Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

+2 மொழிப்பாடத்தை டம்மி ஆக்கும் தேர்வுத்துறை: தினமலர்

+2 மொழிப்பாடத்தை டம்மி ஆக்கும் தேர்வுத்துறை: தினமலர்: "+2 மொழிப்பாடத்தை டம்மி ஆக்கும் தேர்வுத்துறை

ஜனவரி 15,2009,00:00 IST

பரமக்குடி : பிளஸ் 2 பாடங்களில் மொழிப்பாடத்தை தேர்வுத்துறை தொடர்ந்து டம்மியாக்குவதால் அதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இன்ஜி., உள்ளிட்ட மேல்படிப்புக்கு கட் ஆப் முறையில் பிளஸ் 2 பாடங்களின் மதிப் பெண்கள் முக்கியத்துவம் பெற்றதால் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் பாடங்களுக்கு டம்மி எண் வழங்கப்பட்டு மதிப்பெண் முறைகேடுகள் தடுக்கப்பட்டன.


இந்நிலையில் நுழைவுத்தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்த பின்னரும் தற்போது நான்கு பாடங்களுக்கும் 'டம்மி' எண் வழங்கப்பட்டே அரசு தேர்வுகள் நடக்கின்றன. மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலத்துக்கு இது போன்று ' டம்மி' எண் வழங்கப்படுவதில்லை. முன்பு கட்ஆப் மார்க் இருந்த போது இதன் அவசியம் குறைவாக இருந்தது. தற்போது ஆசிரியர் பயிற்சி படிப்புகள் போன்றவற்றுக்கு பிளஸ் 2 வில் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படுவதால் மொழிப்படத்தின் மதிப் பெண்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்கு டம்மி எண் வழங்கப்படாததால் மதிப்பெண் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் மற்ற பாடங்களுக்கு வழங்குவது போல் விடைத்தாள் நகலும் மொழிப்பாடங்களுக்கு வழங்குவது இல்லை .


இதன் காரணமாக முறைகேடுகள் நடந்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது. மேல்கல்விக்கு மொழிப்படங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் மற்ற படங்களுக்கு உள்ளது போல 'டம்மி' எண் , விடைத்தாள் நகலும் வழங்கினால் மட்டுமே தேர்வுத் துறை மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் கூறும்போது, ' மற்ற பாடங்களை போல மொழிப்பாடங்களுக்கும் டம்மி எண், விடைத்தாள் நகலும் வழங்கினால் தான் முறைகேடுகளை தவிர்க்கலாம். தேர்வு கட்டணத்தை அரசு ரத்து செய்தும் தேர்வுக்கு பின் விடைத்தாள் நகல் பெற 300 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் மாணவர்கள் மதிப்பெண் குளறுபடிகளை அறிய வாய்ப்பில்லாமல் போகிறது.வருங்காலங்களில் முறைகேடுகளை தவிர்க்க கட்டணம் வசூலிப் பதை தவிர்க்கலாம்' என்றார்."

No comments: