Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

எடையை குறைக்க எளிய வழி!: தினமலர்

எடையை குறைக்க எளிய வழி!: தினமலர்: "எடையை குறைக்க எளிய வழி!

ஜனவரி 15,2009,00:00 IST

இன்றைய அவசர உலகில், உணவிலும் உடற்பயிற்சியிலும் அதிக அக்கறை காட்டாததால், 30 வயதுக்கு அதிகமானோரிடம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதாலோ அல்லது மாத்திரைகளை விழுங்குவதாலோ எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாது.உடல் எடை ஒரே நாளில் அதிகரிக்கவில்லை.


அதுபோல் படிப்படியாகத்தான் திட்டமிட்டு உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடல் எடையை குறைக்க இரு தனி நபர்களுக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் எப்போதும் பொருந்தாது. ஆகவே இன்னொருவர் கடைபிடிக்கும் முறையை கடைபிடித்துப் பார்ப்போமே என்று நினைக்கக்கூடாது.ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டில் (மாவு பொருள்) அல்லது ஒரு கிராம் புரதத்தில் ( பருப்புகளில் உள்ளது) உள்ள கலோரி அளவை விட, கொழுப்புப் பொருட்களில் இரு மடங்கு கலோரி உள்ளது. எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்துவிட்டு, குறைந்த கலோரி உள்ள பழங்கள் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


ஒரு சிலருக்கு கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு உள்ள உணவுகளை அறவே நீக்கினால் உடல் எடை குறையும். சிலர் அவர்கள் எடுக்கும் உணவின் அளவில் கொஞ்சம் மாற்றம் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.உருளைக்கிழங்கு, அரிசி, இனிப்பு பொருட்கள், இனிப்பு சுவையுடைய பழங்கள் ஆகியவற்றை அளவுடன் சாப்பிட வேண்டும். கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்திருப்பதையோ அல்லது 'டிவி' பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும். தனிநபரின் உயரம், வயது, ஆண், பெண், மரபணு, தசை திரட்சி, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, எண்ணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நம் உடல் எடையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஒருவருக்கு உடல் எடை குறைப்புக்கு கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை டாக்டர் தீர்மானிக்கிறார்.


நீரிழிவு, இருதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், சில வகை கேன்சர் உள்ளிட்டவற்றுக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் முதல் கடமையாக இருக்க வேண்டும். உடல் எடையை குறைப்பதற்கான பொருட்கள் இப்போது அதிகம் வந்துவிட்டன. புத்தகங்கள், 'சிடி'கள், கிரீம், லோஷன், பெல்ட்கள் உள்ளிட்டவை உடல் எடையை குறைக்கும் கோஷங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் இவையெல்லாம் குறைக்கும் என்று நம்புவதை விட, கொஞ்சம் கொஞ்சமாக நம் உணவில் கொண்டு வரும் மாற்றமே நல்லது. உடற்பயிற்சி என்பதை தொடர்ச்சியாக செய்யக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும். நம்மால் எது முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானது. ஒரே நாளில் எடையை குறைக்க முடியாது."

No comments: