'இஸ்ரோ' படைக்கிறது சாதனை: தினமலர்: "'இஸ்ரோ' படைக்கிறது சாதனை
ஜனவரி 07,2009,00:00 IST
பெங்களூரு:இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ), இவ்வாண்டில் வெளிநாடு களைச் சேர்ந்த நான்கு செயற்கைக் கோள் களை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்துகிறது.இஸ்ரோ மூலம் வர்த்தக ரீதியாக உருவாக்கப்பட்ட டபிள்யூ2எம் என்ற செயற்கைக்கோள், ஐரோப்பாவின் இ.ஏ.டி.எஸ்.,- ஆஸ் டிரியம் நிறுவனத்தின் மூலம், பிரஞ்ச் கயானாவின் கொருவில் உள்ள கயானா விண்வெளி மையத்தில் இருந்து வர்த்தக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக் கோள், பாரிஸ் நகரை அடிப்படையாக கொண்டு சர்வதேச தொலை தொடர்புக்கு உதவக்கூடியது. இந்த செயற்கைக் கோளின் எடை, விண்ணில் ஏவப்படும் போது 3,463 கிலோ. இது 15 ஆண்டுகள் பயன் படக் கூடியது. இதில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் 7,000 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடியது.தற்போது, சிங்கப் பூர், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் அல்ஜீரியா நாடுகளைச் சேர்ந்த சிறிய செயற்கை கோள்களை, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் வர்த்தக ரீதியாக இவ்வாண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
செயற்கைக் கோள் களை விண்ணில் ஏவுவதற்கு வர்த்தக ரீதியாக இஸ்ரோ கட்டணம் நிர்ணயித்துள்ளது. செயற்கைக் கோள் களின் ஒவ்வொரு கிலோவுக்கும், 1.25 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மற்ற சர்வதேச நிறுவனங்களை ஒப்பிடுகை யில் இந்த கட்டணம் மிகவும் குறைவு. இதன் மூலம் சர்வதேச நிறுவனங்ளுடன் இஸ்ரோ போட்டி போடும் நிலையும் உருவாகி உள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Wednesday, January 7, 2009
'இஸ்ரோ' படைக்கிறது சாதனை: தினமலர்
Posted by
Arul
at
Wednesday, January 07, 2009


No comments:
Post a Comment