Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்: தினமலர்

கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்: தினமலர்: "கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்

ஜனவரி 15,2009,00:00 IST

மயிலாடுதுறை : கரும்பு விவசாயத்தை அழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுக்கு தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எம்பாவை எஸ். யோகநாதன், பொதுச்செயலாளர் நாகு சுப்ரமணியன் அறிக்கை:மத்திய, மாநில அரசுகள் நெல்லுக்கும், கோதுமைக்கும் இணையாக கரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. இதனால் கரும்பு சாகுபடியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கையிருப்பு அதிகமாக இருந்ததால் சர்க்கரை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு கரும்பிற்கு நல்ல விலை தர முடியாத நிலை ஏற்பட்டது. பணம் பட்டுவாடாவிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது சர்க்கரை விலை உயர்ந்துள்ளதால் பல சர்க்கரை ஆலைகள் மாநில அரசு பரிந்துரைத்துள்ள விலையை விடக் கூடுதலாக வழங்க முன் வந்துள்ளன. இந்த ஆண்டு மத்திய அரசு சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (ராசுகர்) இறக்குமதிக்கு அனுமதித்து, அவற்றை வெண் சர்க்கரையாக மாற்றி உள்நாட்டில் விற்க அனுமதிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் சர்க்கரை விலையில் வீழ்ச்சி ஏற்படும். இதனால் கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் பாதிக்கப்பட்டு கரும்பு விவசாயம் நசியும்.

அதனை தவிர்க்க சுத்திரிக்கப்படாத சர்க்கரையை இறக்குமதி செய்து அவற்றை வெண் சர்க்கரையாக மாற்றி 2 ஆண்டுக்குள் மீண்டும் ஏற்றுமதி மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டும். ஸ்வீட் ஸ்டால் மற்றும் ஆடம்பர பானங்களான கோக் ,பெப்சி போன்றவைகள் தான், உற்பத்தியாகும் சர்க்கரையில் 65 சதவீதத்தை பயன்படுத்துகின்றன. அவைகளுக்கு விலையை உயர்த்தி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகளை அழிக்க நினைக்கும் சுத்திகரிக்கப்படாத சர்க்கரை இறக்குமதி திட்டத்தை மறு பரிசீலனை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது."

No comments: