Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 13, 2009

இன்ஜின் பற்றாக்குறையால் ஊட்டி மலை ரயில் பரிதவிப்பு: தினமலர்

இன்ஜின் பற்றாக்குறையால் ஊட்டி மலை ரயில் பரிதவிப்பு: தினமலர்: "இன்ஜின் பற்றாக்குறையால் ஊட்டி மலை ரயில் பரிதவிப்பு

ஜனவரி 13,2009,00:00 IST

குன்னூர் : தரமற்ற நிலக்கரியால் ஊட்டி மலை ரயில் போக்குவரத்தில் அடிக்கடி தாமதம் ஒரு புறமிருக்க, டீசல் இன்ஜின் பற்றாக்குறையாலும் தினமும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஊட்டி மலை ரயில் போக்குவரத்துக்காக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜினும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜினும் இயக்கப்படுகிறது.


நீராவி இன்ஜினுக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரி தரமற்றதாக இருப்பதால், இன்ஜினின் உந்து சக்தி குறைந்து, கடந்த ஒரு மாதமாக, ரயில் போக்குவரத்தில் பல மணி நேர தாமதம் ஏற்பட்டு வருகிறது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, 10.30 மணிக்கு குன்னூர் வந்து சேர வேண்டிய ரயில், மதியம் 1.00 மணிக்கு மேல் தான் வந்து சேருகிறது; இதனால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இது ஒரு புறமிருக்க, குன்னூர் - ஊட்டி இடையே இயங்கும் ரயில் போக்குவரத்திலும் பிரச்னை துவங்கியுள்ளது; தற்போது, இரண்டு டீசல் இன்ஜின்கள் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன. தினமும் காலை 7.40 மணி, காலை 10.30 மணி, மதியம் 1.30 மணி, மாலை 4.30 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து குன்னூருக்கு காலை 9.00 மணி, மதியம் 12.15 மணி, மாலை 6.00 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது.


தற்போது, ஒரு டீசல் இன்ஜின் பழுதாகி, குன்னூர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஒரு இன்ஜினைக் கொண்டு குன்னூர் - ஊட்டி இடையே ரயிலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது."

No comments: