Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 9, 2009

நல்ல நூல்களை தேடி எடுத்து படியுங்கள்: கலாம் அறிவுரை: தினமலர்

நல்ல நூல்களை தேடி எடுத்து படியுங்கள்: கலாம் அறிவுரை: தினமலர்: "நல்ல நூல்களை தேடி எடுத்து படியுங்கள்: கலாம் அறிவுரை

ஜனவரி 09,2009,00:00 IST

சென்னை: ''நல்ல நூல்கள் எங்கிருந்தாலும் அவற்றை தேடி எடுத்து படியுங்கள்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுறுத்தியுள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் சென்னை 32வது புத்தகக் கண்காட்சி விழா நேற்று துவங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் இந்த புத்தகக் கண்காட்சி நடக்கிறது. புத்தகக் கண்காட்சியை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்து விருதுகளை வழங்கிப் பேசுவதாக இருந்தது. ஆனால், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் நேரில் வரவில்லை. அதற்கு பதில் தனது கைப்பட வாழ்த்து செய்தி வழங்கியிருந்தார்.


அப்துல் கலாம் தனது வாழ்த்துச் செய்தியில், 'நல்ல புத்தகங்கள் நல்ல கற்பனை சக்தியை கொடுக்கும்; நல்ல கற்பனை சக்தி சிந்திக்கும் திறனை வளர்க்கும்; நல் சிந்தனை சிறந்த அறிவை பெருக்கும்; சிறந்த அறிவே நம்மை மேம்பட வைக்கும். எனது வாழ்விலும் திருக்குறள் உள்ளிட்ட மூன்று புத்தகங்கள் என்னை வழிநடத்திச் செல்கின்றன. எனவே, நல்ல புத்தகங்களை தேடி எடுத்துப் படியுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.


மேயர் சுப்ரமணியன் மதுரையில் இருப்பதால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. துவக்க விழாவில், காந்தி கண்ணதாசன் வரவேற்றார். ஜவுளி வர்த்தகர் நல்லிகுப்புசாமி செட்டி கண்காட்சியினை துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். 2009ம் ஆண்டுக்கான கருணாநிதி பொற்கிழி விருதுகள் பழனிச்சாமி, முத்துசாமி ஆகிய தமிழ் எழுத்தாளர்களுக்கும், கிரிஷ் கர்னாட், சுப்பையா முத்தையா ஆகிய பிறமொழி எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டது. வரும் 18ம் தேதி வரை 10 நாட்கள் வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இதற்கென 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


இங்கு பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சமயம், கலை, இலக்கியம், வரலாறு, சமூகம், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகம், ஆராய்ச்சி, ஆன்மிகம், சிற்பவியல், நுட்பவியல், அறிவியல், கட்டுரைகள் என பல்வேறு வகைப்பட்ட நூல்கள் இடம் பிடித்துள்ளன. புதிய எழுத்தாளர்கள் முதல் பழைய எழுத்தாளர்கள் வரை, ஏராளமான நூல் ஆசிரியர்களின் நூல்கள் இடம் பெற்றுள்ளன."

No comments: