Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, December 31, 2007

டாடா ரூ. ஒரு லட்சம் காருக்கு போட்டியாக மாருதியின் எம் 800

http://www.dinamalarbiz.com/admin/news/6456982.jpg

புதுடில்லி: டாடாவின் ரூ. ஒரு லட்சம் கார் அறிமுகப்படுத்தினால், அதனுடன் விற்பனையில் போட்டிபோட, மாருதி தன் எம் 800 ரக கார் விலையை குறைக்க பரிசீலித்து வருகிறது.மாருதி சுசுகி நிறுவனம் தயாரித்து விற்கும் இந்த ரக காரின் விலை தான் கார்களில் மிகவும் குறைவானது. இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வாங்கலாம். மாருதி கார் நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனை சந்தையில் 50 சதவீதத்தை பிடித்து வைத்துள்ளது; சர்வதேச அளவில், கார் விற்பனை வளர்ச்சியில் இரண்டாவது நிறுவனமாக திகழ்கிறது.இந்திய கார் சந்தையில், பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது மாருதி 800 ரக கார் தான். 1983ம் ஆண்டு இந்த காரை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. இப்போதும் அதிகம் விற்பனை ஆகும் மாருதி கார் இது தான். நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறது.மாருதியின் தாய் நிறுவனம் ஜப்பானிய நிறுவனம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன், ஒரு லட்சம் ரூபாய் விலை கார் தயாரிப்பதை விரும்பவில்லை. 'விலை மலிவு காரை தயாரித்தால் பாதுகாப்பு குறைந்துவிடும்' என்று கருத்து கூறியது. ஆனால், டாடா முழுவீச்சில், ரூ.ஒரு லட்சம் காரை விற்பனை செய்வதில் இறங்கியுள்ளது. இதே விலையில் இரண்டு ரக கார்களை விற் பனை செய்ய திட்டமிட்டுள் ளது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை விற்பனை செய்ய முடியும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனால், தன் கார் விற்பனை பாதிக்கக் கூடாது என்று மாருதி சுசுகி தீவிரமாக யோசித்து வருகிறது. அதனால், தன் எம் 800 ரக கார் விலையை குறைக்கலாமா என்று தீவிர பரிசீலனை செய்து வருகிறது. மாருதி மட்டுமின்றி, பிரான்ஸ் ரெனால்ட் நிறுவனமும், இந்தியாவில் சிறிய ரக காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது

Source : Dinamalar

No comments: