மண்ணில் கிடைத்த பெருமாள் கோவில்: தினமலர்: "மண்ணில் கிடைத்த பெருமாள் கோவில்
ஜனவரி 05,2009,00:00 IST
விழுப்புரம் : மன்னர்களால் கட்டப்பட்ட ஏராளமான கோவில்களில் பல, அன்னிய படையெடுப்புகளால் இடிக்கப்பட்டன. மன்னர் காலத்திற்கு பின், பல கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் மண்ணோடு மண்ணாகி விட்டன. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ளது எலவனாசூர் கோட்டை.
இங்கு, சிவன் கோவில் எதிரே வானவன் மாதேவி பெருமாள் கோவில், ராஜநாராயண விண்ணகர் பெருமாள் கோவில் என இரண்டு கோவில்கள் உள்ளன. கி.பி.970ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோவில்கள் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து காணப்பட்டன. இவற்றை சீரமைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் கடக்கால் தோண்டும் போது, பூமிக்கு அடியில் புதையுண்ட நிலையில் பழமையான பெருமாள் கோவில் இருந்தது தெரிய வந்தது. தற்போது, அந்த பழமையான கோவிலை மீட்கும் பணி துவக்கப்பட்டுள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, January 5, 2009
மண்ணில் கிடைத்த பெருமாள் கோவில்: தினமலர்
Posted by
Arul
at
Monday, January 05, 2009


No comments:
Post a Comment