பழநி உண்டியல் வசூல் ரூ.1.45 கோடியை தாண்டியது: தினமலர்: "பழநி உண்டியல் வசூல் ரூ.1.45 கோடியை தாண்டியது
ஜனவரி 07,2009,00:00 IST
பழநி:பழநி கோயில் உண்டியல் வசூல் 24 நாட்களில் ரூ.1 கோடியே 45 லட்சத்தை எட்டியது. 21 ஆயிரத்து 388 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. உண்டியல் வசூல் வருமாறு.
ரொக்கம் ரூ.1 கோடியே 44 லட்சத்து 91 ஆயிரம். தங்கம் ஆயிரத்து 212 கிராம். வெள்ளி 21 ஆயிரத்து 388 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள் 710. தங்கத்தால் ஆன வேல், செயின், மாங்கல்யம், நாகம், நாணயங்கள், வெள்ளியால் ஆன வேல், ஆள்ரூபம், நாணயங்கள், வீடு, உடல் உறுப்புக்கள் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது. ஒரு கிலோ எடையுள்ள வெள்ளியால் ஆன பாதம், அரை கிலோ எடையுள்ள வெள்ளி தட்டு, ஒரு கிலோ எடையுள்ள வெள்ளியால் ஆன சேவற்கொடியை முருக பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த உண்டியல் வசூலை விட இந்த ஆண்டு ரூ.25 லட்சம் அதிகமாக கிடைத்துள்ளது. நவதானிய உண்டியல்களில் 4 ஆயிரத்து 450 கிராம் எடையுள்ள நெல் மற்றும் பித்தளையால் ஆன மணி, பாத்திரங்கள், வேல் மற்றும் பரிவட்டங்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேற்கண்ட உண்டியல் வசூல் 24 நாட்களில் கிடைத்ததாகும்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Wednesday, January 7, 2009
பழநி உண்டியல் வசூல் ரூ.1.45 கோடியை தாண்டியது: தினமலர்
Posted by
Arul
at
Wednesday, January 07, 2009


No comments:
Post a Comment