பாளை.,மத்திய சிறை கைதிகளுக்கு வடை, பாயாசத்துடன் சாப்பாடு: தினமலர்: "பாளை.,மத்திய சிறை கைதிகளுக்கு வடை, பாயாசத்துடன் சாப்பாடு
ஜனவரி 15,2009,00:00 IST
திருநெல்வேலி : தமிழ்ப்புத்தாண்டையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகளுக்கு வாழைஇலையில் வடை, பாயாசத்துடன் சாப்பாடு வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் மத்திய சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தினத்தையொட்டி உறவினர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக கைதிகள் தடுப்புசுவரின் இருபுறமும் நின்றுகொண்டுதான் பேசிக்கொள்ள முடியும். ஆனால் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களை ஒரே அறையில் சந்தித்து பேச அனுமதிப்பதாக சமீபத்தில் சிறைத்துறை டி.ஜி.பி.,நட்ராஜ் தெரிவித்திருந்தார்.
பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகள் ஆயிரத்து 450 பேருக்கு வாழைஇலையில் வடை, பாயாசத்துடன் சாப்பாடு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாளை.,சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தாசுவாமிகள் செய்திருந்தார். அவர் பேசுகையில், ஒரு குற்றத்தை செய்தவர்கள் வாழ்க்கை முழுவதும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் திருந்துவதற்கு தரப்படும் வாய்ப்புதான் இது. அனைவரும் மற்றவர்கள் மீது அன்புகாட்டுங்கள் என்றார். தொடர்ந்து கைதிகளுக்கு அவர் உணவு பரிமாறினார்.
நிகழ்ச்சியில் திருவேடகம் அமலாந்தாசுவாமிகள், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சத்யானந்தாசுவாமிகள், கோவை ஆம்டெக்ஸ் நிறுவன உரிமையாளர் கந்தசுவாமி, நெல்லை மத்திய ரோட்டரி கிளப் தலைவர் மயில்பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி பேசுகையில், தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பாளை சிறைவாசிகளுக்கு இது ஒரு புதிய அனுபவம் என்றார்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
பாளை.,மத்திய சிறை கைதிகளுக்கு வடை, பாயாசத்துடன் சாப்பாடு: தினமலர்
Posted by
Arul
at
Thursday, January 15, 2009


No comments:
Post a Comment