Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் பாதிப்பு: தினமலர்

தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் பாதிப்பு: தினமலர்: "தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் பாதிப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

வத்தலக்குண்டு : தமிழகத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம், கொப்பரை களம் இல்லாததால் சீரான விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, கரூர், தஞ்சை,மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தென்னை விவசாயம் அதிக அளவில் உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சுற்றியுள்ள பகுதிகள் மஞ்சளாறு, மருதாநதி மூலம் பாசன வசதி பெறுகின்றன. இங்கு தென்னை விவசாயம் பல ஏக்கரில் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றுப்படுகை, மதுரை மாவட்டம் சோழவந்தானில் தென்னை விவசாயம் சிறப்பாக உள்ளது. ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தென்னையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். அவ்வப்போது தென்னைகளை செம்பான் சிலந்தி நோய் தாக்குவதால் தேங்காய் சிறியதாகி மகசூல் பாதிக்கிறது. கேரள வாடல் நோய் தாக்குவதால் மரம் பட்டு விடுகிறது. இதை தவிர்க்க வேளாண் ஆராய்ச்சியாளார்கள் தகுந்த ஆய்வு செய்து, உரிய பூச்சிகொல்லிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.


கடந்த 5 ஆண்டுகளாக தேங்காய் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.2 லிருந்து 3 வரை மட்டுமே விற்று வருகிறது. அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.36 நிர்ணயம் செய்துள்ளது. கரூர், காங்கேயம், வெள்ளகோயில் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேங்காய் கொள்முதல் செய்து அப்பகுதிகளில் கொப்பரையாக மாற்றி மொத்தமாக விற்று லாபம் ஈட்டுகின்றனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத் தில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு ஊழல்கள் நடந்ததால் அனைத்து நிலையங்களும் மூடப்பட்டன. தேங்காய் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு ஆங்காங்கே கொப்பரை தேங்காயாக மாற்ற களம் அமைத்துக் கொடுத்தால் நல்ல லாபம் பெற வாய்ப்பாக இருக்கும்."

No comments: