Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

சுற்றுலா பொருட்காட்சியில் பொங்கல் விழா : தினமலர்

சுற்றுலா பொருட்காட்சியில் பொங்கல் விழா : தினமலர்: "சுற்றுலா பொருட்காட்சியில் பொங்கல் விழா

ஜனவரி 15,2009,00:00 IST

சென்னை : சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் சுற்றுலா பொருட்காட்சியில், தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவில், தாசில்தார் சியாம் சுந்தர், மாவட்ட சமூக அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மாநகராட்சி: சென்னை மாநகாட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சுப்ரமணியன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், துணை மேயர் சத்யபாமா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்க என்று அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.சுற்றுலா பொருட்காட்சி: சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 35வது சுற்றுலா பொருட்காட்சியில், அத்துறையின் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் சமத்துவ தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த ஆங்கிலேயர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சுற்றுலாத்துறையின் சிற்றூர் சுற்றுலா வளாகத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கிராமிய பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கு சென்னை மக்களுடன் வெளிநாட்டினர் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். முன்னதாக சிலம்பம், வாள் வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளுடன் அமைச்சர் மற்றும் வெளிநாட்டினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


விழாவில் சுற்றுலாத்துறை தலைவர் சன்வத்ராம் ஐ.ஏ.எஸ்.,(ஓய்வு), செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., மேலாண்மை இயக்குனர் ராஜாராம் ஐ.ஏ.எஸ்., ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் 9 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், நடனம், குரலிசை போட்டிகள் நடந்தன. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று வகை போட்டியிலும் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் கலை விழாவில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், 2ம் பரிசாக 7,500 மற்றும் மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் வீதம் பரிசுகள் அளித்து பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன."

No comments: