Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

கல்பட்டி சத்திரம்-அய்யலூர் இடையே பழைய தடத்தில் புதிய ரயில் பாதை : தினமலர்

கல்பட்டி சத்திரம்-அய்யலூர் இடையே பழைய தடத்தில் புதிய ரயில் பாதை : தினமலர்: "கல்பட்டி சத்திரம்-அய்யலூர் இடையே பழைய தடத்தில் புதிய ரயில் பாதை

ஜனவரி 15,2009,00:00 IST

வடமதுரை : விழுப்புரம்- திண்டுக்கல் இரண்டாவது ரயில் பாதை திட்டத்தில் கல்பட்டிசத்திரம்-அய்யலூர் இடையே மட்டும் புதிய பாதை அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள் ளது.திருச்சி- திண்டுக்கல் இடையே 1998 வரை இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கல்பட்டிசத்திரம்- அய்யலூர் இடையே 2 இடங்கள் மேடாக இருந்தது. இன்ஜின்கள் பெட்டிகளை இழுக்க முடியாமல் திணறியதால் எரிபொருள் செலவும், தண்டவாள தேய்மானமும் அதிகம் இருந்தது.


பாதையின் சாய்வு விகிதத்தை மாற்றுவதற்காக கீரனூர் பகுதியில் சென்ற வழித்தடம் கைவிடப்பட்டு குமரம்பட்டியை சுற்றி 5.5 கி.மீ., தூரத்திற்கு புதிய பாதை அமைக்கப்பட்டது. இங்கு அதிகபட்சமாக 80 அடி ஆழம், 150 அடி அகலம் வரை பள்ளம் வெட்டி எடுக்கப்பட்டது.1998ல் பணி நடந்ததால் ஒரு ரயில் பாதைக்காக மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் நீண்ட இழுபறிக்கு பிறகு விழுப்புரம்- திண்டுக்கல் இரண்டாவது பாதை திட்டத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் அருகில் மற்றொரு தண்டவாளம் அமைக்க வேண்டுமானால் பாறைகளை வெடிவைத்தல், பாலங்களை மாற்றியமைத்தல், வாய்க்கால்களை மாற்றியமைத்தல் என பல சிக்கல்கள் உள்ளன. இது தற்போதைய போக்குவரத்திற்கு பெரும் பாதிப் பை ஏற்படுத்தும்.


இதனால் கல்பட்டிசத்திரம்-அய்யலூர் இடையே கீரனூர் வழியே ஏற்கனவே இருந்த (மீட்டர் கேஜ்) வழித்தடத்திலேயே புதிய பாதை அமையும் வாய்ப்புள்ளது. இவ்விரு ஸ்டேஷன்களுக்கிடையே மட்டும் இரட்டை ஒருவழிப்பாதையாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே இன்ஜினியர்கள் தெரிவிக்கின்றனர்."

No comments: