Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

வெளிமாநில வரத்தால் எள் விலை வீழ்ச்சி : தினமலர்

வெளிமாநில வரத்தால் எள் விலை வீழ்ச்சி : தினமலர்: "வெளிமாநில வரத்தால் எள் விலை வீழ்ச்சி

ஜனவரி 15,2009,00:00 IST

கள்ளக்குறிச்சி : வெளி மாநிலத்திலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் எள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இந்தியாவில் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவு உள்ளது. இங்கு தயாராகும் சமையல் எண்ணெய் உலகில் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.


இதனால் தமிழகத்தில் எண்ணெய் வித்துகளுக்கு அதிக மதிப்பும், மார்க்கெட்டிங் வசதியும் அதிகம் உள்ளது.கடந்த சில மாதங்களாக மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களிலிருந்து எள் இறக்குமதி தமிழகத்திற்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தரம் வாய்ந்த கறுப்பு எள் மூடை (80 கிலோ) 4, 500 முதல் 5,000 ரூபாய் வரை விலை போகிறது. வட மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யும் வெள்ளை நிற எள் மூடை (100 கிலோ) 2,500 முதல் 3 000 ரூபாய் வரை விலை போகிறது.விலை குறைவாகவும், எடை கூடுதலாகவும் இருப்பதால் சமையல் எண்ணெய் நிறுவனங்கள் வட மாநிலத்திலிருந்தே தங்களுக்கு தேவையான அளவு எள் இறக்குமதி செய்கின்றன.


இதனால் தமிழகத்தில் தற்போது எள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் விளைவிக்கப்படும் எள் தரமுள்ளதாகவும், கறுப்பு ரக எள்ளாகவும் இருப்பதால் இதிலிருந்து எடுக்கப்படும் எண் ணெய் வாசனை நிறைந்ததாகவும், சத்து மிகுந்ததாகவும் உள்ளன. புண்ணாக்கும் கால்நடைகளுக்கு சிறந்து ஊட்டச்சத்து மிக்க தீவனமாக பயன்படுகின்றன. வட மாநிலங்களிலிருந்து இறக்குமதி செயும் எள் தரமற்றதாகவும், அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனையின்றி, சத்து குறைந்தும் உள்ளது.


இதனால் வியாபாரிகள் எண்ணெய் வாசனையுடன் இருக்க 30 மூடை வட மாநில வெள்ளை எள்ளுடன், இரண்டு முதல் மூன்று மூடை தமிழகத்தில் கொள்முதல் செய்யும் கறுப்பு எள் கலந்து எண்ணெய் உற்பத்தி செய்கின்றனர். சமையல் எண்ணெய் நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப தமிழகத்தில் விலையும் எள் குறைந்த அளவே கொள்முதல் செய் வதால் விலை கடுமையாக விழ்ச்சி அடைந் துள்ளது. சிறு வியாபாரிகள் பலர் எள் மூடைகளை மார்க்கெட் கமிட்டிகள் மூலம் கொள்முதல் செய்து வைத்து விட்டு சரியான விலை கிடைக்காததால் மூன்று மாதங்களுக்கு மேலாக கூடுதல் விலை வருமென காத்திருக்கின்றனர்."

No comments: