மதுரை மண் மணக்கும் மஞ்சள் கிழங்கு: தினமலர்: "மதுரை மண் மணக்கும் மஞ்சள் கிழங்கு
ஜனவரி 13,2009,00:00 IST
மதுரை : பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தில் இருப்பது மஞ்சள் கிழங்கு. நாளை(ஜன.,14) பண்டிகை ஆரம்பிக்கும் நிலையில் மதுரையில் மஞ்சள் கிழங்கு அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. பாலமேடு, அய்யூர், கோணப்பட்டி, சுர்ரம்பட்டி போன்ற பகுதிகளில் மஞ்சள் கிழங்கு அதிகமாக பயிரிடுவது வழக்கம். முழுமையாக மஞ்சள் கிழங்கு வளர்ச்சி அடைய ஓராண்டு ஆகும். ஆனால் பொங்கல் பண்டிகைக்காகவே கடந்த ஆடி மாதம் நடவு செய்யப்பட்டு ஆறு மாதம் கழித்து, தற்போது அறுவடை நடந்து வருகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறிய மண் வெட்டியால் லாவகமாக மஞ்சள் கிழங்கு செடியை 'உருவி' எடுக்கின்றனர். அதை ஓரிடத்தில் மொத்தமாக சேகரித்து, தண்ணீரில் அலசி களிமண்ணை அகற்றுகின்றனர். மஞ்சள் கிழங்கு செடி காய்ந்து விடக்கூடாது என்பதற்காக உச்சி வெயில் எட்டி பார்க்கும் முன்பே, தண்ணீரால் குளிப்பாட்டி வாகனங்களில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
வியாபாரிகளை நேரடியாக அணுகும் இவர்கள், ஒரு மஞ்சள் கிழங்கு கொத்தை மூன்று ரூபாய்க்கு வாங்கி சில்லரையில் 10 ரூபாய் வரை விற்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகைக்காகவே மஞ்சள் கிழங்கை பயிரிடுவது வழக்கம். இனி அடுத்த ஆடி மாதத்தில் நடவு செய்வோம். அதுவரை வெங்காயம் போன்றவற்றை பயிரிடுவோம்,'' என்றனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Tuesday, January 13, 2009
மதுரை மண் மணக்கும் மஞ்சள் கிழங்கு: தினமலர்
Posted by
Arul
at
Tuesday, January 13, 2009


No comments:
Post a Comment