Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Wednesday, January 7, 2009

லாரிகள் போராட்டம் தொடர்கிறது: பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிப்பு: தினமலர்

லாரிகள் போராட்டம் தொடர்கிறது: பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிப்பு: தினமலர்: "லாரிகள் போராட்டம் தொடர்கிறது: பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிப்பு

ஜனவரி 07,2009,00:00 IST

புதுடில்லி: மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தபோதும், லாரி ஸ்டிரைக் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.'டீசல் விலையை குறைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு நாட்களாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 50 லட்சம் லாரிகள் ஓடவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.


இந்நிலையில், 'ஸ்டிரைக் நீடித்தால் லாரிகளின் பெர்மிட் ரத்து செய்யப்படும்' என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. சேவை வரியில் சில விலக்குகளை அளிக்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளையும் மீறி, நேற்று இரண்டாவது நாளாக லாரி ஸ்டிரைக் தொடர்ந்தது. நாடு முழுவதும் லாரிகள் ஓடவில்லை. மும்பை, டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கலாம் என்ற பீதி, நுகர்வோரிடையே எழுந்துள்ளது.காஸ் லாரிகளும் ஸ்டிரைக்: மும்பை சரக்கு போக்குவரத்து சங்க பொதுச் செயலர் கிரிஷ் அகர்வால் கூறியதாவது:


மத்திய அரசு எங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கும் வரை, ஸ்டிரைக் நீடிக்கும். காஸ் மற்றும் எண்ணெய் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள லாரிகளும் எங்களுடன் ஸ்டிரைக்கில் இணைந்துள்ளன. இதன் மூலம் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. தேவைப்பட்டால் எங்கள் பெர்மிட்டை அரசிடம் சரண்டர் செய்யவும் தயாராக உள்ளோம். லாரி போக்குவரத்து தொழிலை நம்பி 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதை அரசு உணர வேண்டும்.இவ்வாறு கிரிஷ் அகர்வால் கூறினார்.


அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சரண் சிங் கூறுகையில், 'நாடுதழுவிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. எங்கள் கோரிக் கை நிறைவேறும் வரை போராட் டம் தொடரும்' என்றார்.


நாமக்கல்லில் 6 கோடி முட்டை தேக்கம்: டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நடக்கும் லாரி ஸ்டிரைக் கால், நாமக்கல்லில் ஆறு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இன்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் முட்டை லாரிகளை இயக்க கோழிப் பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட கோழிப் பண் ணைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் மூன்று கோடி முட்டை உற்பத்தியாகிறது. 80 லட்சம் முட்டை கேரளாவிற்கும், 80 லட்சம் முட்டை தமிழகம் முழுவதும் உள்ளூர் விற்பனைக்கும், 70 லட்சம் முட்டைகள் சத்துணவு திட்டத்திற்கும், 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டை வர்த்தகத்தில் மட்டும் மொத்தம் 1,500 லாரிகள் மற்றும் கன்டெய் னர் லாரிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரொலியாக முட்டை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஆங் காங்கே நிறுத்தப் பட்டுள்ளன.


அதனால், இரு தினங்களில் ஆறு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் நல்லதம்பி கூறுகையில், ''அகில இந்திய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இரு தினங்கள் ஆதரவு தெரிவித்திருந்தோம். இன்று முதல் முட்டைகள் அனைத்து இடங்களிலிருந்தும் கொண்டு செல்லப்படும்.''வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் முட்டை கொண்டு செல்லும் போது பிரச்னை நேராமல் இருப்பதற்காக, போலீஸ் பாதுகாப்புடன் முட்டை அனுப்பப்படும்,'' என்றார்."

No comments: