஒதுங்கிய இந்த பெண் டால்பின் கூனல் முதுகி ஓங்கி அதாவது `ஹம்ப் பேக்டு' வகையைச் சேர்ந்தது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இது அதிகம் காணப்படுகிறது. கரை ஒதுங்கிய இந்த டால்பினின் நீளம் 158 செ.மீ., குறுக்களவு 98 செ.மீ., நடுக்கடலில் துள்ளிக் குதித்த போது கப்பல் அல்லது படகில் டால்பின் அடிபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டால்பின் அங்கேயே புதைக்கப்பட்டது
Source : Dinamalar
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, December 31, 2007
இறந்த நிலையில் கரை ஒதுங்கியது டால்பின்
Posted by
Arul
at
Monday, December 31, 2007


No comments:
Post a Comment