Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: உயிர்பலி தவிர்ப்பு: தினமலர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: உயிர்பலி தவிர்ப்பு: தினமலர்: "அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 20 பேர் காயம்: உயிர்பலி தவிர்ப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 20 பேர் காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் மேடை அமைக்கப்பட்டு நேற்று காலை 10.25மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கி, மாலை 4 மணிக்கு முடிந்தது.


முதலில் மேளதாளத்துடன் நாட்டாமை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி, அவனியாபுரம், சோளங்குருணி, கொம்பாடி, கோவில்பாப்பாகுடி ஊர்களிலிருந்து 305 காளைகள் கலந்துகொண்டன. கலெக்டர் சீத்தராமன், ஆர்.டி.ஓ., ஜெயராஜ், எஸ்.பி.,(பொறுப்பு) செந்தில்குமார் மேற்பார்வையில் நடந்தது. அவனியாபுரம் நகராட்சி தலைவர் போஸ்முத்தையா, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் எஸ்.ஆர். கோபி, தி.மு.க., திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஏ.எஸ்.பி., பிரவீண் குமார் அபினவ் தலைமையில் டி.எஸ்.பி., கணேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வராஜ், வலையங்குளம் ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள் வரலட்சுமி, கண்ணன், சுரேஷ் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.


மாடுபிடி வீரர்களின் பெயர், முகவரி பதிவு செய்து மருத்துவ பரிசோதனை நடந்தது. அதன்பின் எண் போடப்பட்ட வெள்ளை பனியன்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்நடை துறை மண்டல இணைஇயக்குனர் டாக்டர் ராஜகோபால், உதவி இயக்குனர் டாக்டர் காஜா முகைதீன், நோய் புலனாய்வுதுறை உதவி இயக்குனர் பூமிநாதன் காளைகளை பரிசோதனை செய்தனர். குறைந்த வயது உள்ள 9 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. 47 காளைகளுக்கு கொம்பில் இருந்த கூர்மை மழுங்கச் செய்யப்பட்டன. உடலில் எண்ணெய் தடவி வந்த 39 காளைகளில் எண்ணெய்தன்மை நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன.


பிராணிகள் நலவாரிய நிர்வாகிகள் பாணிமா, ரமேஷ், பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பு தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் சிவகுமார் பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமன்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடுகளை அடக்கியவர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், பேன், பட்டுசேலை, வேஷ்டி, துண்டு, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன."

No comments: