Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

வெள்ளை எலி வளர்ப்பில் ஆதிவாசி மக்கள் ஆர்வம்: தினமலர்

வெள்ளை எலி வளர்ப்பில் ஆதிவாசி மக்கள் ஆர்வம்: தினமலர்: "வெள்ளை எலி வளர்ப்பில் ஆதிவாசி மக்கள் ஆர்வம்

ஜனவரி 15,2009,00:00 IST

குன்னூர் : நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வனப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்கள் வெள்ளை எலி வளர்ப்பில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.குன்னூர் வனச்சரக எல்லைக்குள் 4,000 எக்டர் பரப்பளவில் வனம் உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் செங்கல்கோம்பை, குறும்பாடி, ஆனைப்பள்ளம், நெடுகல் கோம்பை, மேல் குறும்பாடி, கீழ் குறும்பாடி, நீராடிக்கோம்பை, சேம்பக்கரை உள்ளிட்ட ஏராளமான ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.


இக்கிராமங்களில் உள்ள ஆதிவாசி மக்கள், வனத்தில் விளையும் கடுக்காய், நெல்லிக்காய், பூச்சக்காய், சீகைக்காய், துடைப்பம் செய்யப் பயன்படும் ஈச்சம்புற்களை சேகரித்து, விற்று வருகின்றனர்.குறும்பாடி பகுதியில் வசிக்கும் குறும்பர் இன ஆதிவாசி மக்களிடம் வெள்ளை எலி வளர்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது; இவர்கள் வீட்டின் முன் கூண்டு வைத்து வெள்ளை எலிகளை வளர்க்கின்றனர். இவற்றுக்கு காடுகளில் விளையும் புல் மற்றும் கேரட் போன்றவற்றை உணவாக அளிக்கின்றனர்.


வெள்ளை எலி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஆதிவாசி மக்கள் கூறுகையில், ''நாங்கள் வளர்க்கும் வெள்ளை எலியை பலரும் வாங்கி செல்கின்றனர். எங்களிடம் உள்ள வெள்ளை எலி 2 முதல் 3 கிலோ எடை கொண்டது. வெள்ளை எலிகளில் மருத்துவக் குணம் இருப்பதாலும் பலர் வாங்குகின்றனர். ஒரு எலியை 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். இதன் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது,'' என்றனர். தற்போது, கிளி ஜோசியம் போன்று பல இடங்களில் எலி ஜோசியம் பார்க்கப்படுகிறது; எலி ஜோசியத்துக்காகவும் சிலர் வெள்ளை எலிகளை வாங்கிச் செல்வதாக இவர்கள் கூறுகின்றனர்."

No comments: