Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

மகர சங்கராந்தியை முன்னிட்டு நான்கு லட்சம் பேர் புனித நீராடல்: தினமலர்

மகர சங்கராந்தியை முன்னிட்டு நான்கு லட்சம் பேர் புனித நீராடல்: தினமலர்: "மகர சங்கராந்தியை முன்னிட்டு நான்கு லட்சம் பேர் புனித நீராடல்

ஜனவரி 15,2009,00:00 IST

சாகர் தீவுகள் : மகர சங்கராந்தியை முன்னிட்டு, சாகர் தீவுகளில், வங்காள விரிகுடா கடலில் கங்கை நதி சங்கமிக்கும் இடத்தில் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள், சங்குகளை ஊதியபடியும், மேளங்களை முழக்கியபடியும் புனித நீராடினர்.நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் குழுமினர்.


கங்கா சாகர் மேளாவை பார்த்து ரசிப்பதற்காவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வந்திருந்தனர்.புரி சங்கராச்சாரியார் நிஷிலானந்தா சரஸ்வதி மகராஜும் புனித நீராடினார். கங்கை நதி சங்கமிக்கும் இடத்தில் நின்று சூரிய நமஸ்காரமும் செய்தார். புனித நீராடலுக்கு முதல்நாளே குவிந்துவிட்ட பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெட்டவெளியில் படுத்து உறங்கினர். பெரும்பாலான பக்தர்கள் புனித நீராடலுக்கு முன், தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டனர்.


அங்கு குவிந்திருந்த பிச்சைக்காரர்களுக்கும் ஏராளமான பக்தர்கள் தர்மம் செய்தனர்.கபில் முனி ஆசிரமத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெறுவதற்காக, அரை கி.மீ., தூரத்துக்கும் அதிகமாக வெறும் காலுடன் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ராமகிருஷ்ண மிஷன், இஸ்கான், கன்னகுயா, காட்டன் ஸ்டிரீட் யங் பாய்ஸ் கிளப், பர்ரபசார் பயம் சமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அன்னதானம் வழங்கின.புனித நீராடலில் கலந்து கொண்ட பக்தர்களில் பலர், பசுக்களை தானமாக வழங்கினர். முதல் முதலாக கங்கா சாகர் மேளா ஐரோப்பிய சமூகத்தில் 1819ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1939ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடந்து வருகிறது."

No comments: