Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 13, 2009

ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ., செல்லும் கார்: தினமலர்

ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ., செல்லும் கார்: தினமலர்: "ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ., செல்லும் கார்

ஜனவரி 13,2009,00:00 IST

பெங்களூரு : வெறும் தண்ணீரை மட்டும் பிரதான எரிபொருளாகக் கொண்டு, ஒரு லிட்டருக்கு 500 கி.மீ., தூரம் செல்லும் காரை கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு காரை பெங்களூரு ஆர்.வி. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். விரைவில் வெறும் தண்ணீரை மட்டுமே எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடிய காரையும் இவர்கள் வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.


இத்திட்டத்தில் பல்வேறு பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெரிதும் ஆர்வம் செலுத்தி வருகின்றன. ஜி.இ., மோட்டார்ஸ் நிறுவனம், இந்த கார் வடிவமைப்பு துவக்க கட்ட ஆய்வுக்கான முழு நிதி உதவியையும் ஏற்றுள்ளது. அது மட்டுமின்றி, காரின் எடையை குறைக்கும் வகையில் பயன்படுத்தப்படும் பாலிமெர் கார் வடிவமைப்பையும் அளித்து உதவி உள்ளது.


இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய குழுவினர் ஏற்கனவே, தண்ணீரை பிரதான எரிபொருளாகக் கொண்டு இயங்கும் காரை வடிவமைத்தனர். ஆனால், இந்த கார் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 180 கி.மீ., மட்டுமே செல்லக் கூடியது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கார், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 500 கி.மீ., தூரம் செல்லக் கூடியது. எல்லாவற்றுக்கும் மேலாக, சுற்றுச் சூழல் மாசு சிறிதும் ஏற்படுத்தாத கார் இது.


தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அதை வாயுவாக மாற்றி, இன்ஜினுக்கான எரிபொருளாக செலுத்தும் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் எரிபொருளும், இன்ஜினால் மிக சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக விசேஷ ஹைட்ரஜன் கிட் வடிவமைத்து காரில் பொருத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக வெற்றியடையும் நிலையில், அனைத்துக் கார்களிலும், ஹைட்ரஜன் கிட்கள் பொருத்த முடியும்.


இதன் மூலம், வாகன எரிபொருளில் 50 சதவீதம் மிச்சப்படும். வழக்கமாக செல்லும் தூரத்தை விட, இரண்டு மடங்கு தூரம் அதிகமாக செல்ல முடியும். புனேயை சேர்ந்த வினீத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி, இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இன்னொரு புதிய தொழில்நுட்பமும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு எலக்டிரானிக் கன்ட்ரோல் யூனிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கருவி, எரிபொருளை மிக சிக்கனமாக, அது செல்ல வேண்டிய வழியில் சிறப் பாக செலுத்தக் கூடியது. இந்த கார் வடிவமைப்புக்காக, ரோட்டரி நிறுவனத்தின் இளம் சாதனையாளர்கள் விருது வழங்கப் பட்டுள்ளது.


தற்போது, தண்ணீரும் ஒரு எரிபொருளாக இந்த காரில் பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க தண்ணீரை மட்டுமே எரிபொருளாகக் கொண்ட காரை வடிவமைப்பதே இந்த குழுவினரின் கனவாக உள்ளது. மெக்சிகனில் நடக்கும் சூப்பர் மைலேஜ் வாகன போட்டி, பிரிட்டனில் நடக்க உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பில்லா மாரத்தான் போட்டிகளில் இந்த கார் பங்கேற்க உள்ளது."

No comments: