Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 13, 2009

பாலமேடு ஜல்லிக்கட்டில் 'விளையாட' தயாராகும் காளைகளும், 'காளையர்களும்': தினமலர்

பாலமேடு ஜல்லிக்கட்டில் 'விளையாட' தயாராகும் காளைகளும், 'காளையர்களும்': தினமலர்: "பாலமேடு ஜல்லிக்கட்டில் 'விளையாட' தயாராகும் காளைகளும், 'காளையர்களும்'

ஜனவரி 13,2009,00:00 IST

மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு, ஜன.,15ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டி செய்து வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகள் மஞ்சள்மலை ஆறு ஓடை வழியாக 'மிரட்டல்' விடுத்துக்கொண்ட கரையேறுவது வழக்கம். இதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.


ஜல்லிக்கட்டை ரசிக்க ஓடைக்கரையில் வி.ஐ.பி.,க்கள், பார்வையாளர்களுக்கு என பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நாளை மாலை முதல் முன்பதிவு துவங்குகிறது. காளையை பிடிக்கும் வீரர்களுக்கு சீருடையும் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டாலும், கிராம கமிட்டி சார்பில் அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த 100 தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 'காளைகளை பிடித்து விளையாடுவதற்கு பதில் சீண்டுபவர்களை கண்காணித்து வெளியேற்றுவது இவர்களது முக்கிய பணி' என்கின்றனர் கிராம கமிட்டியினர்.


காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் கோவில் காளையான கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து காளை வாடிவாசல் வழியாக ஓடிவந்து ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கிறது. பின்னர் குறிப்பிட்ட சமூகத்தினரின் கோவிலுக்குரிய நான்கு காளைகள் அடுத்தடுத்து விடப்படும். கோவில் காளைகளை யாரும் பிடிக்கக்கூடாது, பிடிக்க மாட்டார்கள் என்பது மரபு. பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு 48 மணி நேரமே உள்ள நிலையில் இப்போதே காளைகளும், 'காளையர்களும்' விளையாட தயாராகி வருகின்றனர்."

No comments: