Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி: தினமலர்

பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி: தினமலர்: "பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த மகர ஜோதி

ஜனவரி 15,2009,00:00 IST

சபரிமலை : சன்னிதானத்தில் பகவான் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்ற சிறிது நேரத்தில் பொன்னம் பலமேட்டில் பிரகாசித்த மகர ஜோதியை கண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசமடைந் தனர். சபரிமலையில் நேற்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது.


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடியிருந்தனர். அதிகாலை முதலே 18ம் படியேறி தரிசனம் செய்யவும், நெய்யபிஷேகம் நடத்தவும் நீண்ட கியூ காணப்பட்டது. மகர சங்கரம பூஜை: அதிகாலை 4.15 மணிக்கு துவங்கிய நெய்யபிஷேகம் 6 மணிக்குநிறுத்தப்பட்டது. பின்னர் மகர சங்கரம பூஜைக்கான ஏற்பாடுகள் துவங்கியது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்த 6.27 மணிக்கு பகவானின் விக்ரகத்தில் சிறப்பு நெய்யபிஷேகம் நடத்தப்பட்டது. திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து அனுப்பப் பட்ட நெய் தேங் காய்கள் உடைக்கப்பட்டு விக்ரகத் தில் அபிஷேகம் செய்யப் பட்டது. அதன் பின்னர் தீபாராதனை நடைபெற்றது. பின்னர்7 முதல் பகல் 1 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உச்சபூஜை நடத்தப் பட்டு நடை மூடப்பட்டது.


திருவாபரண பெட்டி வருகை: மாலை 6 மணிக்கு சரங்குத்திக்கு திருவாபரண பெட்டிகள் வந்து சேர்ந்தது. அப்போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. பந்தளத்தில் திருவாபரண பெட்டி புறப்பட்டது முதல் இந்த கருடன் கூடவே வருவதாக ஐதீகம். இங்கு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின், திருவாபரண பெட்டி 18ம் படி வழியாக 6.34 மணிக்கு ஸ்ரீகோயிலுக்கு வந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் திருவாபரண பெட்டி யை பெற்றுக் கொண்டு நடை அடைத்தனர். 6.40 மணிக்கு நடை திறக்கப் பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மகர நட்சத்திரம் விண்ணில் ஒளிவிட்டு பிரகாசிக்க துவங்கியது.


அதை தொடர்ந்து 6.42 மணிக்கு முதல் முறை ஜோதி ஒளிவிட்டு பிரகாசித்தது. அப்போது பக்தர்களின்'சரணம் ஐயப்பா' என்ற கோஷம் எழுந்தது. பின்னர் 6.43க்கு இரண்டாவது முறையும், 6.44 க்கு மூன்றாவது முறையும் ஜோதி காட்சி தந்தது. ஜோதி தரிசனம் முடித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். வரும் 20ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். எனினும் 18ம் தேதி காலை 10 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் உண்டு. அன்று உச்சபூஜைக்கு முன்னோடியாக களப பூஜை நடைபெறும். 19 ம் இரவு வரை பக்தர்கள் தரிசனம் நடத்த முடியும். ஜன.,16 முதல் 19 வரை படிபூஜை நடைபெறுகிறது. ஜன.,20 காலையில் பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜவர்மா முன்னிலையில் நடைமூடப்படும். பின்னர் மன்னர் பிரதிநிதி திருவாபரணங்களுடன் பந்தளம் திரும்பி செல்வார்.


துளிகள்: * மகரஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் பக்தர்களை அனுமதிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறைவான பாஸ் வினியோகிக்கப்பட்டதால் பலரும் இந்த வாய்ப்பை பெற முடியவில்லை
*சன்னிதானம் முழுக்க முழுக்க மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு சோதனை தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது."

No comments: